செவ்வாய், 30 செப்டம்பர், 2025

எங்கும் கலிவிருத்தம் செவ்வாயிற் செவ்வேள்

 எங்கு நிறையிறைவா வெங்கண் மனத்துறைவா

தங்கு மறிவளிவா தந்தி முகற்கிளையா
சங்கத் தமிழ்முதல்வா சங்கை தவிர்த்திடவா
கங்கை நதிப்புதல்வா கந்தா கவியரசே

சதுரங்க கலி விருத்தம்

சதுரங்க ராணி சமர்வெற்றி ஈவாள்

கதியென்றும் ஈயும் கணைவிழிகள் எங்கே

மதியென்றும் மேவும் மனையாளே உன்னை

விதியென்ற வேடன் மறைத்தானே கண்ணே


சனி, 27 செப்டம்பர், 2025

பற்றாசை

 பற்றாசை விட்டதோ பண்டத்தின் மீதென்றுங்

குற்றேவல் செய்தேனுங் கூத்தாடி நின்றேனுஞ்
சற்றுஞ் சுவைகுறையாச் சிற்றுண்டி யுண்போமே
கற்றோசை சாம்பார் கலந்து

வியாழன், 25 செப்டம்பர், 2025

யமனில் தொடங்கி சிவனில் ஈறும் வெண்பா

யமன்றீண்டு பால னிமைப்பொழிதிற் காக்க

யமன்மாயக் காலா லுதைத்தான் - றமர்க்காக்க

யாதுங் கொடுக்கு மிணையிலா மாதேவன்

மாதொரு பாகன் சிவன் 


செவ்வாய், 23 செப்டம்பர், 2025

அழகின் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 அழகி னிலக்கண மாறுமுக னாவாற்

பழகு மிலக்கணம் பாங்கன் விழுப்புகழ்
செந்தமிழ்ச் சேயோன் சிறப்பை விரித்திட
வுந்தே யிலக்கண வூற்று

திங்கள், 22 செப்டம்பர், 2025

பழையவேந்து தரவு கொச்சகக் கலிப்பா

 பழையவேந்து நெடியனாம் பரமனேந்து கொடியனே

கழுகுவேட மளிதருங் கருணைமேவு கருடனே
வழமையாக விழிகொளா விடமிழிந்து மகிழ்வனே
விழவுமேவு பருவமா லடியர்க்காண வந்தையோ!

சனி, 20 செப்டம்பர், 2025

பத்திர மேற்றுயில் பாலகன் விருத்தம்

 பத்திர மேற்றுயில் பாலகன்

பத்திர மேற்றுயர் பாலகன்


சத்திர மேற்றுயர் பாலகன்
புத்திரி யேற்றுயர் பாலகன்

அத்திர மேற்றொரு பாலகன்
அத்திர மேற்றொரு பாலகன்
நித்தமு மேத்திரு பாலகன்
மொத்தமு மேற்றுயர் கொள்வனே

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...