படைப்பார் படைக்கப் படைப்பார் படைப்பார்
படிப்பார் படிக்கப் பிடிப்பார் - படைப்பார்
படைப்பார் படைப்பாள் படைப்பாய்ப் படைக்கப்
படைப்பார் படைப்பார் படைப்பு
#வெண்பா
வெள்ளி, 28 ஜூன், 2024
படைப்பாள் வெண்பா
வியாழன், 27 ஜூன், 2024
திருச்செந்தூர் கட்டளைக்கலித்துறை
ஈரா றணிதோள னேறூரா னேறின் விசயபுரஞ்
சீரா யலைமோதுந் தீராப் பிறப்பிறப் பென்றுழலும்
பேரா பிணிபோக்கிப் பேறா யணைக்கும் பிரானுறையுந்
தீரா வினைவலி தீர்த்தருள் செந்தூர் திருத்தலமே
புதன், 26 ஜூன், 2024
பூமி பிராட்டி கலி விருத்தம்
மருப்பிளைத்த கைகளு மகட்கிசைந்த பார்வையும்
விருப்பளிக்கு நாதனை விழைந்திருந்த மங்கையின்
திருக்குயர்ந்த சேவையா சிரத்திருந்து தாங்கவே
கருத்துணர்ந்த கோலவன் பணத்தரவென் றானனோ
#கலிவிருத்தம்
செவ்வாய், 25 ஜூன், 2024
நிகரிலி கட்டளைக் கலித்துறை
ஞாயிறு, 23 ஜூன், 2024
அருண்மா மகள் கட்டளைக் கலித்துறை
அருண்மா வலையறு மங்கை யரசற் கருண்மொழிந்த
வருண்மா வலையறு மங்கை யரசர்க் கருண்மொழிந்த
வருண்மா வலையறு மங்கை யரசற் கடிபணிய
வருண்மா வலையறு மங்கை யரசற் குரைக்கணுமே
#கட்டளைக்கலித்துறை
வெள்ளி, 21 ஜூன், 2024
அருணகிரிநாதர் புகழ்மாலை
சந்தத் தமிழினிற் சங்கத் தமிழினிற் சான்றுரைக்க
வந்திப் பகலென வந்தித் தளிபெற மாண்பளித்துக்
கந்தக் கடவுளி னன்புக் குழுந்தை யருணகிரி
யிந்தப் பொடியனி னின்பத் துதியுனை யேற்றருளே
#கட்டளைக்கலித்துறை
வியாழன், 20 ஜூன், 2024
முற்றுமோனை இராமர் வெண்பா
தலைபத்துத் தத்திவிழ தானவனைத் தாக்கித்
தலைவிக்கா தாங்கி தனிமை - தலைமகனாய்
தந்தைசொல்லைத் தட்டாத் தனிமகனாந் தாசரதி
தந்தநெறி தாங்கு தலை
#வெண்பா #முற்றுமோனை
திருவரங்கத்து வெண்பா
அரங்கந் துயிலு மரவணையா னேரில்
திருபார் மகளுடன் சேவித் - தரங்கத்
துறையு முடையவர் தாமான மேனி
முறைகாண வைகுந்தம் வை
#வெண்பா
செவ்வாயிற் செவ்வேள் வெண்பா
அன்பே யுருவா மருண்மழை மேகவூற்
றின்பே தருமிவ னின்னாம - மென்பணியுங்
காபாலி கண்ணுதற் கந்தனை யேத்திதமிழ்
சீர்பாடச் செவ்வாய் சிறப்பு
#வெண்பா
கங்கை கொண்ட சோழன் விருத்தம்
நாதமுனிகள் கட்டளைக் கலித்துறை
வீராணந் தோன்றிய வித்தகா நாலா யிரப்பனுவ
லாரா வமுத னருளா லகில மனுபவிக்கத்
தீரா வினைதீர் திருமருந் தேதிவ்ய கானமரு
டீரா திருமால் புகழை நவிலு முனிநாதனே
#கட்டளைக்கலித்துறை
நாதமுனிகள் வெண்பா
அட்டாங்க யோகத் தறிவொளி பாருய்ய
வெட்டா நெறியை யெளிதுணர்த்த - வெட்டாளு
நாதனின் சீர்பாடு நாலா யிரந்தந்த
