படைப்பார் படைக்கப் படைப்பார் படைப்பார்
படிப்பார் படிக்கப் பிடிப்பார் - படைப்பார்
படைப்பார் படைப்பாள் படைப்பாய்ப் படைக்கப்
படைப்பார் படைப்பார் படைப்பு
#வெண்பா
வெள்ளி, 28 ஜூன், 2024
படைப்பாள் வெண்பா
வியாழன், 27 ஜூன், 2024
திருச்செந்தூர் கட்டளைக்கலித்துறை
ஈரா றணிதோள னேறூரா னேறின் விசயபுரஞ்
சீரா யலைமோதுந் தீராப் பிறப்பிறப் பென்றுழலும்
பேரா பிணிபோக்கிப் பேறா யணைக்கும் பிரானுறையுந்
தீரா வினைவலி தீர்த்தருள் செந்தூர் திருத்தலமே
புதன், 26 ஜூன், 2024
பூமி பிராட்டி கலி விருத்தம்
மருப்பிளைத்த கைகளு மகட்கிசைந்த பார்வையும்
விருப்பளிக்கு நாதனை விழைந்திருந்த மங்கையின்
திருக்குயர்ந்த சேவையா சிரத்திருந்து தாங்கவே
கருத்துணர்ந்த கோலவன் பணத்தரவென் றானனோ
#கலிவிருத்தம்
செவ்வாய், 25 ஜூன், 2024
நிகரிலி கட்டளைக் கலித்துறை
ஞாயிறு, 23 ஜூன், 2024
அருண்மா மகள் கட்டளைக் கலித்துறை
அருண்மா வலையறு மங்கை யரசற் கருண்மொழிந்த
வருண்மா வலையறு மங்கை யரசர்க் கருண்மொழிந்த
வருண்மா வலையறு மங்கை யரசற் கடிபணிய
வருண்மா வலையறு மங்கை யரசற் குரைக்கணுமே
#கட்டளைக்கலித்துறை
வெள்ளி, 21 ஜூன், 2024
அருணகிரிநாதர் புகழ்மாலை
சந்தத் தமிழினிற் சங்கத் தமிழினிற் சான்றுரைக்க
வந்திப் பகலென வந்தித் தளிபெற மாண்பளித்துக்
கந்தக் கடவுளி னன்புக் குழுந்தை யருணகிரி
யிந்தப் பொடியனி னின்பத் துதியுனை யேற்றருளே
#கட்டளைக்கலித்துறை
வியாழன், 20 ஜூன், 2024
முற்றுமோனை இராமர் வெண்பா
தலைபத்துத் தத்திவிழ தானவனைத் தாக்கித்
தலைவிக்கா தாங்கி தனிமை - தலைமகனாய்
தந்தைசொல்லைத் தட்டாத் தனிமகனாந் தாசரதி
தந்தநெறி தாங்கு தலை
#வெண்பா #முற்றுமோனை
நவராத்திரி அந்தாதி (ஒன்பதிர வீறுமுதலி)
காப்பு — நேரிசை வெண்பா முப்பெருந் தேவியர் முன்னின் றருள்புரியுஞ் செப்பரிய வொன்பதிநாட் சீருரைக்கக் - கொப்பூழ்மே னான்முகனைத் தான்படைத்த நாரண...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...
-
ஆடி வருவா னழகு மயின்மீது நேடி யழிப்பா னிசா சரரைக் - கோடு ம ரமேசு வேலாள்வான் சௌமிய னாறு சிரமாள்வான் சுந்தர த்தாள் சேர்