மகிடாசுரன் றலைவாங்கிடு திரிசூலங்கை யுடையாள்
சகடாசுரன் றலைவாங்கிடு சிறுபிள்ளையி னிளையாள்
புகழாரரன் றலைசூடிடு மரவாழியை யுடையாள்
துகளாகிடு நிலைமாற்றிடு முமையாளடி சரணே
மகிடாசுரன் றலைவாங்கிடு திரிசூலங்கை யுடையாள்
சகடாசுரன் றலைவாங்கிடு சிறுபிள்ளையி னிளையாள்
புகழாரரன் றலைசூடிடு மரவாழியை யுடையாள்
துகளாகிடு நிலைமாற்றிடு முமையாளடி சரணே
என்னு ளுறைவானை யெங்கெங்குத் தேடியு
மன்னு மகத்துவனைக் கண்டிலனே - கன்னலேசஞ்ச லங்க டீர்த்து வைக்கு மஞ்ச லங்கை மழலைமாய்
வேலேந்தி வினைதீர்க்கும் வீராதி வீரா
சூலேந்து சிவனார்க்கு மார்சாமி நாதாபச்சை மலைமேனி பார்வை பொழிகருணை
இச்சை விழியீர்ப்பி னீடற்ற - பிச்சையிட்டு
நீர்ப்பதி சாபத்தை நீக்கு நிறைகுணத்துப்
பார்ப்பதி பாதம் பணி
மாயனைச் சேர மனவுடலை யொன்றாக்கித்
தூய தவம்பேணத் துப்புளதோ? - வாயினுபெருவெளிமுத லிருநிலம்வரை விரவியபுக ழொருவன்
சுரருலகுறப் பொருதவுணரி னுருசிதையயில் விரகன்எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...