திங்கள், 30 ஜூன், 2025

கறைகொண்ட மணிமாலை விருத்தம்

கறைகொண்ட கண்டன் கனல்வந்த நந்த 

கரைவந்தொ டுங்க வழியே 

மறைகண்ட விந்தை மறவள்ளி கந்த 

மதிவந்தொ டுங்கு மிடமே 

மறைவிண்ட கஞ்சற் சிறைகொண்ட பிஞ்சே 

மதிகொன்றை சூடி குருவே

குறைகொண்ட வென்னை நிறைகொண்ட மன்ன 

தமிழ்கொண்டு ரைப்ப னுனையே

ஞாயிறு, 29 ஜூன், 2025

ஆதி மூலவன் மத்தகோகிலச் சந்த விருத்தம்

 ஆதி மூலவ னாழி மாதவ 

        னானை காத்தவ                                             னன்பைமா

வாதி லாயுத மேந்த வில்லையென் 

     றேற்ற சூளுரை                                           பொய்த்தவீண்

சூதிலாடவர் தோற்றமாதுள 

       மெண்ண வக்கண                                               நின்றகூ

றாது போயினு மூது வேய்ங்குழ 

      னாத னுக்கது                                                        லீலையே  

 

சனி, 28 ஜூன், 2025

ஆடுமாமயில் மத்தகோகில சந்த விருத்தம்

ஆடுமாமயின் மீதுலாவிடு மாவினன்குடி காவலா
பாடுவார்பயில் பண்ணிலின்புறும் பைந்தமிழ்ச்சுவை பாவலா
வேடுவார்குயில் வள்ளிதேவியை வேண்டிநாடிடு காதலா
நாடுவார்பயி றீதிலன்பினி னாடுவோமுனை நாதனே

 

வெள்ளி, 27 ஜூன், 2025

யாதுமாகிய மத்தகோகிலச் சந்த விருத்தம்

யாதுமாகிய யாதவன்கழ லென்றுபெற்றிட வாழ்விலே தீதுலாவிய மேதினீமய லென்றுவற்றிட வோய்விலே சேதுவாகிய வாதிசேடனை நன்றுபற்றிட மாய்விலே போதுலாவிய வாதிமாமக ளென்றுமுற்றிட வாழ்விலே  

#மத்தகோகிலம்

 

வியாழன், 26 ஜூன், 2025

நித்தநாதர் பன்னிருசீர் விருத்தம்


நித்தநாதர் நெருப்புதித்த நந்தநந்தன் மருகனே
   நிர்த்தநாதர்க் கர்த்தஞ்சொன்ன வர்த்தநாரி நந்தனே
     சுத்தமான கங்கதேவி தோன்றுதேவ நாதனே

சித்துலாவு சித்தரேத்து தேவசேனை கேள்வனே
   யெத்தனான சூரடங்க வேலெறிந்த சித்தனே
      பத்தர்வாழ வர்த்தமீயும் பற்றதான கந்தனே

மித்தைவீழ ஞானமீயும் வேட்டுவச்சி நாதனே
   முத்துலாவு மார்பிலங்கு மெங்கணாதர் நாதனே
      சத்துசித்து மகிழ்வரூப முத்திநல்கு தத்துவ

புத்தியாளும் பிள்ளையாரின் சுட்டியான தம்பியே
   யத்தனாக வன்னையாக வண்ணிற்கு மாண்டவா
      நித்தமான நிலையளிக்கு நீயிருக்க வாட்டமே

 

சிந்தையொன்றி விருத்தம்


சிந்தையொன்றி யோகநின்ற சந்தநாதர் வேண்டிடத்
தந்தைதாயை மார்சுமந்து வந்தடைந்து நின்றகு
டந்தையென்ற சேத்திரம டைந்தமேன்மை யாதெனி
லெந்தைபத்தி சாரர்தங்கு மீடிலாத வேற்றமே


சீர் பிரித்து

சிந்தை ஒன்றி யோகம் நின்ற சந்த நாதர் வேண்டிட
தந்தை தாயை மார் சுமந்து வந்து அடைந்து நின்ற குடந்தை
சேத்திரம் அடைந்த மேன்மை யாது எனில்
எந்தை பத்திசாரர் தங்கும் ஈடு இல்லாத ஏற்றமே

Unifying thoughts and all senses the adept in yoga, master of rhythmic verses by his prayers brought Sriman Narayana to this place called Kudandhai(Kumbakonam), due to the fact that he wanted to come as quick as possible to see his
Bhakta, he just carried Sri in his chest and did not wait for his mount Garuda, he stayed there as Bhaktisara Varada, and this place Kudanthai's greatest merit is that BhaktiSara or Thirumazhisai Aazhwar chose to stay here forever!

