வேலீமாதா மாமாயா காரீசீதா காமாயீ
யீமா கா தாசீ ரீகா யாமாமாதா மாலீவே
புதன், 30 ஏப்ரல், 2025
செவ்வாய், 29 ஏப்ரல், 2025
பிறைகொண்ட விருத்தம்
பிறைகொண்ட செஞ்சடையார் பங்கானாய்ப்
பிழைகொண்ட பிதாதரு வுடனீத்தாய்
நிறைகொண்ட நாரணர்க் கிளையானாய்
நினைவேண்டு மன்பர்க்கு நிலையானாய்த்
திறைகொண்ட புதல்வர்க்குப் பொலிவீந்தாய்த்
திரைகொண்ட வேறந்த தாயானாய்க்
குறைகண்ட வுயிர்கட்குத் திரையானாய்க்
குடிகொண் டெமையாளும் பகவதியே
துகளென்று வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
துகளென் றிருந்துஞ் சுடர்வேல னம்மை
யகலா திருப்பா னணைத்துச் - சிகியேறு
சண்முக னன்பின் றலைவடிவ னாறதோ
பெண்முகங் கொண்ட பிரான்
ஞாயிறு, 27 ஏப்ரல், 2025
விண்டிறக்க கலி விருத்தம்
விண்டிறக்க வேண்டிநிற்க வீணரென்று தூற்றுவார் விண்டிறக்க சமயந்தன்னை வேறுவேறு கூவுவார் கண்டிறக்க மாந்தநேய மென்பதென்ன வாகுமோ கண்டிறக்க வேண்டுமின்று கடினமான நேரமே
ஆறுமொன்ற கலி விருத்தம்
ஆறுமொன்ற வணைத்தவுந்த வன்னைதந்த வருளையு நூறுமொன்று நூறநின்ற நாரணன்ற னழகையு நீறணிந்து நட்டமாடு நீலகண்ட னறிவையுங் கூறணிந்த கந்தநாதன் கோதினாமங் கூறுமே
பரியேழும் வெண்பா
பரியேழும் பூட்டு பரிதியினைப் பார்க்க
விருளாழு மிவ்வுல கேழும் - வரம்பெறுமாம்
ஞாலத் தொளியாளு ஞானத் தொளியாளும்
வேலைக்கண் வெய்யோ னுதித்து
குறைவொன்றும் அறுசீர் விருத்தம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா
நிரைகாக்குங் கொடைவள்ளல் கோபாலா
சிறைவென்ற வசுதேவன் றிருமகனே
திருவாழுந் திருமார்ப ஸ்ரீதரனே
நிறைகொன்ற பார்த்தனுக்குச் சாரதிநீ
நிறைகின்ற கருவண்ணச் சுந்தரனே
குறைகின்ற கயிறுக்கும் பணிவாயே
குணவதியின் மைந்தாதா மோதரனே
சாமரங்கள் கலி விருத்தம்
சாமரங்கள் வீசுவாணி செல்விதேவர் மூவரு
நாமலர்ந்து பண்ணிசைக்கு நல்லபத்தி சித்தருந்
தூமலர்ந்த பூவளிக்குந் துங்கபத்த மாந்தருங்
காமன்வெல்லக் கண்மறைந்த தேவியுன்றன் பிள்ளையே
வெள்ளி, 25 ஏப்ரல், 2025
தயங்கி கலி விருத்தம் (பொன்மார் தியாக வினோத பெருமாள் கோவில்)
தயங்கிநின்ற பத்தருள்ள முணர்ந்தறிந்து காக்கவே
யியங்குகோல சக்கரத்தை யேந்திநிற்கு மெம்பிரான்
மயங்கிநின்ற முனிவருய்ய வம்பரீச னிசைந்திடச்
செயங்கொளாழி தணிந்துநின்ற சிறந்தவூர்பொன் மாரிதே
வியாழன், 24 ஏப்ரல், 2025
சக்கரக் கட்டளைக் கலித்துறை
சக்கரத் தாற்றலை கொண்டாய்ச் சபையிற் சிசுபாலனின்
சக்கரத் தாற்றலைக் கொண்டாய் நகத்தி னரசிம்மத
சக்கரத் தாற்றலை கொண்டாய்ச் சரணா ரவிந்தமாவா
சக்கரத் தாற்றலை கொண்டா யெமக்குக் கதிதரவே
புதன், 23 ஏப்ரல், 2025
தாழ்வில் வெண்பா
தாழ்வி லிருந்துந் தலைக்கென்று மேறாது
பாழ்நரகு தோன்றும் புனிதமாய் - வாழ்விற்
பெருவாரி யின்பம் பிறவா தொழியுங்
கருமாதி கல்யாண மொன்று
செவ்வாய், 22 ஏப்ரல், 2025
மூலையில் கலி விருத்தம்
