திங்கள், 30 டிசம்பர், 2024

தில்லையில் நால்வர்

 


ஆனந்தக் களிப்பு :-

(கூத்துக்குப் பேர்போன நாதன் – தில்லைக்

கோவிலை யாளு நடனத்தின் ராஜன்)

 

செவ்வாய், 24 டிசம்பர், 2024

சடைமீது (செவ்வாயிற் செவ்வேள் பாவை)

சடைமீது கூன்மதியுஞ் சானவியுஞ் சூடு
மடமா திடப்புற மேந்தியருள் வெண்ணார்
விடைமீது வீற்றருளு நாதன் விரும்பிப்
படைவீடா மேரகந் தன்னிற் பகரத்
தொடைமீ திருந்த புதல்வனைத் தோளின்
மடைமீ தமர்த்தி மவுனகுரு கேட்ட
கொடையாது செப்பு குமரகுரு நாங்கள்
கடைதேற வன்பாய்க் கனிந்தேலோ ரெம்பாவாய்

வெள்ளி, 20 டிசம்பர், 2024

நிரோஷ்ட வெண்பா

இதழகலத் தெள்ளிசைத்தா லெச்சிலே யில்லை
யிதையறிந் தேத்த நினைந்தா -  னதிசடையார்
நஞ்சணியார் நாக நகையணிந்த நட்டரசர்
தஞ்சத்தாள் சந்தத்தாற் சாற்று 

 

புதன், 18 டிசம்பர், 2024

பத்துமெட்டும் கலிவிருத்தம்

பத்துமெட்டு மானபிள்ளை பாரைவென்று நின்றதே வித்தகத்தின் மேன்மைகண்டு பாரடங்கி நின்றதே சித்தசுத்தி மேன்மைகாண வாழ்வியப்புங் கூடுதே யெத்தவத்தைத் தந்தைசெய்ய விங்குதித்த பிள்ளையோ 

#கலிவிருத்தம் 

செவ்வாய், 17 டிசம்பர், 2024

கொல்லவரும் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 கொல்லவருங் கொடியவரைக் கொடியாக்கிக்  

                க்ரெளஞ்சகிரி குலைத்திட்டு மயிலாக்கிப்


புல்லவரும் புலவர்களின் புகழ்மணக்கப் 

                போற்றுதமிழ் புந்தியமர்ந் தான்றுரைத்த
 

வல்லவரும் வானவரும் பணிந்தேத்த 

                  வள்ளியமை மனமகிழ்ந்த வேடவனே
 

சொல்லவருங் கருத்துனையே ப்ரதிபலிக்க 

                  நல்லவரம் நயந்தருள்வாய் சேயவனே 

திங்கள், 16 டிசம்பர், 2024

தேரோட்டி வெண்பா

 தேரோட்டி தேருரையைத் தீராய நாமுரித்தோ

காரோட்டம் போனகருங் கற்பனையோம் - போராட்டம்

வேண்டாற்கு வேறெல்லாம் விட்டொழிந்து தாள்பணிய

வாண்டவன் சீருரைத்தா னன்று

பிறப்பிறப்பை வெண்பா

பிறப்பிறப்பை நீக்கும் பரமனைப் பற்றுப்

பிறபிறப் பீன்றாற் பிழையோ - மறப்பகற்றிப்

பற்றப் பரமனையே பேறருள்வா னென்பதாற்

பெற்ற பிறப்பு மினிது

#வெண்பா

நாடார் வெண்பா (பிரபத்தி)

நாடார் முயற்றவ நாடார் பிறபத்தி
பாடார் பரமனை யன்றியொன்றை- வீடார்
தருவா ரெனவெண்ணார் தாமரைத்தா ளொன்றே
பிரபத்தி யாறடைந்தார் பேறு 


ஞாயிறு, 15 டிசம்பர், 2024

வையம்வென்று கலிவிருத்தம்

வையம்வென்று வாகைசூடி நின்றிருந்த போதிலு
மையநின்ற மேன்மைகொண்ட மாந்தனென்று மைந்தனை
வையமெங்கும் வீற்றிருக்கு மாந்தர்சொல்லு மேற்றமே
யையமின்றி யின்பமீனு மீன்றதாய்க்கு ஞான்றுமே
#கலிவிருத்தம்

சனி, 14 டிசம்பர், 2024

சென்றதினி மீளாது

 

வானவில் பண்பாட்டு மையம் நடத்திய பாரதி திருவிழாவிற்குச் சென்றதினி மீளாது என்ற தலைப்பில் எழுதிய கவிதை 
 

வெள்ளி, 13 டிசம்பர், 2024

தயிரெடுத்து கலி விருத்தம்

 தயிரெடுத்துத் தின்றபோது வெண்மையான மீசையோ

 கயிறெடுத்துக் கண்ணிகட்டக் காயமேவு காயமோ

 மயலெடுத்த வாயர்மங்கை சொக்கநின்ற மூர்த்தியோ

 செயமுடைத்து விசயன்வெல்லத் தேர்நடத்து பாகனே

புதன், 11 டிசம்பர், 2024

பாரதிக்கும் ஆனந்திற்கும் ஒரு பிறந்த நாள் வாழ்த்து வெண்பா

பாரதிப வானந்த பன்னறிவுப் பாதைவகு
பாரதப் போரேறே பல்லுலகுந் - தீரறிந்த
வாரிதியே வாழ்த்துரைப்பேன் வையநீ வந்ததினந்
தூரிகையாற் சொல்லை வரைந்து

#வெண்பா #சிலேடை

செவ்வாய், 10 டிசம்பர், 2024

இம்மை செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

இம்மை மறுமை யிரண்டு மருள்புரிந்து
நம்மை வழிநடத்து நாயகன் - செம்மை
யுருவன் சிரமா றுடைய னமரு
மொருமயிலை யுள்ளநிறை யோர்ந்து

#வெண்பா

வியாழன், 5 டிசம்பர், 2024

தமதுவேட்கை கலிப்பா

 

தமதுவேட்கை யுருவெடுக்கக் கடிகைநேரங் கடிகையின்
மமதையற்ற தவமமர்ந்து மனமுவந்து பத்தர்கள்
கமலமொத்த விழிதிறக்குங் கதியளிக்குங் கார்த்திகை
யமுதவல்லி யுடனிருக்கும் யோகசிங்கங் காண்பரே
 
#தரவுகொச்சகக்கலிப்பா
 
 

பிரமனாக கலிப்பா

 

பிரமனாகத் தவமியற்று பவனநந்தன் மலையிது
பரமனாகப் புரியொடாழி கரமணிந்த கோலமா
யரவணைந்த திருவரங்கன் கரமுயர்ந்த சார்ங்கனும்
வரமளிக்க வுடனிருக்க வடிவமைந்த கடிகையே
 

திங்கள், 2 டிசம்பர், 2024

செவ்வாய்த் திருமகன் - செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

செவ்வாய்த் திருமகனை யெவ்வா றிசைத்துரைக்க
வொவ்வாத வற்றை யொழித்துயர - வவ்வா
றறிந்தா லெடுத்துரைப்பீ ரான்றோர்கா ணானுஞ்
செறிந்த தமிழ்செய்ய சீர் 

 

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...