வேலீமாதா மாமாயா காரீசீதா காமாயீ
யீமா கா தாசீ ரீகா யாமாமாதா மாலீவே
புதன், 30 ஏப்ரல், 2025
செவ்வாய், 29 ஏப்ரல், 2025
பிறைகொண்ட விருத்தம்
பிறைகொண்ட செஞ்சடையார் பங்கானாய்ப்
பிழைகொண்ட பிதாதரு வுடனீத்தாய்
நிறைகொண்ட நாரணர்க் கிளையானாய்
நினைவேண்டு மன்பர்க்கு நிலையானாய்த்
திறைகொண்ட புதல்வர்க்குப் பொலிவீந்தாய்த்
திரைகொண்ட வேறந்த தாயானாய்க்
குறைகண்ட வுயிர்கட்குத் திரையானாய்க்
குடிகொண் டெமையாளும் பகவதியே
துகளென்று வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
துகளென் றிருந்துஞ் சுடர்வேல னம்மை
யகலா திருப்பா னணைத்துச் - சிகியேறு
சண்முக னன்பின் றலைவடிவ னாறதோ
பெண்முகங் கொண்ட பிரான்
ஞாயிறு, 27 ஏப்ரல், 2025
விண்டிறக்க கலி விருத்தம்
விண்டிறக்க வேண்டிநிற்க வீணரென்று தூற்றுவார் விண்டிறக்க சமயந்தன்னை வேறுவேறு கூவுவார் கண்டிறக்க மாந்தநேய மென்பதென்ன வாகுமோ கண்டிறக்க வேண்டுமின்று கடினமான நேரமே
ஆறுமொன்ற கலி விருத்தம்
ஆறுமொன்ற வணைத்தவுந்த வன்னைதந்த வருளையு நூறுமொன்று நூறநின்ற நாரணன்ற னழகையு நீறணிந்து நட்டமாடு நீலகண்ட னறிவையுங் கூறணிந்த கந்தநாதன் கோதினாமங் கூறுமே
பரியேழும் வெண்பா
பரியேழும் பூட்டு பரிதியினைப் பார்க்க
விருளாழு மிவ்வுல கேழும் - வரம்பெறுமாம்
ஞாலத் தொளியாளு ஞானத் தொளியாளும்
வேலைக்கண் வெய்யோ னுதித்து
எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...
-
மாதேவு வேடா மலர்மதி யாறாளா வாதேவு வேலை மலைவில்லா -தீதேகா சத்திநாதா வையாறா சங்கத் தமிழ்வேந்தே முத்திநாதா மூன்றுதமிழ் தா