கனகவேத கோடதூது கலியகற்று கேசவா
சனகமாது மனதையாளு மதிமயக்கி ராகவா
செனனமான புதியவாண்டை யினிதழைக்க வாழ்விலே
யுனதுதாளை மதியமர்த்தித் தமிழுரைத்தல் கோலமே
திங்கள், 14 ஏப்ரல், 2025
கனகவேத கலிப்பா ( தமிழ்ப்புத்தாண்டு)
பையரவம் கலி விருத்தம்
பையரவந் துயில்பவனோ வுய்யவரந் தந்துவப்பான்
மெய்யரவம் பூண்பவனோ செய்யவர மெளிதளிப்பான்
தையலுமை வேறந்த செய்யவளின் மகள்கேள்வன்
நையவருந் துயர்களையும் பொய்யெனவே சேர்த்தழிப்பான்
வெள்ளி, 11 ஏப்ரல், 2025
தேர்கொண்ட விருத்தம்
தேர்கொண்ட விசயற்குக் கொடியானாய்
வால்கொண் டிலங்கைக்குத் தீவைத்தாய்
வார்கொண்ட திருமகளைக் காண்பதற்கே
வான்கொண்ட பாதையினைத் தேர்ந்தெடுத்தாய்ப்
பார்கொண் டிராமகாதை பரப்பிடவே
பேர்கொண்ட வைகுந்தநீ வேண்டிலையே
சீர்கொண்ட ஸ்ரீராம னாமமொன்றே
நீர்கொண்ட மீனைப் போற் சுவாசித்தாய்
தேவசேனை விருத்தம்
தேவசேனை நாதனின் றிருமணத்துக் கோலமோ
சீதைராமன் சேர்ந்திடுந் திருமணத்துக் கோலமோ
பாவைசெய்த பைங்கிளி பதியடைந்த கோலமோ
பூசைசெய்த பார்வதி பதியடைந்த கோலமோ
பூவமர்ந்த பாவையுந் திருவரங்க நாதனும்
புன்சிரிப்புப் பூத்திட மருவுகின்ற கோலமோ
சேவைகாண வுற்றதே திருவளித்த பேறென
சீர்விளங்கு பங்குனி யுத்திரத்தை யேத்துவாம்
பற்றுகின்ற கலி விருத்தம்
பற்றுகின்ற பற்றைநீக்கிக் குற்றமற்ற பற்றினை
யெற்றுநானும் பற்றிநிற்க வெற்றயன்ற சுற்றினிற்
குற்றமற்ற கொற்றிபெற்ற வெற்றிவேலைப் பற்றிடு
கற்றுவந்து கொற்ற(ங்)கொள்ள வெற்றுபெற்ற பெற்றியே
பராசக்தி துதி விருத்தம்
1.
நாடுவிட்டு நாடுசேர்ந்து மாடுசேர்க்கு மாந்தரோ
யாடுவெட்டி வேள்விசெய்யு மாறுபற்று மாந்தரோ
கூடுவிட்டு கூடுபாயுஞ் சித்தறிந்த மாந்தரோ
வீடுபற்ற வேண்டுமென்ற விழைவளிப்ப ளிறைவியே
புதன், 9 ஏப்ரல், 2025
ஓயாமல் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)
ஓயாம லுழல்வதற்கு வழிபலவா முலகெங்கு
முன்னாமஞ் சொல்வதற்கோ வுணர்வில்லை முன்பெல்லா
நாயாக வலைந்தேனை நாட்டம்பல கொண்டேனைத்
தானாக வந்தாண்டு நல்வழியி லமர்த்தினையே
தோயாமற் தோயமேற் றாமரைபோல் வாழ்வதற்குத்
தூமலராண் மருகோனே வுனையன்றி யாருரைப்பார்
சேயோனை வாயாரச் செந்தமிழாற் செப்பிடவே
சிறியேனை வைத்தவனைச் சாந்துணையு மறவேனே
எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...
-
மாதேவு வேடா மலர்மதி யாறாளா வாதேவு வேலை மலைவில்லா -தீதேகா சத்திநாதா வையாறா சங்கத் தமிழ்வேந்தே முத்திநாதா மூன்றுதமிழ் தா