மூலையி லிருக்கு மேறானை காண்பாரின் மூலத்தி லிருக்கு மேறானைக் காண்பாரில் வேலையில் வதங்கி வேறேது மெண்ணாது சோலையி லிருக்குஞ் செல்வத்தைக் காணோமே
நீரகத்தின் கலி விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)
நீரகத்தி னாரணர்க்கு நன்கமைந்த மருகநீ
போரகத்திற் புன்சிரித் திகலழிக்கும் புங்கவ
பாரகத்தி னான்குநின்ற பாங்குடைத்த வூர்திரு
வேரகத்தி லீசருக்கும் பொருளுரைத்த பாலனே
தாதை ஏகாக்ஷர வெண்பா
தாதை துதித்தத்தி தீதுதத்துத் தேதுதித்த
தூதீத்தத் தேதே துதித்தது - தேதே
திதத்தாதோ தத்தித்தா தீத்தே துதித்த
துதித்தேத்து தூதாதீ தோ
புதன், 16 ஏப்ரல், 2025
முந்நீர் விருத்தம்
காத்தழித்துப் படைத்துநின்ற நீரின்செய்கை மூன்றுள
மாத்திரைக்கு மண்பிறந்த சாத்திரங்கள் கூறுமே
பூத்திருக்க புவனமெங்கு நீரின்றேவை யவசியம்
போர்த்திநிற்கு மூழிநீரி னுலகடங்கிப் போகுமே
செவ்வாய், 15 ஏப்ரல், 2025
மதிமயங்கி கலிப்பா
காற்றே ஆசிரியப்பா
காற்றே புதல்வன் காகுத்த பத்தன் வாற்றே கொடியாய் விசயற் கருளிக் கூற்றே அனைய கொடும்போர் நடத்தி நூற்றவர் வீழ நுண்மதி செலுத்திக் காற்றே அனைய வைவரைக் காத்த பாற்றிரை துயிலும் பரமன் மெச்சு நாற்றிசை போற்று மாறிரு மருகா
தோற்றிசைந் தானே வீற்றிரு மயிலாய்ச் சாற்றிடு சேவலங் கொடியாய்ச் சூர னேற்றனை யன்பா யேறூர்ந்தா னேறே வேற்றே மாற்றோர் கூற்றே சீற்றஞ் சிரிப்பா னிறம்புனை வோனே
திங்கள், 14 ஏப்ரல், 2025
கனகவேத கலிப்பா ( தமிழ்ப்புத்தாண்டு)
கனகவேத கோடதூது கலியகற்று கேசவா
சனகமாது மனதையாளு மதிமயக்கி ராகவா
செனனமான புதியவாண்டை யினிதழைக்க வாழ்விலே
யுனதுதாளை மதியமர்த்தித் தமிழுரைத்தல் கோலமே
பையரவம் கலி விருத்தம்
பையரவந் துயில்பவனோ வுய்யவரந் தந்துவப்பான்
மெய்யரவம் பூண்பவனோ செய்யவர மெளிதளிப்பான்
தையலுமை வேறந்த செய்யவளின் மகள்கேள்வன்
நையவருந் துயர்களையும் பொய்யெனவே சேர்த்தழிப்பான்
வெள்ளி, 11 ஏப்ரல், 2025
தேர்கொண்ட விருத்தம்
தேர்கொண்ட விசயற்குக் கொடியானாய்
வால்கொண் டிலங்கைக்குத் தீவைத்தாய்
வார்கொண்ட திருமகளைக் காண்பதற்கே
வான்கொண்ட பாதையினைத் தேர்ந்தெடுத்தாய்ப்
பார்கொண் டிராமகாதை பரப்பிடவே
பேர்கொண்ட வைகுந்தநீ வேண்டிலையே
சீர்கொண்ட ஸ்ரீராம னாமமொன்றே
நீர்கொண்ட மீனைப் போற் சுவாசித்தாய்
தேவசேனை விருத்தம்
தேவசேனை நாதனின் றிருமணத்துக் கோலமோ
சீதைராமன் சேர்ந்திடுந் திருமணத்துக் கோலமோ
பாவைசெய்த பைங்கிளி பதியடைந்த கோலமோ
பூசைசெய்த பார்வதி பதியடைந்த கோலமோ
பூவமர்ந்த பாவையுந் திருவரங்க நாதனும்
புன்சிரிப்புப் பூத்திட மருவுகின்ற கோலமோ
சேவைகாண வுற்றதே திருவளித்த பேறென
சீர்விளங்கு பங்குனி யுத்திரத்தை யேத்துவாம்
பற்றுகின்ற கலி விருத்தம்
பற்றுகின்ற பற்றைநீக்கிக் குற்றமற்ற பற்றினை
யெற்றுநானும் பற்றிநிற்க வெற்றயன்ற சுற்றினிற்
குற்றமற்ற கொற்றிபெற்ற வெற்றிவேலைப் பற்றிடு
கற்றுவந்து கொற்ற(ங்)கொள்ள வெற்றுபெற்ற பெற்றியே
பராசக்தி துதி விருத்தம்
1.