நாத முனிபிறந்த நாள்
#வெண்பா
வெள்ளி, 14 ஜூன், 2024
திருமகள் கொச்சகக் கலிப்பா
இருவானை நீர்சொரிய விடைநளின மனங்கவரத்
திருமாலைத் திகைவிக்குந் திருமகளே பிழைகோடி
புரிந்தாலு மிறைமறந்து திரிந்தாலு முயிர்யாவு
மரவணைத் தருள்வாயே தினநீயே திருத்தாயே
தரவு கொச்சகக் #கலிப்பா
திருமகள் வெண்பா
கோவிந்தன் மார்பிற் குடியிரு தேவிபுகழ்
பாவேந்திப் போற்றப் பவமறுமே - நாவேந்த
னாகத் திருவுடை மாலைத் தினந்தொழவே
தேகத் திறமளித்தான் றேவு
#வெண்பா
கோபமும் நல்ல குணம் வெண்பா
அறத்தை நிலைநாட்ட வம்புவியைக் காக்க
மறத்தின் வெளிப்பாடாய் வந்தால் - பிறருரைக்குஞ்
சாபமுங் கண்டுகொளாத் தாரணிக்கா தாம்பணிந்தாற்
கோபமும் நல்ல குணம்
வியாழன், 13 ஜூன், 2024
அபிராமி கட்டளைக் கலித்துறை
கூத்தாடுங் கோனிடக் கூறாளைக் கோழிக் கொடியுடையோ
னாத்தாளை யாழிவா ழாழியா னன்பிளை யந்தரியைக்
காத்தாளக் காருவா காணக் கனிநிலா காதணியை
யீத்தாளை யீடி லிறைவியை யேத்தாழ்ந் திசையிதுவே
#கட்டளைக்கலித்துறை
செவ்வாய், 11 ஜூன், 2024
யாவுமாய் உள்ள நேமியான் ஆசிரியப்பா
தீயிலே வெம்மையாய் நீரிலே தண்மையாய்
மேவிடும் வெளியதாய் மண்பயி றிண்மையாய்
வீசிடும் வளியுளாய் வாசமுள் வாசமாய்
பேசவு மியலுமோ வரம்பிலான் றன்மையை
நீசனை யாண்டனை நேமியாய்
வாசனை யுள்ளதோ வந்தனை வாழ்விலே
செவ்வாயிற் செவ்வேள் முருகு நாம வெண்பா
முருகனை யேத்த முராரி புராரி
திருவுமை வாணி திசைமுகன் சேர்ந்தே
யொருங்க ரருள்வ ருவந்து மறவேந்
தருவாய்த் திகழு முருகு
செவ்வாயிற் செவ்வேள் வெண்பா
பூவும் பழமும் புனைவேளைக் கண்டுவக்க
நாவு சிறக்காதோ நாயேற்குஞ் - சேவற்
கொடியுஞ் சிகண்டியுங் கூற்றழிக்கும் வேலு
மிடைவிடா தேத்துவதே பாங்கு
திங்கள், 10 ஜூன், 2024
மருதமலை முருகன் விருத்தம்
செங்கணேற்றவர் திங்களாற்றவர் மங்கையேற்றவ ரடியாரின்
செங்கணேற்றவ ரங்கமேற்றவழ் பொங்கராபுனை குருநாதா
சிங்கவேற்றவ ணங்கைமேற்றவள் செங்கைவீற்றருள் வடிவேலா
வெங்களாற்றமை யுன்னையேத்தவே கொங்குகோட்டுறை பெருமாளே
#கலிவிருத்தம்
பரீட்சித்தைக் காத்த பரமன் கலி விருத்தம்
பரிதவிக்கு மங்கைகரு பார்ப்புகழ வோங்கிடவே
யுருவொடுக்கி யுண்ணுழைந்தா னுத்தமனும் போர்முடிவிற்
பரிதவிக்கும் பல்லுலுயிரும் பாலிக்கப் பரந்தாம
னுருவெடுக்க நாணுவனோ வோங்கியுல களந்தவனே
#கலிவிருத்தம்
கோடைமழை கலிவிருத்தம்
கோடையுமிழ் வெப்பமிகை கோலமழை சீர்செய்யுங்
கோடிபணஞ் சேர்மிகையைக் கோடலளி சீர்செய்யும்
நாடிவருந் துன்பமெலா நாதனருள் சீர்செய்யும்
