ஆய்ச்சிமகள் கண்மணி யாநிரைக் காவலன்
பேய்ச்சிமுலை யுண்மணி பேய்மழைக் காத்தவன்புதன், 29 அக்டோபர், 2025
செவ்வாய், 28 அக்டோபர், 2025
தொலைத்தேனனை விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)
தொலைத்தேனெனை மலைத்தேவனி னலர்த்தாமரை யழகில்
மலைத்தேனவன் சலிப்பேதுமி லமர்ப்போர்க்கள நகைப்பில்
அலைத்தேவுழ றிரைப்போலுறை யடங்காவென தகத்தில்
நிலைப்பேனென நிதங்காத்திடு குகத்தேவனென் வியப்பே
திங்கள், 27 அக்டோபர், 2025
ஆறாறைத் தாண்டி கட்டளைக் கலித்துறை
ஆறாறைத் தாண்டி யணிதிக ழாண்டி யசைவறியா
நீறானிற் றோன்று நெருப்புரு ஞான்று நிகர்பகரசனி, 25 அக்டோபர், 2025
வார்த்தையில்லை விருத்தம்
வார்த்தையில்லை பொருளுமில்லை வாஞ்சையில்லை கவியினில்
நேர்த்தியில்லை நளினமில்லை யாப்பறிந்த பயனுமென்
சீர்த்தியில்லை த்ருப்தியில்லை வாசகர்க்குச் சற்றுமே
கார்த்திகேய முத்தமிழ் கடையனுக்கு மருள்வையே
மாலைநீக்கு விருத்தம்
மாலைநீக்கு மாலைநீக்க மேன்மைவீடு கிட்டுமோ
சூலைநீக்கு சூலைநீக்க வாத்மஞான மெட்டுமோ
வேலைநீக்கு வேலைநீக்க விண்ணுமண்ணு மண்டுமோ
ஓலைநீக்கு வாலைநோக்கு போதறிந்திங் குய்மினே
குறிஞ்சி வாழும் ஆண்டவர் விருத்தம்
குறிஞ்சிவாழு மாண்டவர்கண் கொஞ்சிபேச வாசையா
செறிந்தஞான மாழ்தவங்க டுறந்தவாழ்க்கை தூநெறிஆறு சக்கரங்களின் விருத்தம்
ஆறு சக்கரங்களி னாற்றலான வாண்டவா
ஆறு சொற்பதங்களி னாதியான மூலவாஎழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...
-
மாதேவு வேடா மலர்மதி யாறாளா வாதேவு வேலை மலைவில்லா -தீதேகா சத்திநாதா வையாறா சங்கத் தமிழ்வேந்தே முத்திநாதா மூன்றுதமிழ் தா