எங்கு நிறையிறைவா வெங்கண் மனத்துறைவா
தங்கு மறிவளிவா தந்தி முகற்கிளையாசெவ்வாய், 30 செப்டம்பர், 2025
எங்கும் கலிவிருத்தம் செவ்வாயிற் செவ்வேள்
சதுரங்க கலி விருத்தம்
சதுரங்க ராணி சமர்வெற்றி ஈவாள்
கதியென்றும் ஈயும் கணைவிழிகள் எங்கே
மதியென்றும் மேவும் மனையாளே உன்னை
விதியென்ற வேடன் மறைத்தானே கண்ணே
சனி, 27 செப்டம்பர், 2025
பற்றாசை
பற்றாசை விட்டதோ பண்டத்தின் மீதென்றுங்
குற்றேவல் செய்தேனுங் கூத்தாடி நின்றேனுஞ்வியாழன், 25 செப்டம்பர், 2025
யமனில் தொடங்கி சிவனில் ஈறும் வெண்பா
யமன்றீண்டு பால னிமைப்பொழிதிற் காக்க
யமன்மாயக் காலா லுதைத்தான் - றமர்க்காக்க
யாதுங் கொடுக்கு மிணையிலா மாதேவன்
மாதொரு பாகன் சிவன்
செவ்வாய், 23 செப்டம்பர், 2025
அழகின் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
அழகி னிலக்கண மாறுமுக னாவாற்
பழகு மிலக்கணம் பாங்கன் விழுப்புகழ்திங்கள், 22 செப்டம்பர், 2025
பழையவேந்து தரவு கொச்சகக் கலிப்பா
பழையவேந்து நெடியனாம் பரமனேந்து கொடியனே
சனி, 20 செப்டம்பர், 2025
பத்திர மேற்றுயில் பாலகன் விருத்தம்
பத்திர மேற்றுயில் பாலகன்
பத்திர மேற்றுயர் பாலகன்
தீது மாய்ந்திட விருத்தம்
தீதுமாய்ந்திட ஞானமீள்வர யாதுமாகிய மெய்யினைச்
சூதிலாழ்ந்திடு பாண்டுபுத்திரர் வாதுவென்றிட மைய்யமாய்மெய்யும் மெய்யும் விருத்தம்
மெய்யுமெய்யு மியைந்திருக்கப் பொய்யுரைத்த லாகுமோ
பொய்யுமெய்யும் புனைந்திருக்க மெய்ம்மலிந்து போகுமோநாராயண நாமம் கலி விருத்தம்
நாரா யணநாம நம்மை நெறிப்படுத்தும்
பாரா யணஞ்செய்யப் பாவ மறுத்தெறியும்
நேரா யனயாவு நீள வரத்தருளும்செவ்வாய், 16 செப்டம்பர், 2025
வாழ்வது கலி விருத்தம் செவ்வயிற் செவ்வேள்
வாழ்வது மாயை வடிவன் நினைவற வீழ்வ துறுதி வினைவசத் தாட்பட்டுத் தாழ்வ தகற்றச் சரவணன் றாட்பணி வாழ்வது வானோர் அமுதமு மாமே
திங்கள், 15 செப்டம்பர், 2025
சௌம்ய வெண்பா
சௌம்ய வுருவன் சரவண சண்முகன் கௌமாரத் தாற்றின் கதியருண் – மௌன வுபதேச நால்வர்க் குவந்தளித்த வீசற் குபதேச சாமிநா தன்
தினேசன் வெண்பா
தினேசன் சுரேசன் அமேயன் சிறீஜா மணாளன்விண் மாதேசன் சௌம்யன் - அனாதிதே தாட்சிண்யன் அட்சயன் சங்கேதன் தைவீகர் ஆட்சிமீள் பத்துமினி தாற்று
சனி, 13 செப்டம்பர், 2025
வடை பாயாச லட்டு முறுக்கு சாங்கிரி வெண்பா
உயர்வடைப் பாயாச வூழியி லட்டு முயிர்முறுக்குச் சற்றா வுளன - துயருறச் சாங்கிரியை கண்டுநின் றாட்பணியா வீணழியத் தூங்குவையோ தூமலராட் கை
பாரதத்தை விருத்தம்
