அஞ்னையு மஞ்சுனையு மன்னையாஞ் சுந்தரன் செஞ்சடை யீசன் சிறுதுளியாம் - தஞ்சமென்று வந்தார்க் கடைக்கலம் வாலத் திறைவனைக் கந்த னனுமனாய்க் காண்
அஞ்னையு மஞ்சுனையு மன்னையாஞ் சுந்தரன் செஞ்சடை யீசன் சிறுதுளியாம் - தஞ்சமென்று வந்தார்க் கடைக்கலம் வாலத் திறைவனைக் கந்த னனுமனாய்க் காண்
ஆலமுண்ட நாதனி னம்சமாக வந்தவன்
ஞாலமுண்ட நாதனி னற்பணிகட் செய்யவே
பாலமொன்று தேவையோ பங்கயனின் சீடனே
வாலமொன்று போதுமே தென்னிலங்கை தீயவே
வஞ்சகத்தின் மேகநாதன் மாயசால மேவிய
நஞ்சுமிழ்ந்த வம்புதாக்கி நித்திரையை வென்றவன்
அஞ்சுமாறு வீழ்ந்திருக்க அஞ்சிலின்றி வேகமாய்
அங்கமேவு நஞ்சகற்ற அருமருந்தைத் தேடியே
சஞ்சிவினி மலைபெயர்த்துச் சடுதியிலே சேர்த்தவன்
நஞ்சிவனி னம்சமன்றோ நஞ்சறுக்க வல்லவன்
அஞ்சனையின் றவப்புதல்வ னன்புடைத்த சேவகன்
சஞ்சலங்கட் போக்குவானே நாதனாம மோதியே
பழமுதிர்ச் சோலை பழமுதிர்ச் சோலை
யழகனைக் காண வழகனை காண
விழிவழித் தேட விழிவழித் தேட
வழிவழிப் பேறே வழிவழிப் பேறே
கலிவிருத்தம்
மேலவா வாலவா வாலவா வாலமே
நாலவா வாழவா வாழவா வாலநா
நீலவா வாளவா வாளவா வாலநீ
காலவா வேழவா வாழவே வாலகா
மாலைமாற்று கலிவிருத்தம்
மாதவா மாலவா வாலமா வாதமா
மாதவா மாலவா வாலமா வாதமா
மாதவா மாலவா வாலமா வாதமா
மாதவா மாலவா வாலமா வாதமா
மாதவா மாலவா வாலமா வாதமா
மாதவா மாலவா வாலமா வாதமா
மாதவா மாலவா வாலமா வாதமா
மாதவா மாலவா வாலமா வாதமா
அஞ்சுமாறு மெட்டுமே வந்துவந்த வாழ்விலே
அஞ்சுமாறு மெட்டுமே வந்துவந்து வாழவே வருவாளே
அஞ்சுமாறு மெட்டுமே வந்துவந்த வாழ்விலே
அஞ்சுமாறு மெட்டுமே வந்துவந்து வாழவே வரமாக
அஞ்சுமாறு மெட்டுமே வந்துவந்த வாழ்விலே
அஞ்சுமாறு மெட்டுமே வந்துவந்து வாழவே தருவாயே
அஞ்சுமாறு மெட்டுமே வந்துவந்த வாழ்விலே
அஞ்சுமாறு மெட்டுமே வந்துவந்து வாழவே பெருமாளே
9 சீர் ஆசிரிய விருத்தம்
காப்பு — நேரிசை வெண்பா முப்பெருந் தேவியர் முன்னின் றருள்புரியுஞ் செப்பரிய வொன்பதிநாட் சீருரைக்கக் - கொப்பூழ்மே னான்முகனைத் தான்படைத்த நாரண...