செவ்வாய், 7 ஜனவரி, 2025

பொய்யுண்ட வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

பொய்யுண்ட மெய்யுடைத்தும் புங்கவனைப் பாடவைத்
துய்வுண் டெனவுரைத்தா னாயேற்கு - மையுண்ட
கண்டத்தர் மைந்தனன்றோ கந்தையன் செய்தபிழை
கண்டிப்பான் கைவிடான் காண்

 

வேத நான்கின் கலி விருத்தம்

வேதநான்கி னந்தங்கூட சொல்லலொணாத மெய்ப்பொரு 

ணாதவிந்து தத்துவத்தி னாதனான மெய்ப்பொரு

ணாதியற்ற வாக்களுய்ய ஞாலந்தோன்று மெய்ப்பொரு 

ளோதவேலன் பெயரிருக்கக் குற்றம்பற்று மாசொலே

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

நீர்வண்ணன் கட்டளைக் கலித்துறை

நீர்வண்ண னாம னினைவெல்லா நிற்க நிலையருளிக்
கார்வண்ணன் காட்சி  கனவிலுங் காணக் கதியருளித்
தார்வண்ணத் தண்டுழாய் மார்பன் விலகாத் திருவுடையா
னார்வண்ண னாட நமக்கரு ணல்கு நிகரிலியே 

 

வெள்ளி, 3 ஜனவரி, 2025

வாலைக் குமரி வெண்பா

வாலைக் குமரி வடவழகி செம்பாக்கப்
பாலா திரிபுர சுந்தரி - ஞாலத்
தரசி யரசர்க் கரசி தருணி
வரிசையாய்க் காணவே கண்

 

வியாழன், 2 ஜனவரி, 2025

சிரத்தை வெண்பா

 

சிரத்தை யுடனே கரத்தை யுயர்த்தி
வரத்தை விழையப் பொழிவான் மராஅ
மரத்தை யிலங்கை யரசனின் பத்துச்
சிரத்தை யரிந்தான் சிறந்து
 

புதன், 1 ஜனவரி, 2025

வில்லேந்து கலி விருத்தம்

வில்லேந்து வீரனல்லேன் வெற்றியைச் சமர்ப்பிக்கக்
கல்லேந்து கோவில்செய்யக் கைத்திறனோ சற்றுமில்லை
சொல்லேந்து பாவமைக்கத் தூமதியைத் தந்தனைநீ
பல்லாண்டு போற்றிசைத்தல் பாவிக்கு முய்வன்றே
#கலிவிருத்தம்

செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

ஆண்டு பலகடந் தாயு ளதையிழந்து வேண்டிய வாழ்வு விளைந்ததோ - மீண்டும் பிறவிப் பெருங்கடல் வேண்டாமே சேந்தா சிறைவிடுத்துச் சீர்தாளைத் தா

 

திறப்பான் கதவும் வெண்பா (செவாயிற் செவ்வேள்)

திறப்பான் கதவுந் திறக்காது போகு மறப்பா னமதேதம் வாழ்வின் - மறைப்பின்றித் தூயதமிழ் தந்தான் றுதிபாட லெங்கடனாஞ் சேய(ன்)புகழ் சொல்வதுவே சொல்