பாரதத்தைப் போக்கவந்த பாங்குடைத்த பாரதன் பாரதத்தை மீட்கவந்த பார்பணித்த கோமகன் பாரதத்தைக் கையெடுத்துப் பார்வியக்கச் செய்தநம் பாரதிக்கு நேருரைக்கப் பாரனைத்தும் போதுமோ
செவ்வாய், 9 செப்டம்பர், 2025
மகேசன் அருண் சுந்தரம் வெண்பா
மகேசனிள மைந்தன் மறவள்ளி நாதன்
குகேசன் குறைகளை யாறு - முகேச
னருண்முகத் தொன்றை யணுக வடைவோந்
தெருண்மனஞ் சீர்சுந்த ரம்
மண்டேன் (Mundane) மணமறிந்து வாழ்! வெண்பா
செயலாற் சிறப்புச் சிதைவிலாச் சிந்தை முயலா துயர்வளஞ்சேர் நாடா - வயலார்தம் பண்டேன் படைப்பின்மேற் பாசத்தொ டேக்கமேன் மண்டேன் மணமறிந்து வாழ்
செவ்வாயிற் செவ்வேள் விருத்தம்
கரையில் கருணைக் கடலே கடையில் லருளு மருளே உரையி லுணரா வுயர்வே உணர்வி லுறையு முயிரே புரையில் புனிதப் புகழே புடைசூ ழிருமா தழகே விரைவின் மதிவா குகனே வினையின் மறவா திரவே
திங்கள், 8 செப்டம்பர், 2025
நிறைமதி வெண்பா
ஞாயிறு, 7 செப்டம்பர், 2025
மூவடி வெண்பா
மூவடி வைத்து முழுது மளந்தானின் சேவடி பற்றிச் சிறப்புறுவார் – நாவடியிற் கற்கண் டடக்கக் கரையுஞ் சுவையன்ன தற்கொண்டாற் போன்றிரு தாள்
சென்றிலங்கை விருத்தம்
சென்றிலங்கை செற்றுவந்த சீதைகேள்வன் பாங்கனா கன்றெறிந்து கனியுதிர்த்த குட்டன்கண்ணி மைந்தனா பன்றியாக வாரிசென்று பாரைமீட்ட கொம்பனா கொன்றுபொன்னன் குடர்களைந்த கூருகிர்த்த சிங்கனே !
வெள்ளி, 5 செப்டம்பர், 2025
அறிவால் கலி விருத்தம் (தோடகம்)
அறிவா லறிவா ரருவாய் விளங்கும் நெறிவா யறிவார் நினைவா ருருவாய்ப் பொறிவா யறிவார் புனறீ யிணையச் செறிவா ரறியுஞ் சிவசத் தியனே
புதன், 3 செப்டம்பர், 2025
நாராயணன் துதி (அஷ்டகம்)
(நாராயண நாராயண நாராயண என்போம்)
1.
தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்திரு மேனித்தலை வன்றன் ஓராயிர நாமந்தனி லொன்றிற்கரை வோமே
செவ்வாய், 2 செப்டம்பர், 2025
பாண்டியனின் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
பாண்டியனின் பேரனுநீ பாங்கிருவர் கேள்வனுநீ வேண்டுதிரு மார்பணையு மாலின் மருகனுநீ பூண்டதெல்லாம் வெற்றிகரப் போர்ஞானப் புங்கவனீ யாண்டியாய் நின்றது மேன்?
மாலைகொண்ட விருத்தம்
வேலைவேலைவேலை விருத்தம்
ஆறுமுக விருதம்
விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
இரு மாதர் இத்திருவைக் காண்கிறார்கள் அதன் தாக்கமாக தமக்கிடையே இது இராமர் தான் என்று தனது கருத்தை முன்வைக்கின்றார் முதற்பெண், இரண்டாம் பெண் இ...
-
கெண்டையார் கண்ணினா ணிலவும் - சடைக் கிண்டியார் கங்கையா ளுலவும் தொண்டையா லன்றடக் கிடவும் - மதித் துண்டையார் சீர்முடிக் கரவும் மண்டையான் மா...