செவ்வாய், 9 செப்டம்பர், 2025

மகேசன் அருண் சுந்தரம் வெண்பா

மகேசனிள மைந்தன் மறவள்ளி நாதன் 
குகேசன் குறைகளை யாறு - முகேச
னருண்முகத் தொன்றை யணுக வடைவோந்
தெருண்மனஞ் சீர்சுந்த ரம் 

மண்டேன் (Mundane) மணமறிந்து வாழ்! வெண்பா

செயலாற் சிறப்புச் சிதைவிலாச் சிந்தை முயலா துயர்வளஞ்சேர் நாடா - வயலார்தம் பண்டேன் படைப்பின்மேற் பாசத்தொ டேக்கமேன் மண்டேன் மணமறிந்து வாழ்

 

செவ்வாயிற் செவ்வேள் விருத்தம்

 கரையில் கருணைக் கடலே கடையில் லருளு மருளே உரையி லுணரா வுயர்வே உணர்வி லுறையு முயிரே புரையில் புனிதப் புகழே புடைசூ ழிருமா தழகே விரைவின் மதிவா குகனே வினையின் மறவா திரவே

 

திங்கள், 8 செப்டம்பர், 2025

நிறைமதி வெண்பா

 

நிறைமதி பாம்பு நிழற்கோள் விழுங்கு
குறைபிடி வேளை குறைதீர் - நிறைமதி
கொண்டிறை நாம குணமோதப் பன்மடங்
குண்டா முரைத்த பலன்
 

ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

மூவடி சிந்தியல் வெண்பா

மூவடி வைத்து முழுது மடைந்தானை மூவடி வைத்து மொழிய முடியுமோ மாவலி யுய்த்த வழி

 

மூவடி வெண்பா

மூவடி வைத்து முழுது மளந்தானின் சேவடி பற்றிச் சிறப்புறுவார் – நாவடியிற் கற்கண் டடக்கக் கரையுஞ் சுவையன்ன தற்கொண்டாற் போன்றிரு தாள்

 

சென்றிலங்கை விருத்தம்

சென்றிலங்கை செற்றுவந்த சீதைகேள்வன் பாங்கனா கன்றெறிந்து கனியுதிர்த்த குட்டன்கண்ணி மைந்தனா பன்றியாக வாரிசென்று பாரைமீட்ட கொம்பனா கொன்றுபொன்னன் குடர்களைந்த கூருகிர்த்த சிங்கனே !

 

நவராத்திரி அந்தாதி (ஒன்பதிர வீறுமுதலி)

காப்பு — நேரிசை வெண்பா முப்பெருந் தேவியர் முன்னின் றருள்புரியுஞ்  செப்பரிய வொன்பதிநாட் சீருரைக்கக் - கொப்பூழ்மே  னான்முகனைத் தான்படைத்த நாரண...