ஞாயிறு, 6 அக்டோபர், 2024

மாதணி கலித்துறை

மாதணிக் காதின் மயக்காத லென்னே மதுரமொழித்
தாதினிக் காதோ தழைக்காதோ குன்றாச் சுவையமுதங்
காதணிக் காதல் கவிக்காத றந்தாள் கவினுருவின்
காதணிக் காதல் கவிக்காத னந்தாக் கலையழகே

வெள்ளி, 4 அக்டோபர், 2024

யாக்கை வெண்பா

யாக்கை யழியு மழியா தகரமுத
னாக்கைப் பழக்கும் ழகரத்து - வேட்கை
விடுமோ தமிழரைக் காதணியின் மேன்மை
முடிவிலி யின்ப முடைத்து

குயிலெனப் பேசும் கட்டளைக் கலித்துறை

குயிலெனப் பேசுங் குரலாள் குவலயக் கோள்களையப்
புயலெனப் போரும் புரிவாண் மலரன்ன புன்சிரித்து
மயிடனைச் செற்ற மடவா ணிகரின் மடங்கலேறி
யுயிரெனப் போற்று முலகு மறவா துகவுகமே
#கட்டளைக்கலித்துறை

திருவோடு வெண்பா

திருவோ டிருந்தாற் றிரனாய் வளர்க
திருவோ டிருந்தா லிரந்து - திருவோ
டிணங்கிப் பொறுப்பினை யேற்று மகிழ்க
வணங்கத் தகுந்தது வாழ்வு

 

வியாழன், 3 அக்டோபர், 2024

தளையைக் கடக்க வெண்பா

தளையைக் கடக்க வகவல் பயில
வெளிதா யிலையே யிதுயே - னளையே
விரும்பு மழகா வியம்பு திருவோ
விரும்போ தடையன்றோ வீங்கு

புதன், 2 அக்டோபர், 2024

பணத்தின் வெண்பா

பணத்தின் மயங்கிப்  பழுதாக்கும் வாழ்வைக்  
குணத்தி னிலையைக் குலைக்குங் கணத்திற்
பிணத்தி னிலையே பெரிதுவக்கத் தோன்று
மணத்தின் மடிவதே மேல் 


செவ்வாய், 1 அக்டோபர், 2024

உண்மை வெண்பா செவ்வாயிற் செவ்வேள்

உண்மைப் பொருளா யுலகாளுந் தத்துவந்
திண்மைப் பொருளாய்த் திருவெடுக்கக் - கண்மை
நிறத்தான் றிருநீங்கா நேயன் மருகன்
செறித்தான் சிவசத்தி மைந்து 

 

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...