ஞாயிறு, 7 ஜூலை, 2024

இறை யிரை சிலேடை வெண்பா

சுட்டாவி தட்டிட்டுச் சாம்பாரிற் றோய்த்தெடுக்கச்
சட்டினிக்கும் பொங்கல் பொருதுவக்கு - மிட்டவுண
வாழ்ந்திருக்கப் பத்தனுளத் தாழ்குரலை மெய்ப்பிக்கப்
போழ்துவந் தூண்பிளந்தான் போக்கு

சனி, 6 ஜூலை, 2024

திருக்கடிகை விருத்தம்

 யோகம ருருவில் வீறிரு மரியை
    வேதனை தீர  வரம்வேண்டி
யோகிகள் பணியு மாளரி யிறையை
     யோரெழில் கடிகை மலையேறி

தேகமு மொளிரத் தீவினை யொழியச் 
    சீரக மிளிரத் தொழுவோர்க
டீவினை யெரிய வாலம ரடியன்
    ராமனி னாம நிதமேத்து

மாகம மறிய  வாரண  மறிய  
    வேரண முறையே பயின்றோனை
யாதவ னழகு வானுறை கனியா
    யாசையி லுணவே முயன்றோனை

மோகமு மொழிய மோனமு மொளிர
    மூதுல குறையு  முனிவோனின்  
காதலி லுருகிக் கடிமல ரணவித்  
     தாளிணை முதலிற் பணிவாரே 

குருவார குருமூர்த்தி வெண்பா

ஆறகத்தி னின்ற வருணா சலன்மைந்த
னூறகற்று நாம முணர்ந்துணர்ந் - தீறகத்தும்
பாரகத்தும் பேறளிக்கும் பால குருமூர்த்தி
யேரகத் தீசனை யேத்து

#வெண்பா 

 

புதன், 3 ஜூலை, 2024

வைணவ ஆசாரியர்கள் வெண்பா

நம்பெருமா ணம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
யெம்பெருமா னார்வழி யேற்றுயர்வா  - யம்புவியி
லிப்பிறவி யீடேற்ற வேறுண்டோ நல்லாறு
தப்பாமல் சார்வாய் பணிந்து
#வெண்பா

 

செவ்வாய், 2 ஜூலை, 2024

முருகன் கலிவிருத்தம்

 

தேரழுந்தப் பார்த்தனுயிர் போர்களத்திற் காத்தநல்
காரணிந்த நீலமேனி கண்ணனாரின் மருகநின்
சூரொடுங்க நீலமயில் சேவலென மாற்றிய
சீரணிந்த தார்மார்பன் சிந்தையாள சிந்தையே

ஆண்டாள் கலிவிருத்தம்

 பூவணிந்த பாவைக்குப் பல்வளைகள் சூட்டியே 

பாவுகந்து போற்றிசைக்கப் பாற்கடலிற் கேட்குமே 

காவுகந்த சுந்தரன்றன் காக்குமருட் கிட்டுமே

நாவுகந்து நல்லாண்டா ணாமமோது நெஞ்சமே
 
 

செவ்வாயிற் செவ்வேள் கட்டளைக் கலித்துறை

அம்மானை யேந்து மனல்விழி யார்தந்த வாறுமுகா
வம்மானைத் தேடி யருங்கான மோடு மணன்மருகா
வம்மானைத் தேடி யருங்கான மோடு மணவழகா
வம்மானைப் போலே யருங்காதற் கொண்டா யடியவர்க்கே

 

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...