திங்கள், 6 மே, 2024

கரவேன் மறவேன் வெண்பா

கரவேன் மறவேன் கடம்பா வுனது சிரமா றழகுஞ் சிகைமா மயிலுஞ் சுரவே தனைதீர் துதிமா துணிவு மரமா வடக்கு மகத்து #வெண்பா

இன்றமிழ் வேலவன் வெண்பா

தினையரசி தெய்வானை சேர்ந்திருக்குந் தேவ வினையகற்றும் வேழமுகன் வேண்டு - மினியகனி யீசனுமை யீய விடம்பெயர்ந்த வின்றமிழி னேசவுனை நேர்ந்துரைப்பே ணீண்டு #வெண்பா

வெள்ளி, 3 மே, 2024

குருவாரக் குமரன் வெண்பா

குருவாரஞ் சென்று குருபரனைக் காணத் தருவானா ஞானந் தருவாய்ச் - செருநாதன் மஞ்ச ளலங்கார மங்கலந் தான்றருமே சஞ்சலஞ் சாரா தகம் #வெண்பா

ஆசிரியப்பா

மாற்றான் றார மாண்பி றிருட
கூற்றாங் கருணைக் கடலுந் தேற்றா
வறமில் கல்வி யணுத்துணை
திறமில் லாயினுந் திருவரு ணாடே
#ஆசிரியப்பா 

திருமகள் வெண்பா

திருவின்றி மாலில்லை தேர்ந்துரைப்பர் ஞானி
திருவின்றி வாழ்வில்லை சிற்றுந் - திருவின்றி
வீடில்லை மேற்றவ மேற்கொண்டுங் காக்கவெமை
யீடில்லை யாரு மிவட்கு
#வெண்பா 

புதன், 1 மே, 2024

கந்தன் கலி விருத்தம்

தருககுருபர வருகவறுமுக வுருக வெருகணிவார் செருகநிசிசரர் தருகவிடுதலை மருக திருவணிவார் கருகரதிபதி பொருதசுரரணி யுருக விருவிசும்பா ருருகவருமன மிருகவிழிமன மரிக வருகிருந்தே #கலிவிருத்தம்

வேலன் விருத்தம்

 

மறைந்திருந்து வானரத்  தழித்தவேத நாயகன்

மனங்கவர்ந்து மாதரை மயக்குமாயர் காவலன் 

கரந்துவந்து மாவலிக்  களித்தபாத வாமனன்                           மருகோனே

 

உறைந்துநின்ற வானவர்  கலைக்கவெண்ணி   யாடவம் 

மறைந்துநின்று மாரனை மலர்க்கணைக ளேவியே

சினந்தெழுந்து தீவிழித்  தெரித்தகாம  னீசனார்                           தவபாலா

 

மறைந்ததிங்க ணாளிலே மகற்சொலுக்கி ணங்கவே

யணிந்ததோடை வானிலே யளித்துவந்த  வார்நிலா

நிறைந்தவான மாகவே வணங்குதேவ தேவியின்                            குமரேசா

 

மறந்திருந்த பத்தனின் மனந்திருத்து மாசிலா

விரைந்துவந்து தோகைமேல் விழித்திருக்க மோனமாய்

பறந்திலங்கு நாதனே சிறந்தவள்ளி பாகனே                               அருளாயோ     

நவராத்திரி அந்தாதி (ஒன்பதிர வீறுமுதலி)

காப்பு — நேரிசை வெண்பா முப்பெருந் தேவியர் முன்னின் றருள்புரியுஞ்  செப்பரிய வொன்பதிநாட் சீருரைக்கக் - கொப்பூழ்மே  னான்முகனைத் தான்படைத்த நாரண...