கண்ணிலே பிறந்துவந் தடங்குகின்ற காட்சிபோல்
மண்ணிலே பிறந்திருந் தடங்குகின்ற வாழ்க்கைபோல்
பண்ணுளே யிருந்துயர்ந் தடங்குகின்ற பாட்டைப்போ
லெண்ணிலா பிறந்திருந் தடங்குமுன்னு ளீசனே
புதன், 31 ஜூலை, 2024
கண்ணிலே பிறந்து கலி விருத்தம்
செவ்வாய், 30 ஜூலை, 2024
சீறுமாறு கலி விருத்தம்
சீறுமாறு மாறுமாறு சீருதித்த நாதனை
யாறுமாற வன்புலாவ வாகமாவி யாழவே
கூறுமாறு வேதமோத கூற்றொடுங்கக் கூடுமே
யீறுமாறு வானுலாவ வேகமூர்த்தி கையிலே
ஆடி அழல் மீன் கலித்துறை
ஆடி யழன்மீ னறுமாதர் பாலூட்ட வான்றபுக
ழாடி யவனியை யாட்டு மமையப்ப ரீன்றதின
மாடி மயின்மேல் வரும்வடி வேலா வரத்தருவே
வாடி வதங்கிடு மன்பர் வளர வகுத்தருளே
திங்கள், 29 ஜூலை, 2024
ஆடிக் கிருத்திகை வெண்பா
ஆடிக் கிருத்திகைக் காலயஞ் சென்றுவர
வாடித் துகளாகும் வாட்டமெலாம் - பாடுபுகழ்
நான்முகன் கையெழுத்தை நாதர்க் கழித்தருளு
மான்மருக னன்களிப்பான் வாழ்வு
#வெண்பா
பிறைசூடி பார்ப்பதி வெண்பா
பிறைசூடி பார்ப்பதி பிள்ளை ப்ரணவ
முறையோது மூப்பின் முருகா - குறைவாடும்
பேடி திருந்தப் புகழ்பாடும் பேறளி
யாடிக் கிருத்திகை யன்று
#வெண்பா
ஞாயிறு, 28 ஜூலை, 2024
மாற்றுதித்த மாருதி கலி விருத்தம்
மாற்றுதித்த மாருதியு மதுரபாடைச் செப்பிடக்
கூற்றொடுங்க முடிவெடுத்த குணவதியுங் கேட்டெழத்
தேற்றளித்த ராமன்விரன் மோதிரத்தைப் பெற்றபின்
மாற்றளித்த மாமணிக்கு வையமேழு மீடதோ
#கலிவிருத்தம்
பார்மகள் மீட்க கட்டளைக் கலித்துறை
பார்மகண் மீட்கப் பழமறை காக்கப் பொதிமலிந்த
பார்மகண் மீட்கப் பகைவரை வீழ்த்தப் பிரிந்ததிரு
பார்மகண் மீட்கப் பழவரை தாங்கப் பிறப்பெடுத்த
தார்மகன் கேட்கத் தமிழ்மறை செல்லுந் தலையெனவே
எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...
-
மாதேவு வேடா மலர்மதி யாறாளா வாதேவு வேலை மலைவில்லா -தீதேகா சத்திநாதா வையாறா சங்கத் தமிழ்வேந்தே முத்திநாதா மூன்றுதமிழ் தா