பாடியவன் பாதம்பணி பாழ்வினையும் பாங்குறுமே
#கலிவிருத்தம்
வியாழன், 6 ஜூன், 2024
செவ்வாயிற் செவ்வேள்
கந்த ரலங்காரங் காக்குங் கவசங்க ளெந்தை யனுபூதி யேற்றமளி விந்தை திருப்புகழ் சீர்வகுப்பு மாறல் புயங்கம் விருத்தமந் தாதி விரும்பு
புதன், 5 ஜூன், 2024
வேலவன் வெண்பா
அரவணி நாத ரனலுதித்த மைந்தா
அரவணைவா ரன்பு மருகா - சரவணப்
பொய்கை வளர்ந்த பொருப்பாளு மாமயிலா
வைகைதமிழ் வாழ்த்துரைக்க வாழ்த்து
#வெண்பா
திருமண வெண்பா
துயரே யுருவாய்த் துளிரும் பயிரா
மயர்வே யமையு மதனா - லுயர்வே
யொருபோது மொட்டா தொழியு முணர்வாய்
திருமணந் தீவாய் நரகு
திங்கள், 3 ஜூன், 2024
தாயார் கட்டளைக் கலித்துறை
வாணேர் விழியாள் வனப்பின் மயங்கி வினைப்பயனாய்ப்
பூணார் முலையாள் பொலிவிற் றிளைத்துப் புலமைமிகு
மாணா மதுர மொழியா ளவடன் மகத்துரைக்க
வாணா ளடையு மலர்த்தாள் பணிவா மறைப்பயனே
#கட்டளைக்கலித்துறை
வேலவன் கலி விருத்தம்
வேடவேடம் பூணிவந்து வேழவேழத் துணையுட
னோடியாடிக் கானமேவு வேடமாதைச் சேரவே
நாடினாடிக் காதலித்த நாலுவேத நாயகா
வீடுதேடி வாடுமாவின் வேதனைதீர் வேலவா
இளையராஜா விருத்தம் வெண்பா
இசைதரு மிசைத்தரு வெண்பத்தொன் றெட்ட
விசைதரு மிசைக்கொரு வின்பத்தமிழ் சொட்ட
வசைவுறு நசைக்கொரு வன்புக்கவி யிட்ட
நிசைவரு மிசைக்குரு சந்தத்தமிழ் மெட்டே
கலிவிருத்தம்
இசை தரும் இசை த்தரு என்பத்து ஒன்று எட்டி
விசை தரும் இசைக்கு ஒரு இன்பத்தமிழ் சொட்ட
அசைவுறு நசைக்கு ஒரு அன்புக் கவி இட்ட
நிசை வரும் இசைக்கு உரு சந்தத் தமிழ் மெட்டே
இளையர்க ணெஞ்சி னிசைத்தேவன் காதல்
விளைவிக்கு மாக்கு மிறைவன் - களைவானே
துன்பத் துயர்தீர தூய னழித்தலு
மன்பா யருளுமிரா சா
வெண்பா
இளையர்கள் நெஞ்சின் இசைத் தேவன் காதல்
விளைவிக்கும் ஆக்கும் இறைவன் களைவானே
துன்பத் துயர்தீர தூயன் அழித்தலும்
அன்பாய் அருளும் இராசா
தோட்டை கட்டளைக் கலித்துறை
தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...
-
விஶ்வநாதாஷ்டகம் பா வகை (poetic metre): வசந்த திலகா ஆதிசங்கர பகவத்பாதர் அவர்கள், “வசந்த திலகா” என்னும் பாவகையினை வடமொழில் கையாண்டுள்ளார். ...
-
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான அலைகட லஞ்ச கணைதொடு வெந்தை யகிலமு தித்த திருநாளி லறுசுவை யுண்டி யடையவி ரும்பு மனமுள...
-
துடியிடை மடமயி லொருபாதி துகிலென வரிகரி கொளுமாதி சுருதியி னுரைபொரு டனைமேவி சுகமளி மதுமொழி யுறையாவி யடலிடை வருவ...