வெள்ளி, 31 மே, 2024

திருவோடு சிலேடை வெண்பா

திருவோ டுறையுந் திருவே திருவா
மிரவோ டுறையு மிருளா - யரவோ
டரளு மருளே யருளா மருளே
கரவோ டருளு மருள்     

வியாழன், 30 மே, 2024

பழனியாண்டவன் கலிவிருத்தம்

கோலமர்ந்து கோளகற்று(ங்) கோலவாசு கிளியுடை
ஆலமர்ந்த மௌனநாத னாசிபெற்ற குருபரன் 
ஞாலமேழு முண்டுமிழ்ந்த ஞானபால னினைமகிழ்
பாலவேல ஞானநாத னீடுவாழும் பழனியே

கலி விருத்தம் 

புதன், 29 மே, 2024

மாருதி வெண்பா

 

தன்னிறைவிற் சான்றோனாந் தாசரதி தாசனுய
ரின்னுரைக்கு மீடி லிலக்கணத்தான் - மன்னனுடன்
மாவிணங்க வாயுவழி வானுயர்ந்த மாருதி
தீவிலங்கத் தீவைத்தான் றேர்ந்து
 

வைகுந்தன் வெண்பா

 

கூடேறி நின்று குவலயத்தே வாழ்வெடுத்
தீடேறி யென்று வினையறுமோ - வீடேற
வைகுந்தன் றாள்பற்றி வையகத்தை விட்டொழியச்
செய்கின்ற சேவைசெயச் செய்
 

முற்றெதுகை மாருதி விருத்தம்

 

தற்பொலிரும் விற்புருவச் சிற்பமென கற்புமக
ணற்கணவன் விற்பொருனன் சொற்பணியுந் தற்கிளைய
னிற்பதற்குப் பொற்புடைய வெற்பெடுத்துச் சொற்பரனு
நற்பணியாய்த் தற்கரத்திற் கற்சுமந்தா னற்புதமே

கண்ணன் பாதம் விருத்தம்

 கள்ளச் சகட முதைக்க கவீனங் களவாட வேற வெள்ளத் தரவின் றலைமேல் விகடக் கூத்துப் புரிய மெள்ளத் துயிலும் பொழுது வேடன் கணையை யேற்க வுள்ளத் துறையு முயிரே வுன்னைக் காக்கு முத்தே

அறுசீர் விருத்தம் 

செவ்வாய், 28 மே, 2024

காதலர் காலாமே கால்

காலற்குக் காலனுங் காதலுற கைபேசி மாலுற் றுழல்வனோ மாமாயன் மாலுற்ற மாதர்தங் கோவே மயங்கினான் மானுடக் காதலர் காலாமே கால்

கனியென்று இனிக்கும் கழல்

இவையா வுலகளந்த வீடிலாப் பாத மிவையா பணிநடித்த வேற்ற - மிவையா முனிபலர் காண முனையு மடிகள் கனியென் றினிக்குங் கழல் #வெண்பா

திங்கள், 27 மே, 2024

செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

கிளிப்பாவைக் கேட்குங் கிழவன் குமர னளிப்பார்வை நம்மே லணுக -விளிப்போங் களிப்போ டவன்மேல் கவியை யிதுவே யுளத்தூய்மைக் கான்ற வழி

சனி, 25 மே, 2024

வேங்கட சுப்பிரமணியர் விருத்தம்

 

அம்மானை யொத்தத் திருமேனி கொண்ட

    வம்மானை  யொத்தத்த்  திருநாமஞ் சாத்தி

யம்மானை யொத்த வழகழியா வேந்தே  

   செம்மானின் செல்வி குறமாதி னாதா

செம்மானே சேவற் கொடியாளும்  வேலா 

   உம்மாணைக் காக வுருகுவதே வாழ்விப்

பெம்மானைக் காணப் பிணியேது முண்டோ

   வெம்மானை யென்று மிசைவதுதா னாவே  

-எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்  

வியாழன், 23 மே, 2024

மாதவன் மாறன் சிலேடை வெண்பா

மாமகிழ் மாறன் மதுரமொழி யாயிரம் பாமகிழ்ந் தோதுவர் பார்முழுது - நாமகி ழன்னையா யத்தனா யாண்டுவக்குந் தென்குருகூர் மன்னனு மாதவனு மொன்று #வெண்பா

