ஞாயிறு, 31 டிசம்பர், 2023
வல்லானை கொன்றானை
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
வெள்ளி, 29 டிசம்பர், 2023
வியாழன், 28 டிசம்பர், 2023
கோதை ஏகபாதம்
புதன், 27 டிசம்பர், 2023
சிசுபால வதம்
நடராஜர் சிந்து
ஆடவல்லா னாட்டமன்றோ அகிலமெல்லாங் காத்துநிற்கும் - அவனைத் தேடவல்லார் தேர்ந்தெடுத்த செகத்துரையுஞ் செப்புரையை நாடவல்லார் நாட்டமுற்று நலம்பெறுவர் வாழ்வதனில் - இதைப் பாடவல்லார் பேறுபெற்றார் பணிமதியான் பதம்பணிந்தே
கந்தர் சந்த வெண்பா
சொந்தமென பந்தமென எந்தைகுக கந்தனையே புந்திநிறை சிந்தையுற முந்திவரும் - சந்தமுறை செந்தமிழி னந்திமக வந்தனைக ளிந்தமுது விந்தையுற சந்ததமு நன்று
திங்கள், 25 டிசம்பர், 2023
திருவானைக்கா திருவிருத்தம்
வருமானை காவுறை வள்ளிக் கடைவு மணவாளனை
உருமானைக் காவுறை யோடி வெருட்டிய வுத்தமனைத்
திருவானை காவுரை செய்யத் துணிந்தேன் திருவிருத்தந்
திருவானைக் காவுறைச் சேயூரான் காக்குந் திருவடியே
கட்டளைக் கலித்துறை
வியாழன், 21 டிசம்பர், 2023
கல்லா லடியமர் நால்வர்க் கருடந்த கங்கைபதி கல்லா லடிதொட கௌதம வில்லாள் கதியளித்தோன் கல்லா லடைமழை காத்தருட் கண்ணனு மொப்படைக்க கல்லா வடியனைக் காக்க வருவர் கடைவழிக்கே
மழை வெள்ளம்
ஊரி லுளவுயி ரூர வழியில்லை உட்புகுந்த மாரி மழைமிகச் சாலை நதியென வாசஞ்செயும் ஆரு மவதியி லாணை அனுப்பிடு வாசவற்கு வாரி சுவரிட வேலை விடவல கந்தையனே
செவ்வாயிற் செவ்வேள்
செய்ய வனைத்தொழு தேத்தி முறையிடத் தேவரெலாஞ் செய்ய வனைக்கண் ணுதலா னுருவாக்கச் சேர்ந்தோருருச் செய்ய வனையணைச் சேயை மனம்புலன் புத்திசிந்தை செய்ய வனைத்துஞ் சிறக்கு நமகெல்லாஞ் செவ்வெனவே
திருப்பாவை
அப்பாவி மக்கட் கலல்தரு மம்மா னழித்தொழிக்க வப்பாவி நீங்கி யமைதி நிலவவந் தானிறத்தா யப்பாவி செய்தரு ளாழி முகந்து வருணதேவ வப்பாவி மக்க ளழகுற நீராட மார்கழியே
புதன், 13 டிசம்பர், 2023
இரட்டுற மொழிதல்
பேயனை நஞ்சுண்டு பேறளித் தானைப் பிறங்குமதி
மாயனை மன்னு மதுரை யரசனை வானவர்க்குந்
தூயனை மன்றாடு மாக்கோவை ஈறிலாச் சோதியனை
வேயனை நாதனை மேதினிக் கோனைத் தொழுமனனே
கட்டளைக்கலித்துறை
புதன், 6 டிசம்பர், 2023
யமக விருத்தம்
சனி, 2 டிசம்பர், 2023
கண்ணன் கட்டளைக்கலித்துறை
கதிர்தி கிரியான் மறைத்த கடல்வண்ணன் காட்சிதர
கதிர்தி கிரியான் மறைத்த கடல்வண்ணன் காட்சிபெற
கதிர்தி கிரியான் மறைத்த கடல்வண்ணன் காட்சிதர
கதிர்தி கிரியான் மறைத்த கடல்வண்ணக் காட்சியதே
#கட்டளைக்கலித்துறை
விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
இரு மாதர் இத்திருவைக் காண்கிறார்கள் அதன் தாக்கமாக தமக்கிடையே இது இராமர் தான் என்று தனது கருத்தை முன்வைக்கின்றார் முதற்பெண், இரண்டாம் பெண் இ...
-
கெண்டையார் கண்ணினா ணிலவும் - சடைக் கிண்டியார் கங்கையா ளுலவும் தொண்டையா லன்றடக் கிடவும் - மதித் துண்டையார் சீர்முடிக் கரவும் மண்டையான் மா...