Photo 

செவ்வாய், 24 ஜூன், 2025

பற்றாசு இறைவன் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

செவ்வாயிற் செவ்வேளைச் சிந்தித்துச் சீர்பெறவே
யிவ்வாழ்வை யீந்தா னிசைந்திறைவ - னவ்வாறே
யெவ்வாழ்வு மீங்கமையு மென்றறிந்தா லேற்றுவப்போ
மவ்வாழ்வைச் செவ்வாழ்வாய்க் கொண்டு

 

விதியிருந்தால் இருகுறள் நேரிசை வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

விதியிருந்தா னல்ல மதியடைந்தாற் கங்கை
நதிமைந்த னாள்வா னினைவு - கதியடைய
வாறுமுக னாரா தருளளிக்குஞ் செந்நாமங்
கூறிதினங் கொள்வோந் தவம் 

 

ஞாயிறு, 22 ஜூன், 2025

தற்புகழ்ச்சி கலி விருத்தம்

தற்புகழ்ச்சி யிழிவதென்று சாத்திரங்கள் கூறியுங்
விற்பதற்கு வேறதின்றி தன்னையேபு கழ்வதோ
வற்பனுக்கு வாழ்விலங்க வப்பனைம றப்பதோ
வெற்பெடுத்து மாரிகாத்த வேலைவண்ணற் பணிமினே 

 

சனி, 21 ஜூன், 2025

தமிழ் மொழி வாழ்த்து

 சிவனாரின் உடுக்கையிற் பிறந்தாய்ச் 
     செழிப்பாக ஆல்போல வளர்ந்தாய்த்
தவமாளும் திருநாட்டில் மலர்ந்தாய்த் 
    தமிழ்ச்சங்க அவைதனிலே குளிர்ந்தாய்
உவமிக்கப் பொருளில்லாத் திகழ்ந்தாய் 
    உயர்கந்தன் அருளாலே பொலிந்தாய்
நவமென்றும் நலியாது நகைத்தாய் 
    நகையாக காப்பியங்கள் புனைந்தே

 

பூனை கலிவிருத்தம்

 பூனைபோல வாற்றல்சேமி புவனமேழும் வெல்லலா
மானைபோல மதியிருக்க யாருனக்கு வல்லவர்
ஞானிபோல நிலைநிறுத்தி நல்லதல்ல திரண்டையுந்
தானகற்றி யுண்மைகாண நாளுனக்கு வெற்றியே

 

 

வெள்ளி, 20 ஜூன், 2025

நாள்கொண்ட கட்டளைக் கலித்துறை

நாள்கொண்ட மீனு நடுங்க வழகாய் நவமிருக்குங்
கோள்கொண்ட வாற்றலுங் கும்பிட் டளிதரக் கோட்டரையன்
மாள்கொண்ட சத்தி மகற்களிக் கச்சூர் மடித்தகந்த 
வேள்கொண்ட வேலை விடாதுள்வார்க் கில்லை வினைவயமே 

 

ஆதியான எண்சீர் விருத்தம்

ஆதியான புருஷனாய் மூலமான ப்ரக்ருதியா 

யன்புடைத்த தாயுமா யறிவளிக்குந் தந்தையாய்

 

தாதுவைந்தி னூடதா யாவுமாக பரவினாய்ச் 

சாகரத்தி லுழன்றிடு நாதியற்ற ஜீவர்க்குக்

 

கோதிலாத கலமதாய் வழிநடத்திக் காத்திடுங் 

கேடுசெய்யு மகிடனைக் கொன்றதுர்க்கை தேவியே

 

வேதாநான்கு போற்றிடு மீடிலாத வொருவளுன் 

வீழ்விலாத வெற்றியை யெண்ணியேத்த லின்பமே

 