புதன், 22 மே, 2024

வைகாசி விசைகக் கலித்தாழிசை

தேவானையுதவு தீவானினிலவு மாவாதினடைவு
தேவாரையுதவு தேவானையுறவு மாகேசனறிய
தேவானையுரிய ஞானாசன்கிரியி னாவாரமொழியு
மாவேதவடைவு மூவானைநினைவு தாவாதுமொழிவ   னே
    

செவ்வாய், 21 மே, 2024

செவ்வாயிற் செவ்வேள்

கற்புங் களவுங் கடைபிடிக்குங் கந்தையா வெற்புறை வேந்தே விளங்கொளியே - பொற்புடைப் புன்னகை பூணுமிரு பூவை புடைசூழ்ந்த மன்னவா வாழ்த்தவுனை வாழ்த்து

திங்கள், 20 மே, 2024

மாதேகி கட்டளைக்கலித்துறை

மாதேகி வாமன னாமா வலிக்கு மகத்தளித்தாய் மாதேகி வானரத் தூதாண்டுச் செற்றாய் மதிளிலங்கை மாதாகி வானோர்க் கமுதளித் தாயன்று மோகினியா மாதேகி மாயன்றன் மாண்புரைக் காதேது மாதவமே #கட்டளைக்கலித்துறை

புதன், 15 மே, 2024

முருகன் மாலைமாற்று

தாயுலா வேதவா வாதுகா வேடவா தீயதீ
தீயதீ வாடவே காதுவா வாத வேலாயுதா

#மாலைமாற்று 

செவ்வாய், 14 மே, 2024

மாயன் பாவை

தித்திக்கும் வெண்ணெய் திருடுந் திருடனை எத்திக்குத் தேடினு மீடிணை யில்லானைப் புத்திக் ககப்படாப் புண்ணியனை யாதியழை யத்திக்குப் பேறளிக்கு மத்திகிரி யாள்வானை 

 முத்திக்கு மூலவனை மூவா முகுந்தனைப் பத்திக்குப் பேர்போன பண்பாளர்  கோமானைப் பித்துற்ற பேதைபோற் பாடாது போம்வாழ்க்கை வித்துற்ற தேனோ விளம்பேலோ ரெம்பாவாய் 

இராமானுசர் கலித்துறை

கராவின் பிடியிற் கதறிய வானைக் கருள்புரிய வராவின் பகைமேல் விரைந்தே வருமோ ரரவணையான் பராப ரனென்று பறைசாற்றப் பார்மிசை பாங்குதித்த விராவி னிருணீக் கிரவியா யாளும் யதியரசே #கட்டளைக்கலித்துறை

ஆதி சங்கரர் கலித்துறை

இரண்டல வென்ற விறைமெய் யியலை யினிதுரைக்க முரண்பல வென்று முழுமுத லொன்றேயிங் குள்ளதெனத் திரன்பட வாதிட்டுத் தேர்ந்து நிறுவ செகதலத்தி லரன்பெயர் கொண்ட வதரித்த காலடி மாமுநியே #கட்டளைக்கலித்துறை

சங்கரரிராமாநுசர் சிலேடை வெண்பா

சிறப்பத் துவிதந் திருநாட்டி லோங்க பிறப்பெடுத்தார் தென்னாட்டின் பேறே - இறைப்பா மதிராசர் தேர்ந்த வடமொழி மேதை யெதிராசர் சங்கர ரீடு

செவ்வாயிற் செவ்வேள்

கோழிக் கொடியன் குமர னழகைக் குவலயத்தி
னாழித் தவறா நயந்தே யிருக்க நனிபுனையுங்
காழிப் புலவன் கவிபோன் முயலக் கடையனுக்கு
மாழித் துயிலு மரங்கன் மருக னருளுளதே  

