நினையா நிலையொழிய நின்னை நிதமு
மனையா யருளு மழகே - யெனையாளு
மீச னிளமைந்த வின்றமிழா லென்றுமுனைப்
பேசப் பெறப்பெற்றேன் பேறு
நினையா நிலையொழிய நின்னை நிதமு
மனையா யருளு மழகே - யெனையாளு
மீச னிளமைந்த வின்றமிழா லென்றுமுனைப்
பேசப் பெறப்பெற்றேன் பேறு
விதியறியாப் பொருளை விரித்துரைக்க
விழியறியாப் பொலிவை விருந்தளிக்கக்
கதியறியாச் சுரரைச் சிறைவிடுக்கக்
கணையழியாப் பகைவர் கதைமுடிக்கப்
பதியறியாப் பசுவைப் பதப்படுத்தப்
பணிவறியா மதியின் பழுதறுக்கத்
துதியறியாத் தமியன் றமிழுரைக்கத்
துணைவருமார் குருவை யுளத்திருத்தே
-அறு சீர் விருத்தம்
ஆறுதித்த நாதனாக வைஞ்சிரத்து நாதனும்
பாருதிக்க வந்ததென்னை போரொடக்கி வெல்லவே
நூறொழிக்க நீரொளிந்த நேயமற்ற சூரணி
நோயகற்ற ஞானமெட்ட நூன்மறந்த மாந்தருக்
கீறகத்து வாழ்வளிக்க வேதுவாக நின்றிட
வேரகத்து வெற்படைந்து தந்தைசாமி யென்றெழ
வேறதற்கு நேரிலாத சந்தநாதர் செந்தமிழ்
மேதினிக்கண் மன்னிநிற்க வீழ்விலாத போகமே
-எண்சீர் விருத்தம்
தாதொத்த தத்தை துதிதாதை தித்திததித்
தேதுதித் தேத்துதித் தோததா -தீதுதொத்தா
தத்தத்தத் தித்ததத்தாத் தோதிதத் தோததா
தித்தத்தித் தேத்திதித்தொத் தே
கற்றறிந்த பண்டிதர்கள் கவிமறுத்து ரைத்திட
கச்சியப்பர் நம்பிநின்ற கனிமொழிக்கு நாதனே
யச்சுடைத்த வேடெடுத்து வந்தடைந்த வச்சபை பலர்காண
குற்றமல்ல பத்தன்பாட லென்றுரைத்துச் சான்றுடன்
கொற்றவீர சோழியத்தின் சூத்திரத்தி னூடுநீ
சொற்றமேன்மை கண்டுவந்து சொல்லடைத்து நின்றனர் புலவோர்கள்
முற்றுணர்ந்த முக்கணப்பர் மௌனநாதர் சீடனாய்
முத்தமிட்ட செல்லமைந்த னென்றிருந்த போதிலு
மௌனங்காத்து வாயடைத்து கீழமர்ந்து போதனை யுனைவேண்ட
வுற்றவர்க்கு மெச்சுகப்பு மேலெழுந்து பொங்கவே
வோமடக்கு பொருளவர்க்கு மோதுவித்த வித்தகா
வொப்பிலாத சாமிநாத னாகநின்ற வேரகப் பெருமாளே
ஆறா ரணமு மகலு மடியவர்க்
காறா யமையு மவனினை - வாறுதித்த
வாறாந் திதியாளு மாறு முகனைநித
மாறாழ்ந் தணுகி னுவந்து
காப்பு — நேரிசை வெண்பா முப்பெருந் தேவியர் முன்னின் றருள்புரியுஞ் செப்பரிய வொன்பதிநாட் சீருரைக்கக் - கொப்பூழ்மே னான்முகனைத் தான்படைத்த நாரண...