தேசமோங்கு திரிபுரத்துச் சுந்தரிச் சமேதரா
யூசலாடி யோய்வெடுக்கு முன்னதனை விழிகளா
லாசைதீர வநுபவிக்க வருளளித் தமைத்தனன்
பாசமற்றுப் பசுவிருக்கப் பதியளித்த பேறிதே
வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
தேசமோங்கு கலி விருத்தம்
வியாழன், 27 பிப்ரவரி, 2025
புவனம் ஏழின் கலிப்பா
புவனமேழி னரசியான புகழறாத பாவையோ
கவனமாக கலைகளாழக் கடையுணர்ந்த பாவையோ
சிவனுமாழ வநுபவிக்குந் திருவுடைத்த பாவையோ
ரவிநிலாவும் விழிகளாகி ரதமுடைத்த பாவையே
பவமறுக்க கலிப்பா
பவமறுக்கத் தவமிருக்கு நலமுடைத்த விரவினிற்
சிவமுகத்தி லலங்கரித்துத் திருமகட்குப் பூசனை
தருவிருப்ப விலுவமுஞ் சிவநிறத்து மேனியு
மிருவரொத்த வொருகருத் தெனவுணர்த்து மறிமினே
வேலை வெண்பா
வேலைப் பளுவாழ்ந்து வேலை மறவாதே
வாலைக் குமரி வடிவமது - பாலி
லொளிந்திருக்கு நெய்யென் றுறைவாளை யுன்னுள்
ளொளியை யொழியா துணர்
சதுரங்க வெண்பா
சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்
புதன், 26 பிப்ரவரி, 2025
இயக்க விருத்தம்
இயக்க மிருத்த லிருவேறா
விணக்கம் வெறுத்த லிருவேறா
தயக்கந் துணித லிருவேறா
தனைக்கண் டறித றகராறா
மயக்க மலர்த லிருகூறா
மனக்கண் டிறத்த றரும்வீடா
முயங்குஞ் சிவ்த்தை யறிவீரா
முனைப்பி னரிவை சதிதேகா
நல்லாரம் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
நல்லாரம் பூண்ட நயமிகு வேலனைச் சொல்லாரஞ் செய்தீர் துணைநிற்க- வெல்லாரு மின்புற்றோஞ் செவ்வேளை யேத்திய செவ்வேளை தன்பற்று நீக்கு தரு
எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...
-
மாதேவு வேடா மலர்மதி யாறாளா வாதேவு வேலை மலைவில்லா -தீதேகா சத்திநாதா வையாறா சங்கத் தமிழ்வேந்தே முத்திநாதா மூன்றுதமிழ் தா