செவ்வேளைச் சிந்திக்கச் செவ்வேளை யாகாதோ
வெவ்வேளை யென்றாலுஞ் செவ்வாயே - யிவ்வேளை
யெண்ணற்குப் பேறளித்தா னென்றுவந்து நன்றிசைப்போம்
பண்ணிற்குப் பாடல் புகழ்ந்து
வெள்ளி, 29 நவம்பர், 2024
செவ்வாயிற் செவ்வேள் வெண்பா
செவ்வாய், 26 நவம்பர், 2024
கன்று மேய்த்த கலி விருத்தம்
கன்றுமேய்த்த கண்ணனாக வன்றுதந்த வுறுதியு
மன்றலென்று வில்லிறுத்த மன்னிராம னுறுதியும்
பன்றியாகி மீட்டுபூமி பத்தநேய னுறுதியு
நன்றிருக்க நம்மைநாட வின்னலென்று நாணுமே
மன்றடைந்த கலி விருத்தம்
மன்றடைந்த நாதர்காண நடனமாடு மூர்த்திநீ
சென்றடைந்து பூரிகாணச் செகமதாளு மூர்த்திநீ
குன்றடைந்த சித்தர்காணக் குருவுமான மூர்த்திநின்
வென்றடைந்த வேலிருக்கப் பொடியதாகு மார்த்தியே
திங்கள், 25 நவம்பர், 2024
பரமனாக கலிப்பா
பரமனாக விருந்தபோதும் பரியடக்கு மெளியவன்
கரியகோல முரியவற் கடிமைசெய்த வடியவர்க்
குரியனாக வுளமகிழ்ந்து மதுரபாடல் வியன்கவி
யரியதான பதிகமாள்வர் பரமபாதங் காண்பரே
வியாழன், 21 நவம்பர், 2024
முயன்றலைதல் கலி விருத்தம்
முயன்றலைதல் வேண்டா முழுமோனம் வேண்டா
பயன்றலையிற் கொள்ளாப் பழவுரையைக் கேளீ
ரயன்றுளிரு நாப னையன்செயலே யாவுங்
கயன்றுயரை நீற்றான் கழற்சேர்விப் பானே
#கலி விருத்தம்
செவ்வாய், 19 நவம்பர், 2024
கடம்பனருளால் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
கடம்ப னருளாற் றடங்க லகலு
மடங்காத நாவு மடங்கும் -கிடந்துருளுந்
தூசு மிளிர்பொன்னாஞ் சூழ்ந்த வினையெரியு
மேசுங் கவியாமே தேசு
#வெண்பா
சேவற் கொடியோய் விருத்தம்
சேவற் கொடியோய் சேவைக் கெளியோய்
தேவர் படையா டேவே யுனைநாடாப்
பாவிக் கரியோய் நேசர்க் கெளியோய்
பாதைத் துணைவா நீயே யுனைநாளுஞ்
சேவித் தடைவாய் தேனார் தமிழாட்
சீதத் தடியைப் பாவாற் றுதிபாட
வாவிக் கருள்வா யானைத் துணைவா
வாழித் துயிலார் மாயோன் மருகோனே
#எண்சீர்விருத்தம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
திறப்பான் கதவும் வெண்பா (செவாயிற் செவ்வேள்)
திறப்பான் கதவுந் திறக்காது போகு மறப்பா னமதேதம் வாழ்வின் - மறைப்பின்றித் தூயதமிழ் தந்தான் றுதிபாட லெங்கடனாஞ் சேய(ன்)புகழ் சொல்வதுவே சொல்
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...
-
ஆடி வருவா னழகு மயின்மீது நேடி யழிப்பா னிசா சரரைக் - கோடு ம ரமேசு வேலாள்வான் சௌமிய னாறு சிரமாள்வான் சுந்தர த்தாள் சேர்