மண்சுமந்த கூத்தாடி மைந்தா பணிநடுவே கண்வளருங் கண்ணன் மருகாநீ - அண்டமெலாங் கண்ணிமைக்கும் போதிற் கலாபியிற் சுற்றிவந்துந் தண்டெடுத்து நின்றாய் தனித்து #வெண்பா #நிந்தாஸ்துதி
மண்சுமந்த கூத்தாடி மைந்தா பணிநடுவே கண்வளருங் கண்ணன் மருகாநீ - அண்டமெலாங் கண்ணிமைக்கும் போதிற் கலாபியிற் சுற்றிவந்துந் தண்டெடுத்து நின்றாய் தனித்து #வெண்பா #நிந்தாஸ்துதி
மாமனைப் போற்கள்வன் மாமியைப் போற்செல்வன் காமனைப் போலழகன் கந்தையன் - சோமனைத் தாங்குமையன் போற்குருவாந் தந்திமுகத் தண்ணற்போ லேங்குமன்பர்க் கீவா னெளிது #வெண்பா
கண்ணிருண்டு போனபோதும் கொண்டபத்தி மாறிடா தண்ணிளியை மாற்றவர்க்குந் தங்குதடை யின்றியே விண்ணுமண்ணு மென்றுமேத்த வள்ளலென்ன தந்தனை மண்ணுலகிற் கூரமாள வந்துதித்த நாதனே
உருவிலங்கைத் தேடி யொருதலைவ னோட
வருவிலங்கைத் தேவன் மைதிலியை மாயத்
துறவியைப் போலத் துகிலுடுத்தி நாடிக் களவாட
ஒருவிலங்கை வீழ ஒருவிலங்கை வாழ
ஒருகணையை யாள ஒளிந்தொளிரு நீயும்
உறுவிலங்கைத் தீய ஒருவிலங்கை யேவி மகிழ்வோனே
செருவிலங்கைச் சேர வருவிலங்கைக் கூட
பெருவிளங்கும் பால மொருமனதா யாக
வொருவிலங்கைக் கோனை யுருகுலைத்தி ராம மகராசா
கருவிலங்கை நாமு மொருவிலங்கைப் போல
உருவிலங்க நாளு மருமலர்க டூவி
செருவொழிந்து வீழ வரமகிழ்ந் தீவாய் பெருமாளே
13 சீர் #விருத்தம்
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...