வெள்ளி, 5 செப்டம்பர், 2025

அறிவால் கலி விருத்தம் (தோடகம்)

அறிவா லறிவா ரருவாய் விளங்கும் நெறிவா யறிவார் நினைவா ருருவாய்ப் பொறிவா யறிவார் புனறீ யிணையச் செறிவா ரறியுஞ் சிவசத் தியனே

 

புதன், 3 செப்டம்பர், 2025

நாராயணன் துதி (அஷ்டகம்)

 (நாராயண நாராயண நாராயண என்போம்) 

1. 

தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்திரு மேனித்தலை வன்றன் ஓராயிர நாமந்தனி லொன்றிற்கரை வோமே

 

அறியாமை குறள்வெண்பா

அறியாமை நீக்கு மரிநாமத் தேற்ற நெறியாறின் சாறென் றறி

 

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

பாண்டியனின் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

பாண்டியனின் பேரனுநீ பாங்கிருவர் கேள்வனுநீ வேண்டுதிரு மார்பணையு மாலின் மருகனுநீ பூண்டதெல்லாம் வெற்றிகரப் போர்ஞானப் புங்கவனீ யாண்டியாய் நின்றது மேன்?

 

மாலைகொண்ட விருத்தம்

 

மாலைகொண்ட பாவைகண்ட பாவைகண்ட மாலையே
காலைகண்டு மாலைகண்டு மன்றலென்ற மேன்மைசேர்
நீலகண்டன் பாதிவந்து மாலைசூட்டு வண்ணமாய்ச்
வாலைகண்ட சொப்பனத்தை வானுமண்ணு மேத்துமே
 

வேலைவேலைவேலை விருத்தம்

 

வேலைவேலை வேலையென்று மூன்றுவேளை வேட்டலோ?
வேலைவேலை வேலையென்று மூன்றுவேளை வேட்டலோ?
வேலைவேலை வேலையென்று மூன்றுவேளை வேட்டலே! 
வேலைவேலை வேலையென்று மூன்றுவேளை வேட்டலே!
 

ஆறுமுக விருத்தம்

 

ஆறுமுக மன்றுதித்த வாண்டவனைப் போற்றுகவே
ஆனைமுகன் றம்பியென வனுதினமும் போற்றுகவே
ஆறுமக நன்குடைத்த வாண்டனைப் போற்றுகவே
ஆதியுமை வேலளித்த வாடவனைப் போற்றுகவே
ஆறுமுக மன்பர்தமக் கருள்பவனைப் போற்றுகவே
ஆழிதுயின் மாதவன்றன் மருமகனைப் போற்றுகவே
ஆறுமுக மாறுமுக மாறுமுக மேத்துகவே
ஏறுமகம் வாழ்வணைய வெந்நாளு மேத்துகவே
 

நவராத்திரி அந்தாதி (ஒன்பதிர வீறுமுதலி)

காப்பு — நேரிசை வெண்பா முப்பெருந் தேவியர் முன்னின் றருள்புரியுஞ்  செப்பரிய வொன்பதிநாட் சீருரைக்கக் - கொப்பூழ்மே  னான்முகனைத் தான்படைத்த நாரண...