ஞாயிறு, 31 டிசம்பர், 2023

வல்லானை கொன்றானை

 

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை நன்றேத்த நில்லாமல் - வில்லானின்
கல்லாமை நீக்கிநின்று காத்தானைப் பாற்கடலிற்
கல்லாமை யென்றன்று நின்றானை - நல்லார்க்கு
நல்லானைக் குட்டத்துள் பொல்லா முதலைபிடி
நல்லானை காத்தானை நன்முனிவ னில்லாளைக்
கல்லாளைப் பாதத்தாற் காத்தானைச் சொல்லாத
கல்லாரைக் காணாவே கண்

சொன்ன வண்ணம் செய்த பெருமாள்

 

மன்னனென்ற வெண்ணமோங்கி யன்பரைய தட்டவே
இன்னதென்று பத்தனுன்னை யிட்டமாயி யம்பிட
சொன்னவண்ண மன்றுசெய்த சுந்தராசு தந்திரா
மன்னிநின்று கச்சிகாக்கு மந்திலாத வள்ளலே

 

வியாழன், 28 டிசம்பர், 2023

கோதை ஏகபாதம்

 

கோதை யளித்திடு மாலை யுவந்தான் குணமொழிந்தே
கோதை யளித்திடு மாலை யுவந்தான் குணமொழிந்தே
கோதை யளித்திடு மாலை யுவந்தான் குணமொழிந்தே
கோதை யளித்திடு மாலை யுவந்தான் குணமொழிந்தே

புதன், 27 டிசம்பர், 2023

சிசுபால வதம்

 

நூறுமுறை யேசிடவே நூறநின்றான் கண்ணனிடம்
வேறுகதி இல்லாமல் பூவுலகம் வந்தவனும்
கூறுசெயுஞ் சக்கரமும் கோனவனி னளியன்றோ
மாறுநிலை யேதுமிலா வைகுந்த மடைவதற்கே

நடராஜர் சிந்து

ஆடவல்லா னாட்டமன்றோ அகிலமெல்லாங் காத்துநிற்கும் - அவனைத் தேடவல்லார் தேர்ந்தெடுத்த செகத்துரையுஞ் செப்புரையை நாடவல்லார் நாட்டமுற்று நலம்பெறுவர் வாழ்வதனில் - இதைப் பாடவல்லார் பேறுபெற்றார் பணிமதியான் பதம்பணிந்தே

 #சிந்து

கந்தர் சந்த வெண்பா

 சொந்தமென பந்தமென எந்தைகுக கந்தனையே புந்திநிறை சிந்தையுற முந்திவரும் - சந்தமுறை செந்தமிழி னந்திமக வந்தனைக ளிந்தமுது விந்தையுற சந்ததமு நன்று

நவராத்திரி அந்தாதி (ஒன்பதிர வீறுமுதலி)

காப்பு — நேரிசை வெண்பா முப்பெருந் தேவியர் முன்னின் றருள்புரியுஞ்  செப்பரிய வொன்பதிநாட் சீருரைக்கக் - கொப்பூழ்மே  னான்முகனைத் தான்படைத்த நாரண...