வெங்கட்பணி வெண்பா

 வெங்கட் பணியணை வேலை துயில்கூரும்

வங்கக் கடல்கடைந்த மாதவனை - யெங்கட்

கிறைவனை யெந்நாளு மேத்துவார்க் குண்டே

நிறைவள நீள்பிரசன் னா


புதன், 18 ஜூன், 2025

சூதொரு கட்டளைக் கலித்துறை

சூதொரு பாகங் களவொரு பாகந் துணையிருக்க 
வாதொரு பாக மதமொரு பாக மதிமறைக்க
யாதொரு கால மமையப் பெறுமோ வவனருளான்
மாதொரு பாகன் மலரடி நீழன் மகத்தடைவே 

 

செவ்வாய், 17 ஜூன், 2025

மூன்றினங்கள் கலி விருத்தம்

மூன்றினங்கள் கொண்டநாம முருகநாம மென்பது
மூன்றுநான்கு  கரமுடைத்த  னுயிரெழுத்தை யொக்கவே
மூன்றிரண்டு முகங்கள்சேர மெய்யெழுத்துந் தோன்றிட
மூன்றுபுள்ளி யாய்தமாக தமிழுடைத்த வேலனே

 

ஞாயிறு, 15 ஜூன், 2025

வேலும் வெண்பா

வேலு மயிலு மிணைந்து மகிழ்திகழ்
வேலா விடிவுணர்த்துஞ் சேவலெங்கே - கோல
நிழற்க ணிகிரிலா நிற்கு முருவே
யுழலு முயிர்க்குத் துணை 

 

சனி, 14 ஜூன், 2025

கண்ணனன்ன கலி விருத்தம்

கண்ண னன்ன கட்டக் களியாட்ட
மெண்ண வெண்ண சொட்டு மவன்மாயை
யுண்ண வுண்ண வோயா சுவைநாளு
மண்ணி யென்னை யாட்கொள் வரம்பற்றே 

 

மால் செய்ய வெண்பா

 மால்செய்ய வல்ல மணிவண்ணன் சாகசம்

போல்செய்ய வல்லாப் புகழுடைத்தா - நூல்சொல்ல

வோயா வடிவுடையா னுள்ளங் கவர்கள்வன்

மாயைக் குளதோ வரம்பு

 

வெள்ளி, 13 ஜூன், 2025

பதினாறு விருத்தம்

 

பதினாறு கலையு மானவளே

    பதியடைய பாதை யானவளே

விதிநால்வர்க் கன்னை யானவளே

   விழைவார்க்கு வெல்லம் போன்றவளே

நிதியாள்வட் கருளை யீந்தவளே

    நிசவாக்கி னீங்கா நிற்பவளே

துதியாண்மை தூய்மை யீந்தவளே

    சுகமாளுந் தாயே காமாட்சீ

 

 

சீர் பிரித்து :-

பதினாறு கலையும் ஆனவளே பதி அடைய பாதை ஆனவளே

விதி நால்வர்க்கு அன்னை ஆனவளே விழைவார்க்கு வெல்லம் போன்றவளே

நிதியாள்வள் கு அருளை ஈந்தவளே நிச வாக்கின் நீங்கா நிற்பவளே

துதி ஆண்மை தூய்மை ஈந்தவளே சுகம் ஆளும் தாயே காமாட்சீ

 

பதினாறு கலையும் (ஶோடசி) ஆனவள் நீ, பதியை அடைய பாதையும் நீயே தான், நான்முகன் முதலிய ஐவர்க்கும் தாயானவள் நீ தான், உன்னையே விரும்புவார்க்கு நீ என்றும் திகட்டா இனிப்பின் சுவை, நிதிக்கிறைவியான திருமகளுக்கு அருள் தந்தவள் நீ, சத்தியத்தில் என்றும் நீங்கா நிற்பவள் நீ, உன்னைத் துதிக்க தூய்மையும் ஆளுமையும் தந்தவளும் நீயே தான் அம்மா சுகத்தை ஆளும் காமாக்‌ஷி

 

You are the form of sixteen kalas, you are the path to attain Pathi(Lord Shiva), you are the mother of Trimurthis, Maheswara and SadaShiva, you unending sweetness to your devotees, you graced Mahalakshmi and you are the unmistakable form of Satya/Truth, You granted me the purity and ability to sing your praises Oh Mother Kamakshi!

 

BRONZE KANCHI KAMAKSHI IDOL | www.tarangarts.com 

 

 

 

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி