கோதைபாணர் விட்டுசித்தர் மங்கைமன்னர் பொய்கையார்
வேதசாரந் தமிழுரைத்த மாறவிப்ர நாரணார்
பூதபேயர் பத்திசாரர் சேரமன்ன ரமுதனார்
தாதுரைக்குங் கவிஞரோடு மாமுனிச்சொஃ றஞ்சமே
வியாழன், 30 ஜனவரி, 2025
கோதை கலி விருத்தம் (நாலயிர திவ்யப் பிரபந்தம்)
தூங்கிட கட்டளைக் கலித்துறை
புதன், 29 ஜனவரி, 2025
தோட்டை கட்டளைக் கலித்துறை
தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற்
கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின்
ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடைந்து
காட்டை யடையாது காலம் வசமாகக் கைவருமே
செவ்வாய், 28 ஜனவரி, 2025
வென்றி கலி விருத்தம்
வென்றி வேண்டியே வெந்தழ லாகிறோங்
குன்றி நாளுமே கூற்றிடஞ் செல்கிறோங்
கொன்றை யார்சடைக் கூத்தனின் பாதமே
மன்று சேர்ந்தடை யெண்ணமென் றாளுமோ
ஆறுமுகம் வெண்பா ( செவ்வாயிற் செவ்வேள்)
ஆறுமுகங் கொண்டருள வானைமுகன் றம்பியுண்
டேறுமுகந் தானே யெமக்கென்று - நூறுமுகம்
போதாது கந்தன் புகழுரைக்க வென்றாலு
மோதாம லோய்ந்திடுமோ நாள்
வீடுவிட்டு கலிவிருத்தம்
ஞாயிறு, 26 ஜனவரி, 2025
குழந்தை விருத்தம்
குழந்தைநீ குமரிநீ குலங்காக்குந் தாயுநீ
குளிருநீ வெயிலுநீ கார்பொழியு மழையுநீ
யழுந்து வினைதீர்க்கு மமுதுநீ யழகிநீ
யடைவுநீ யசைவுநீ யசைவறியா விசையுநீ
யொழுங்குநீ யுணர்வுநீ யுணர்வறியா மூலநீ
யுயர்வுநீ யுதிர்வுநீ யுருவமைக்கு முமையுநீ
கொழுந்துநீ பழமுநீ குணங்கடந்த வாதிநீ
விழுந்துனையே நாளுந்தொழ விருப்ப மருள்வாயே
வெள்ளி, 24 ஜனவரி, 2025
மாதுளை (சிலேடை வெண்பா) - முருகனுக்கும் அம்பாளுக்கும்
மாதுளை வண்ண வடிவேலா வாழ்வளிக்கு
நாதியற்று நிற்போர்க்கு நல்லருளாய்த் - தீதொழிக்கு
மாறுமாறு நான்கு மணிநிற்குங் காத்தருளச்
சீறுமாறின் சேய்நேராந் தாய்க்கு
செவ்வாய், 21 ஜனவரி, 2025
சிவபூமி கட்டலைக் கலித்துறை
அறுசமயம் வெண்பா
ஹனுமான் விருத்தம்
நிலத்தினில் சீதையம்மன் விருத்தம்
வெள்ளி, 10 ஜனவரி, 2025
வேடந் தரித்து கட்டளைக் கலித்துறை
வேடந் தரித்து விளையாடி யன்பர் வினையறுக்கு
மோடு நதிபோ லுடனுக் குடனே வரமளிக்குந்
தேடுந் திருமா றிசைமுகன் காணாத் திகழொளியா
யாடு மரச னமர்திரு வாரூ ரரியணையே
வேதம் விருத்தம்
வேதந் தமிழ்செய்த மாறன்
வேலை கடந்தாண்ட தூதன்
மோதும் பகைபோக்கு நேமி
யோகத் தமர்ந்தாளு சிங்கஞ்
சீதை யிளையனோடி ராமன்
சீதத் திருவாழு மார்பன்
பாதந் தொழும்பேறைப் பெற்றேம்
பாவம் பொடியாகு மன்றே
அறுசீர் விருத்தம்
வியாழன், 9 ஜனவரி, 2025
மறையோது விருத்தம்
