புதன், 6 நவம்பர், 2024

வையகத்து கலி விருத்தம் ( மணவாள மாமுனிகள்)

வையகத்து வாழ்வுகந்து வாழ்ந்திறந்து மெண்ணிலா
மெய்யெடுத்து விட்டொழிந்து விஞ்சிநின்ற தென்கொலோ
செய்யகத்து வாயினின்று சேவைசெய்வ தென்றுதான்
பொய்யகற்று மாமுனிக்கு மெய்யொடுக்கு நெஞ்சமே 


செவ்வாய், 5 நவம்பர், 2024

வானகத்து விருத்தம்

வானகத்த ராவடைந்து வையகத்தை யேற்றவே
       வைணவத்தை யாச்ரயித்து மானுடற்க ளுய்யவே
தேனுகுத்த மிழ்மொழிந்து பதேசரத்ன மாலையுந்
      தமிழ்மறைக்கு நூறுசாற்றந் தாதிமாலை யமுதமுங்
கோனகத்து வழிவகுக்க மேதினிக்கு நீதர
      கோவில்வாழ ரங்கனுன்ற னேற்றமான தனியனை
நானிலத்து மாந்தர்யாவுங் காலகால முள்ளவே
      மாமுனிக்குப் போற்றிசைத்த கீரத்திகூற லாகுமோ    

 எண்சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

பகை கெடுத்து விருத்தம்

பகைகெடுத்து வெல்ல பழவினைகள் செய்யு 

மிடர்கெடுக்க வென்று கவசமென நின்ற                   வொருபாடன்
 

மிகைபடுத்த லின்றி மிகவெளிது சொல்லா 

னிதமுரைக்க சஷ்டி விரதமுற நின்ற                              வடியார்கள்
 

வகைபடுத்து வல்லூ ரிளவரசன் றந்த 

வரியெடுத்து நின்று முழுவருளுந் தந்த                          சிறுபாலா
 

சிகைவுடைத்த செல்வ திருவணிகள் கொண்ட 

மிகவுடுத்த லின்றி பழநிமலை நின்ற                           பெருமாளே

 

ஒன்பது சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

 

ஆரூரன் கட்டளைக் கலித்துறை

ஆரூரன் சொல்லா தருளுடை யாசானை யன்றடைந்தே
யாரூரற் சொல்லா லழகுடை நான்மணி மாலைசெய்தே
றாரூரன் சொல்லா தருளு மருஞானஞ் சீரலைவா
யாரூரன் சொல்லா லடைந்த குமர குருபரனே

கட்டளைக் கலித்துறை 

திங்கள், 4 நவம்பர், 2024

வாக்கிறந்த விருத்தம்

 வாக்கிறந்த பாலன்வாயில் வாரத்தைமேவு கவிதையை 

     வாழ்த்திநின்ற பாலன்சாயல் வந்துநின்ற நேயவா 

          பூத்திருந்து பாலன்வாயில் வெண்சிறந்த பாவினை      யருள்வோனே 

 

பாக்களால் வைகைவாழு மம்மைபால வார்தமிழ்  

    பாலனுன் குமாரசாமி பிள்ளையா ரிசைத்தமிழ் 

          பாதைகாண தருமைசென்று மாசிலாத தேசிகர்             பதநாட 

 

நோக்கறிந்து சைவமோங்க தில்லைநாத னாசிபெற்

    றூக்கமுற்று வாரணாசி சேத்திரத்த டைந்தபின்

       றோத்திரங்கண் மாலைசெய்து சர்வகல்வி வல்லியைத்     தமிழாலே 

 

நாக்கறிந்த மொழிகள்யாவும் நொடியுணர்ந்து கோனிட

    நானிலத்தை வேட்டடைந்து நாரிபாகர் நெறியினை 

       நிலைநிறுத்த வன்பருக் கருளளித்த செந்திலாள்            பெருமாளே 

 

பதிமூன்று சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்   

 

ஞாயிறு, 3 நவம்பர், 2024

மன்றாடி வெண்பா

மன்றாடி மைந்தா மருகாமா மாயற்குக்

குன்றாடி கோலமயிற் கூர்வேலா - வொன்றாக


வுன்னை வுளமுருகி யுள்வார்க் குயிராமே


முன்னை முடியவிழ்ந்த முத்து

 

#வெண்பா 

 

சனி, 2 நவம்பர், 2024

இலையிரு விருத்தம்

 இலையிரு கூறாய் நிலனொடு நீரி 

       னிடையினில் வீழச்       சிவபூசை 

நிலையினை யாளு நிறைமுனி வோனும் 

        பறவையு மீனு                மெனமாறு

 

மிலையினை யாவென் றொருநொடி காண 

       விடரிட     பூசை               தடுமாற 

யிதனிடை  பூதஞ்   சிவனடி   யாரை 

      யொருபது நூறு                 சிறையேக 

 

நிலைதடு மாறி நிசவடி யாருந் 

     தமிழரு ளாசு                       புலவோனை 

யுலையுறு மாவி பசியுறும்  பூத

     முளமகிழந் தூணா         யெனநோவ

 

கலைமக ளாளு நயமொழி நாவன் 

     றிருமுரு காறா                    யுனையேத்தப் 

பிலமுட னேகி பிணைவிடி  வித்த

     பர(ங்)கிரி  வாழும்            பெருமாளே    

  பதினான்கு சீர்க் கழிநெடிலடி #ஆசிரியவிருத்தம்

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...