புதன், 27 செப்டம்பர், 2023

ஏகபாதம்

 மாதா தனமுண்ணா மானேர் மறையா மாதா தனமுண்ணா மானேர் மறையா மாதா தனமுண்ணா மானேர் மறையா மாதா தனமுண்ணா மானேர் மறையா #கலிவிருத்தம் 

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

மாலைமாற்று

 

மாவா தாழிகா காழிதா வாமா நீவா தூழிபாம் பாழிதூ வாநீ சாவா தேகவீ வீகதே வாசா மேவா தேதுபோம் போதுதே வாமே - கலிவிருத்தம்
 
மா வாது ( போர்- பாரதம்) அதில் ஆழியை ( சக்கராயுதம்) ஏந்திக் காத்தவனே எமக்கு உறுதி( காழி) தா அழகா ( வாமா) நீவாது ஊழி ( நீங்காது பல ஊழி வரினும்) பாம்புப் படுக்கையில் பாற்கடலில் (ஆழியில்) உள்ளத் தூயப் பாதை நீ ( தூ ஆ நீ )
 
சாவாது ஏக ( உனை ) ஈ ( எமக்கு அருள்க ) வீ கதே வாசா ( விரும்பத்தக்க உயர்ந்த கதியான வைகுண்டம் உறைவோனே) மேவாது ( உன்னுடன் பொருந்தாது) ஏது ( செல்வம் ) போம் ஏனென்றால் நீ போது தே ( பூ போன்ற இலக்குமியின் தேவன் ) வாமே ( அல்லவோ)
 
படம்   

மாலைமாற்று

தான வகுல விநாசக சாகச நாவி லகுவன தா -வெண்பா
 
தானவ குல விநாசகனே , சாகசனே (முருகா) எனது பேச்சு லேசாகவும் அழகாகவும் செய்வாயாக "நா இலகு வன (அழகு) தா"
 
படம் 

மாலைமாற்று

 கரும வசவா கலவி விலக வாசவ மருக வருக வருடா தொலைவ வலைதொ டாருவ கருவ மருத சைலவா சதப பதச வாலசை தரும வருதி யகதீ திறவ வறதி தீகய திருவ - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

கரும வச ஆ கலவி விலக வாசவ மருக அருக அருள்தா தொலைவ வலைதொடு ஆருவ கருவ மருதசைல வாச தபபத சவால் அசை தரும வருதி அகதீ திறவ அறதி தீ கய திருவ 

கரும வினைகளால் ஏற்படும் பந்தங்கள் பாசங்கள் விலக வாசகன் மருகனான ( முருகா) அருக ( மிக அருகில் இருப்பவனே எமதகத்துள்) அருள் தருவாயாக தொலைவ( உன்னை உணராதோர்க்குத் தொலைவிலும் தொலைவானவனே) வலை தொடு ( சூழ்ச்சிகள் ஏவும் மாயைக்கும் ) ஆர் உவ கருவ

 ( உயர்ந்த களிப்பிலென்றும் திளைப்பவனே , கருவூலமாக இருப்பவனே) மருத மலை வாசனே தவசிகளுக் குயர்பதமாக விளங்குபவனே மனதில் எழும் வினாக்களுக்குப் பிரகாசமாக விளங்கும் தரும சொரூபனே வருவாயாக எமது அகத்தில் உள்ள தீமைகளை நன்று களைக ( திறவ அறதி) அக்கினியால் சரவணப் பொய்கையில் உதித்த மங்களகரமானவனே

படம் 

   

மாலைமாற்று

வேழவா தாசிவா வாசிதா வாழவே காழிவா சேனையா யானைசே வாழிகா நாழிகா வாதவா வாதவா காழிநா தாழவே வேதமோ மோதவே வேழதா 

 கலிவிருத்தம் 

மாலைமாற்று

 மாவா தைவர்கா வாழியா விகலறு தேவா வாதே றுலகவி யாழி வாகார் வதைவாமா

குறள்வெண்செந்துறை 

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...