மறையோது மன்பர்க்கு மறைபொருளு நீயே
மதிகொஞ்சு மன்புக்கு மதிகாரி நீயே
குறையேது மெங்கட்குக் கிடையாது தாயே
குறைதீர்க்கு முன்குமரன் கொடுத்துவைத் தாயே
முறையேது நாமறியோ முனையேத்தத் தாயே
மூலத்தின் கனலாக வொளிந்துறங்கு தாயே
பறைவேண்டும் பத்தர்க்குப் பணிவளிக்குந் தாயே
பரைவேண்டும் பத்தர்க்குப் பரமானாய் நீயே
-எண்சீர் விருத்தம்
புதன், 8 ஜனவரி, 2025
நூறேசு வெண்பா
நூறேசு செய்தா னுடங்க வுடலிரு
கூறாகச் செய்தான் குரைக்கழலை - மாறாது
பற்று மடியார்க்குப் பற்றாதே யிவ்வுலகிற்
குற்றங் குறையென்றுஞ் சிற்று
காத்திருந்தால் பாவை
செவ்வாய், 7 ஜனவரி, 2025
பொய்யுண்ட வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
பொய்யுண்ட மெய்யுடைத்தும் புங்கவனைப் பாடவைத்
துய்வுண் டெனவுரைத்தா னாயேற்கு - மையுண்ட
கண்டத்தர் மைந்தனன்றோ கந்தையன் செய்தபிழை
கண்டிப்பான் கைவிடான் காண்
வேத நான்கின் கலி விருத்தம்
வேதநான்கி னந்தங்கூட சொல்லலொணாத மெய்ப்பொரு
ணாதவிந்து தத்துவத்தி னாதனான மெய்ப்பொரு
ணாதியற்ற வாக்களுய்ய ஞாலந்தோன்று மெய்ப்பொரு
ளோதவேலன் பெயரிருக்கக் குற்றம்பற்று மாசொலே
ஞாயிறு, 5 ஜனவரி, 2025
நீர்வண்ணன் கட்டளைக் கலித்துறை
நீர்வண்ண னாம னினைவெல்லா நிற்க நிலையருளிக்
கார்வண்ணன் காட்சி கனவிலுங் காணக் கதியருளித்
தார்வண்ணத் தண்டுழாய் மார்பன் விலகாத் திருவுடையா
னார்வண்ண னாட நமக்கரு ணல்கு நிகரிலியே
வெள்ளி, 3 ஜனவரி, 2025
வாலைக் குமரி வெண்பா
வாலைக் குமரி வடவழகி செம்பாக்கப்
பாலா திரிபுர சுந்தரி - ஞாலத்
தரசி யரசர்க் கரசி தருணி
வரிசையாய்க் காணவே கண்
வியாழன், 2 ஜனவரி, 2025
சிரத்தை வெண்பா
புதன், 1 ஜனவரி, 2025
வில்லேந்து கலி விருத்தம்
வில்லேந்து வீரனல்லேன் வெற்றியைச் சமர்ப்பிக்கக்
கல்லேந்து கோவில்செய்யக் கைத்திறனோ சற்றுமில்லை
சொல்லேந்து பாவமைக்கத் தூமதியைத் தந்தனைநீ
பல்லாண்டு போற்றிசைத்தல் பாவிக்கு முய்வன்றே
#கலிவிருத்தம்
செவ்வாயிற் செவ்வேள் வெண்பா
ஆண்டு பலகடந் தாயு ளதையிழந்து வேண்டிய வாழ்வு விளைந்ததோ - மீண்டும் பிறவிப் பெருங்கடல் வேண்டாமே சேந்தா சிறைவிடுத்துச் சீர்தாளைத் தா
விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
இரு மாதர் இத்திருவைக் காண்கிறார்கள் அதன் தாக்கமாக தமக்கிடையே இது இராமர் தான் என்று தனது கருத்தை முன்வைக்கின்றார் முதற்பெண், இரண்டாம் பெண் இ...
-
கெண்டையார் கண்ணினா ணிலவும் - சடைக் கிண்டியார் கங்கையா ளுலவும் தொண்டையா லன்றடக் கிடவும் - மதித் துண்டையார் சீர்முடிக் கரவும் மண்டையான் மா...