#கட்டளைக்கலித்துறை

வியாழன், 9 மே, 2024

அருணகிரி நாதர் கலி விருத்தம்

அருவுருவரு வுருவிருமொரு தருவுறைகுரு செவியில் குருபரனுரை மறைமுதலுரை கிளிவுருவர புவியில் திருசுடர்வரை யுறைகவிமலை யிதபகருரை தமிழில் தரவருதரு மரையடிதொழ நிறைபெறுமுயி ரளியில் #கலிவிருத்தம்

செவ்வாய், 7 மே, 2024

ஆறுமுகன் அறுசீர் விருத்தம்

 மூவர் முதல்வன் முருகன் மூவா முகுந்தன் மருகன் ஏவர் துதிக்குந் தலைவன் ஏவா துதிக்குந் தருமன் சேவற் கொடிக்குத் தலைவன் சேயா யணைக்குஞ் சிறுவன் நாவன் பமர்தன் னடியர் ஞானோ தயந்தந் தருடே

திங்கள், 6 மே, 2024

கரவேன் மறவேன் வெண்பா

கரவேன் மறவேன் கடம்பா வுனது சிரமா றழகுஞ் சிகைமா மயிலுஞ் சுரவே தனைதீர் துதிமா துணிவு மரமா வடக்கு மகத்து #வெண்பா

இன்றமிழ் வேலவன் வெண்பா

தினையரசி தெய்வானை சேர்ந்திருக்குந் தேவ வினையகற்றும் வேழமுகன் வேண்டு - மினியகனி யீசனுமை யீய விடம்பெயர்ந்த வின்றமிழி னேசவுனை நேர்ந்துரைப்பே ணீண்டு #வெண்பா

வெள்ளி, 3 மே, 2024

குருவாரக் குமரன் வெண்பா

குருவாரஞ் சென்று குருபரனைக் காணத் தருவானா ஞானந் தருவாய்ச் - செருநாதன் மஞ்ச ளலங்கார மங்கலந் தான்றருமே சஞ்சலஞ் சாரா தகம் #வெண்பா

ஆசிரியப்பா

மாற்றான் றார மாண்பி றிருட
கூற்றாங் கருணைக் கடலுந் தேற்றா
வறமில் கல்வி யணுத்துணை
திறமில் லாயினுந் திருவரு ணாடே
#ஆசிரியப்பா 

திருமகள் வெண்பா

திருவின்றி மாலில்லை தேர்ந்துரைப்பர் ஞானி
திருவின்றி வாழ்வில்லை சிற்றுந் - திருவின்றி
வீடில்லை மேற்றவ மேற்கொண்டுங் காக்கவெமை
யீடில்லை யாரு மிவட்கு
#வெண்பா 

புதன், 1 மே, 2024

கந்தன் கலி விருத்தம்

தருககுருபர வருகவறுமுக வுருக வெருகணிவார் செருகநிசிசரர் தருகவிடுதலை மருக திருவணிவார் கருகரதிபதி பொருதசுரரணி யுருக விருவிசும்பா ருருகவருமன மிருகவிழிமன மரிக வருகிருந்தே #கலிவிருத்தம்

வேலன் விருத்தம்

 

மறைந்திருந்து வானரத்  தழித்தவேத நாயகன்

மனங்கவர்ந்து மாதரை மயக்குமாயர் காவலன் 

கரந்துவந்து மாவலிக்  களித்தபாத வாமனன்                           மருகோனே

 

உறைந்துநின்ற வானவர்  கலைக்கவெண்ணி   யாடவம் 

மறைந்துநின்று மாரனை மலர்க்கணைக ளேவியே

சினந்தெழுந்து தீவிழித்  தெரித்தகாம  னீசனார்                           தவபாலா

 

மறைந்ததிங்க ணாளிலே மகற்சொலுக்கி ணங்கவே

யணிந்ததோடை வானிலே யளித்துவந்த  வார்நிலா

நிறைந்தவான மாகவே வணங்குதேவ தேவியின்                            குமரேசா

 

மறந்திருந்த பத்தனின் மனந்திருத்து மாசிலா

விரைந்துவந்து தோகைமேல் விழித்திருக்க மோனமாய்

பறந்திலங்கு நாதனே சிறந்தவள்ளி பாகனே                               அருளாயோ     

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...