நாடுவிட்டு நாடுசேர்ந்து மாடுசேர்க்கு மாந்தரோ
யாடுவெட்டி வேள்விசெய்யு மாறுபற்று மாந்தரோ
கூடுவிட்டு கூடுபாயுஞ் சித்தறிந்த மாந்தரோ
வீடுபற்ற வேண்டுமென்ற விழைவளிப்ப ளிறைவியே
புதன், 9 ஏப்ரல், 2025
ஓயாமல் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)
ஓயாம லுழல்வதற்கு வழிபலவா முலகெங்கு
முன்னாமஞ் சொல்வதற்கோ வுணர்வில்லை முன்பெல்லா
நாயாக வலைந்தேனை நாட்டம்பல கொண்டேனைத்
தானாக வந்தாண்டு நல்வழியி லமர்த்தினையே
தோயாமற் தோயமேற் றாமரைபோல் வாழ்வதற்குத்
தூமலராண் மருகோனே வுனையன்றி யாருரைப்பார்
சேயோனை வாயாரச் செந்தமிழாற் செப்பிடவே
சிறியேனை வைத்தவனைச் சாந்துணையு மறவேனே
செவ்வாய், 8 ஏப்ரல், 2025
காமம் நன்று கலி விருத்தம்
காமநன்று சித்தியாக நோன்புநோற்கு நாளிது
சேமநன்று சித்தியாகு முறையறிந்து செய்திடின்
காமனன்று ஸ்ருஷ்டிசெய்த வாமரூப கண்ணனைக்
காமமென்று தேர்வுசெய்து கதியடைந்து கொண்மினே
மன்றில் வெண்பா
மன்றி னடித்தாய் மலைமகளைக் காலோங்கி வென்றாய் மிளிர்வெள் விடைபாகா - தொன்று கடல்வந்த நஞ்சுண்டாய்க் கண்டங் கறுத்தா யுடல்வந் தொளிதா வுயிர்க்கு
வில்லிறுத்து விருத்தம்
பூதப் பொருபடை விருத்தம்
பூதப் பொருபடைச் செயல்வீரா
பூவை வலம்வரு மயினாதா
வாதத் தயில்விடு முமைபாலா
வாஞ்சைக் குருதரும் வ(ள்)ளிநாதா
சோதித் தருடருஞ் சுடர்வேலா
சோழத் துரைதருந் தமிழ்நேயா
கீதத் துதிசெய வுனைநாளுங்
கீழ்வற் களிதருங் குகனேசா
திங்கள், 7 ஏப்ரல், 2025
கம்பற்கிளையாளை கலி விருத்தம்
கம்பற் கிளையாளைக் கம்பற் கினியாளைக்
கம்பத் திளையாற்குக் கைவேலை யீந்தாளை
யும்பர்க்கு மேலான யூழிக்கு மூலாளைக்
கும்பிட் டுயர்வாரைக் கும்பிட்டே யுய்வோமே
வெள்ளி, 4 ஏப்ரல், 2025
உடை தேவை வெண்பா
மாமயை வெண்பா
மாமாயை யன்னையாய் மாமாய னம்மானாய்த் தீமாயக் காமனைச் செய்தவன் றந்தையாய் நாமாய நின்றகந்த னாமங்க ளுள்வதே நாமாய நல்ல வழி
விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
இரு மாதர் இத்திருவைக் காண்கிறார்கள் அதன் தாக்கமாக தமக்கிடையே இது இராமர் தான் என்று தனது கருத்தை முன்வைக்கின்றார் முதற்பெண், இரண்டாம் பெண் இ...
-
கெண்டையார் கண்ணினா ணிலவும் - சடைக் கிண்டியார் கங்கையா ளுலவும் தொண்டையா லன்றடக் கிடவும் - மதித் துண்டையார் சீர்முடிக் கரவும் மண்டையான் மா...