ஆடு மயிலம ராறு முகன்றனை
நாடும் வரமெனக் கருள்வாயே
ஆதி சிவனுமை ஆரத் தழுவிய
சேயி னருள்பெறக் கடவேனோ
ஆடு மயிலம ராறு முகன்றனை
நாடும் வரமெனக் கருள்வாயே
ஆதி சிவனுமை ஆரத் தழுவிய
சேயி னருள்பெறக் கடவேனோ
பாரமர பாரமற பாதையுற பாமரர்கள் பாரமற பாராளும் பாங்குறவே - பாராளும் பாரமரர் பாரதப் பாரமரில் பாரமறப் பாரமர பாருதித்தாய்ப் பார்த்து
இருமடந்தை இணைந்திருக்க இலங்கொளியாய் நிற்பவன் திருமலையி லெழுந்தருளுந் திருவடியார் தற்பரன் செருவிருந்து செகுத்தெறிந்து செகந்தனையும் காப்பவன் அருமருந்து அலையமர்ந்த அமரர்குல வேந்தனே -தரவு கொச்சகக் #கலிப்பா
காப்பு :-
முகமா றுடையான் நுதற்கண் புதல்வன் முருகுருவ முகமா றுடையான் மொழியான் மொழிய உளத்தமர்ந்து முகமா றுடையான் முதற்கண் தொழுது வினையகற்றி முகமா றுடையான் மருகன் புகழை உரமளியே

மலைவில்லா வாழி மதிகதி ராம வனிப்பதிக்கே
மலைவில்லா வாழி மதிகதி ராம வனிப்பதிக்கே
மலைவில்லா வாழி மதிகதி ராம வனிப்பதிக்கே
மலைவில்லா வாழி மதிகதி ராம வனிப்பதிக்கே
கட்டளைக்கலித்துறை ஏகபாதம்
பரதனாள தரணியாவும் விரதமாள புனிதனைப்
பணியுமாறு மணியமான பரிவலாத வனையென
வரதனாரு வனமுமேவ கரடுமேடு பாதையின்
மலரதான பதமுநோவ வரசதாள பாதுகை
மரமதாக மருவிமேவு மசைவிலாத வகமுள
மதியிலாத விதிசொலாலே மனதுவேக வுயிரினை
இரதனாரு மகலுமாறு விதியிராத வேழையா
யிசையிலாத நடனமாக விழிவதானே னானுமே
-எண்சீர் ஆசிரிய விருத்தம்
காப்பு — நேரிசை வெண்பா முப்பெருந் தேவியர் முன்னின் றருள்புரியுஞ் செப்பரிய வொன்பதிநாட் சீருரைக்கக் - கொப்பூழ்மே னான்முகனைத் தான்படைத்த நாரண...