சனி, 30 மார்ச், 2024

வேலவன் வெண்பா

கண்ணுதலார் காதுக்குக் கும்பமுனி நாதர்க்கும் விண்ணவர்க் காத்தருள் வேலவா - திண்ணமுரை செய்த மொழியாதோ செப்புன்ற னன்பர்க்கு மெய்தறியா வாழ்வுழன்றோ மம்பு #வெண்பா

வெள்ளி, 29 மார்ச், 2024

அருணகிரிநாதர் விண்ணப்ப விருத்தம்

தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தனதான

 

கந்தக் கடவுளை யந்திப் பகலெனச்
சிந்தித் துருகிட வந்தித் துளமகிழ்
பந்தத் துணையுட னிந்தப் பிறவியின்  பயனேக

விந்தக் கலியினி லின்புற் றொழுகிட
வின்பக் குறமுக ளன்புத் துணைவனைக்
கம்பத் திளையனைச் சங்கத் தமிழினி லழகாக

நந்தற் குமரனி னங்கப் பறைபெற
நங்கைத் திருமக ணங்கட் கருளிய
சங்கத் தமிழினைச் சந்தத் தமைவுடன் பலகாலு

நண்ணித் தொழுதெழ வெண்ணத் துயரிய
வண்ணக் கவிமழைப் பண்ணிற் கிசைந்திட
கண்ணித் துணையுடன் கண்ணி புனைந்திட வுளமார

தந்தித் துகிலுரி கங்கைச் சடைமுடி
யங்கத் திடமுறை நங்கைக் களவிலி
யின்பப் புதல்வனைத் துங்கக் கரியனைக் கவினாகச்

சந்தப் புலவனைக் கந்தற் கடியனை
யெந்தப் புலவனு மண்டற் கரியனை
விந்தைப் புகழுரை தந்திக் கிறைவனைப் பலபாடு

மந்தக் கவிஞனைச் சிந்தைத் தொழுதிட
விந்தக் கடையனு மன்புப் பெருகிட
வந்தித் தருளிட செஞ்சொற் பலவரு டனைநாளு

முந்திப் பிறவளிச் சந்திப் பிழையிலி
யெந்தத் தடையிலி யுந்தத் திறமருள்
சிந்தைப் பொலிவுற சித்தந் தெளிவுற குருநாதா

வெள்ளி, 22 மார்ச், 2024

இலக்குமி விருத்தம்

 

மின்னே நிகராம் வாழ்வினிலே

   பொன்னே பொருளே போற்றிசைக்கு

மென்னே விதியி னாடிறனே

    மன்னே நிலைக்கு மாண்பறியா

முன்னே விளங்குங் காட்சியினை

    முற்றுந் துறந்து மாட்சியெனப்

பின்னே வருந்துந் தாழ்வறியா

     அன்னே உனதாண் மறந்தினமே

 

விதியி னாடிறனே – விதியின் ஆள் திறனே

உன தாண்- உன தாள்

 

படம்

வஞ்சிக் குறவா கட்டளைக்கலித்துறை

வஞ்சிக் குறவா வழிவழி நின்ற வரையரையா வஞ்சிக் குறவா விழிவழி சென்ற வடிவழகா வஞ்சக் கரவான் விழிவழி மக்கண் மணம்புணர பஞ்சக் கரவான் வழிவழி வென்ற வறுமுகனே 

#கட்டளைக்கலித்துறை  

 

மங்கைக்கோ வெண்பா

அத்தனைக் கொண்டாட அத்தனை யின்பமாம் பித்தனாய் நோக்கினர் பித்தர்கண் – முத்தென வித்தினைப் பாவால் விரித்துரைத்த நாலுகவிச் சித்தனைச் சிந்தைசெய்வோம் வா

படம் 

மங்கைக்கோ விருத்தம்

 மாலை அணிந்தளித்த மங்கைக்கோ  
     மார்பி லிடந்தந்த மங்கைக்கோ
பாலஞ் சமைத்துவென்ற மங்கைக்கோ
    பாரின் சுமைதுறந்த மங்கைக்கோ
கோலத் துருவெடுத்த மங்கைக்கோ
    கோபன் மனமுவந்த மங்கைக்கோ
வேலைத் துயில்வளரு மங்கைக்கோ
    வேண்டித் தொழுதுவந்த மங்கைக்கோ 

திங்கள், 18 மார்ச், 2024

நாதமுனிக் கட்டளைக்கலித்துறை

நங்கைக் கிடந்தந்த நம்பிப் புகழை நயந்துரைத்த
நங்கைக் கிடந்தந்த நம்பிப் புகழை நயந்துரைத்த
நங்கைக் கிடந்தந்த நம்பிப் புகழை நயந்துரைத்த
நங்கைக் கிடந்தந்த நம்பிப் புகழை நினைமனனே

கட்டளைக்கலித்துறை 

நவராத்திரி அந்தாதி (ஒன்பதிர வீறுமுதலி)

காப்பு — நேரிசை வெண்பா முப்பெருந் தேவியர் முன்னின் றருள்புரியுஞ்  செப்பரிய வொன்பதிநாட் சீருரைக்கக் - கொப்பூழ்மே  னான்முகனைத் தான்படைத்த நாரண...