திருப்பாவை சீய ரொருபாவை யெண்ணி
யிருப்பாவை பின்னை யெனவே - சிறுப்பாவை
தாளிற் சிரந்தாழ்ந்த வுந்து மதகளிற்ற
னாளு நவின்றுய்வோ நாம்
திங்கள், 30 செப்டம்பர், 2024
திருப்பாவை ஜீயர் வெண்பா
உடையவர் வெண்பா
உடையவர் பாதை யுடையவர் பாத
முடையவர் பெற்றா ருயர்வு - தடையவர்க்
கில்லை திருவவர் கொள்ளை திரும்பாரே
தொல்லை யிருமைமய வாழ்வு
#வெண்பா
ஞாயிறு, 29 செப்டம்பர், 2024
வேறானை கட்டளைக் கலித்துறை
வேறானை யொன்ற விழுப்பொரு ணன்று விளங்கிடுமோ
வேறானை யொன்ற விழுப்பொரு ணன்று விளங்கிடுமே
வேறானை யொன்ற விழுப்பொரு ணன்று விளங்கிடுமோ
வேறானை யொன்ற விழுப்பொரு ணன்று விளங்கிடுமே
சனி, 28 செப்டம்பர், 2024
ஔவை வேலனை அழைக்கும் விருத்தம்
1.
வென்றுலாவ மயிலுமில்லை வேகமாள வழியிலை
யென்றபோதுங் குன்றிருந்து பெற்றவம்மை
யப்பரை
நின்றுலாவ லோகமேழு நீக்கமின்றி சுற்றிய
வுன்றனண்ண னென்பதாலே வோங்குபுத்தி யுள்ளதே
வியாழன், 26 செப்டம்பர், 2024
சொன்ன சொல்லை கலி விருத்தம்
சொன்னசொல்லைக் காக்கபத்தர் சொந்தசொல்லைப் பொய்த்தனை
சொன்னசொல்லைக் காத்தபத்தர் சொன்னசொல்லைக் கேட்டனை
சொன்னசொல்லைக் காத்தபத்தர் சொன்னசொல்லு மானநீ
சொன்னசொல்லைக் காத்த(ர்)பத்தர் சொன்னசொல்லா யென்றுமே
குகேசன் வெண்பா
குகேசன் பிரக்ஞையா லானந்தக் கூத்தன்
மகேசன் அருள ருசுனன் - சகாப்தம்
விதித்த அரியணை இந்தியா ஏற
பதித்த சிறீநாதன் பாங்கு
அம்மையப்பார் விருத்தம்
அம்மையப்பர் சேவைதன்னி லாழ்ந்தபுண்ட ரீகனை
வந்தடைந்து வாசனின்று மானுடர்போல் வேடமிட்
டம்மையப்பர் சேவைவேண்ட காத்திருக்கச் சொல்லிதன்
செம்மையுற்ற வீன்றபெற்றோர் பக்திசேவை செய்தபின்
றம்மையண்டிச் சேவைவேண்டிக் காத்திருந்த மாந்தரைத்
தங்கள்வேண்டு தேவையெண்ணி கேட்டமைந்த னின்புற
மும்மையாளு மம்மையைப்பர் நாங்களென்று ரைத்தவு
ருப்பிணிச்ச மேதனின்ற விட்டலாளு மூரிதே
எண்சீர் விருத்தம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...
-
மாதேவு வேடா மலர்மதி யாறாளா வாதேவு வேலை மலைவில்லா -தீதேகா சத்திநாதா வையாறா சங்கத் தமிழ்வேந்தே முத்திநாதா மூன்றுதமிழ் தா