வியாழன், 31 அக்டோபர், 2024

திரோதான வெண்பா

 

திரோதான மாளுந் திருமக டாமே
திரதனந் தந்தருளுந் தெய்வம் - விரோதிக
ளைவ ரொருமுகத் தாண்டு பரகதிசேர்ந்
துய்வதற் கூன்றா முயிர்க்கு
 

வடிவுடை அறு சீர் விருத்தம்

 

வடிவுடை யரசியுன் சகடமதை 
யதிரடி கடவிய தினமதனி
லிடருறு மிருபுவி விடியவென 
விலகென நரகனை விழவைத்த
வெடிவிட விதியுள விடியலதி 
லிடியென வதிரிடும் வெடியிலையே
கொடு(ங்)கலி தலையெழ விதுநிகழ 
மலையனு மிரவொரு குறையிலையே
 

புதன், 30 அக்டோபர், 2024

விடியா கட்டளைக் கலித்துறை

 

விடியா விதியின் விதிமாற்றும் வேங்கடம் வெம்மைதரு
மிடியி னனலின் விதிமாற்றும் வேங்கடம் வேலையிடைப்
படியிற் பரமன் பதிகொண்ட வேங்கடம் பார்த்தருள
நொடியி லளியை நுடங்கு முயிர்க ணிலைபெறவே
 

ஆற்றை பஃறொடைவெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 

ஆற்றைச் சடைக்கரந்த வைம்முக னாறாக
வாற்றின்க ணெற்றி யனற்பொறியை யாற்றினா
னேற்றமிகு வாறுரு வின்முறுவற் பாலகராய்த்
தோற்றமுற நாற்றவறு தூமலர்க்க ணூற்றமிகு
வாறனையர் பாலூட்டு மன்பால் வளர்ந்தாரி
னாறுதலை யொன்றணைத்தா ளன்னையுமை மாறுதலா
யோருடல மாறுதலை யுற்ற திருமுருகன்
காருருவத் தானவரை வேரறுக்கப் பாருதித்துப்
போர்புரியச் சத்திதரும் பொன்வேலைப் பெற்றுவந்
தார்ப்பரிக்கு மார்கடலில் வற்றிடவே நேரெறிந்து
சீர்பெருக ஞாலமெங்குஞ் செய்த சிறுவனைச்
சீர்பெருகச் செவ்வாயிற் செப்பு

முத்தெடுக்க கலி விருத்தம்

 

முத்தெடுக்க வேலையாழ்ந்து மூச்சடக்கி மூழ்கியே
முத்தடுக்கு நகையுடைத்த மங்கைபங்கர் மூர்த்திமேன்
முத்துடைத்த முத்தமிழ்க்கண் மோகமுற்று நித்தமும்
வித்தைகற்ற புலவனென்ன போற்றிசைக்க வேட்கையே
 

காத்திருந்து கலி விருத்தம்

 

காத்திருந்து நோற்றிருந்து காட்சிவேண்டி நாதனை
நாத்திருந்து பாத்தொடுக்க ஞானமேது மில்லையே
பூத்திருந்து புந்தியுள்ளே சித்தசுத்தி நோக்கிலை
சாத்துணிந்து நாதபாதம் யாவுமென்று தந்திடே
 

இடையா இளித்த வாயா

 

என்றடைவே னுன்னை யெனவறியே னென்றாலுந்
தின்றிளைத்தேன் வெண்ணெய் தினந்தொழுதே - குன்று
குடையா வெடுத்தன்று கோகுலத்தைக் காத்த
விடையா விளித்தவா யா
 

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...