வியாழன், 29 ஆகஸ்ட், 2024

கன்றெறிந்து கலி விருத்தம்

கன்றெறிந்து கன்றுமேய்த்துக் குன்றெடுத்த கண்ணனா
சென்றுமீட்க பூமியாளைத் தந்தமேந்து பன்றியா
வென்றுபோர்கள் வீற்றுநின்றி ராமராம நாரணா
வின்றுமென்றுங் காக்கவெம்மை யுன்றனாசி நின்றதே
#கலிவிருத்தம்

புதன், 28 ஆகஸ்ட், 2024

"வெட்டியாக" கலி விருத்தம்

வெட்டியாக வேலையின்றி வீற்றிருந்து நாளெலா
மிட்டமான காட்சிதேடி யிங்குமங்கு மலையவே
யெட்டிவானை நோக்கியாழ வேற்றமான பிம்பமாய்க்
குட்டியானை யென்றுநின்ற கொண்டலுள்ள மள்ளுமே

தேவாதி தேவரும் வெண்பா

  

தேவாதி தேவருந் தீரா வினையகலப்

பாவாலே போற்றிப் பணிந்துவக்கு - மேவரு
 
மாலுறுஞ் சேவை மகிழ்ந்தளிக்கு மாதவனின்
 
மாலிருஞ் சோலை மலை
 
 

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

தானைத் தலைவன் கலி விருத்தம்

தானைத் தலைவன் தளிர்புரையுந் தாள்பணிந்
தானைத் தலைவ னழகுமுக மாறாழ்ந்து
மோனைத் தொடையழகின் முந்தெதுகை சேர்ந்தமையத்
தேனைக் குழைத்துரைப்போந் தீந்தமிழாற் செவ்வேட்கே

கன்றெறிந்து கலி விருத்தம்

 

கன்றெறிந்து கனியுதிர்த்த கைகளிந்த கைகளே
குன்றெடுத்து மழைதடுத்த விரல்களிந்த விரல்களே
சென்றுடுத்த சேலைதந்த சிந்தையாளுந் தேவனே
யின்றுவந்து வெண்ணையுண்க வூழிதோறுந் தாங்கவே
 

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

பிறப்புற்ற வெண்பா

பிறப்புற்ற செல்வந்தர் பெற்றமகன் சொல்கேட்
டறப்பற்று வேண்டி யரனைச் - சிறப்புற்ற
பாவா லலங்கரித்தார் பட்டினத்தா ரொற்றியூர்ச்
சாவா துறைந்தார் சிவத்து
#வெண்பா

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

எல்லாம் அறிபவளே வெண்பா

எல்லா மறிபவளே யெல்லா மருள்பவளே
பொல்லா தவர்க்குப் பயங்கரீ - யெல்லாத்
துயரு மரிபவளே தாயே திருவே
யுயர்வணக்க மென்று முனக்கு 

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...