ஆய்ச்சிமகள் கண்மணி யாநிரைக் காவலன்
பேய்ச்சிமுலை யுண்மணி பேய்மழைக் காத்தவன்புதன், 29 அக்டோபர், 2025
செவ்வாய், 28 அக்டோபர், 2025
தொலைத்தேனனை விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)
தொலைத்தேனெனை மலைத்தேவனி னலர்த்தாமரை யழகில்
மலைத்தேனவன் சலிப்பேதுமி லமர்ப்போர்க்கள நகைப்பில்
அலைத்தேவுழ றிரைப்போலுறை யடங்காவென தகத்தில்
நிலைப்பேனென நிதங்காத்திடு குகத்தேவனென் வியப்பே
திங்கள், 27 அக்டோபர், 2025
ஆறாறைத் தாண்டி கட்டளைக் கலித்துறை
ஆறாறைத் தாண்டி யணிதிக ழாண்டி யசைவறியா
நீறானிற் றோன்று நெருப்புரு ஞான்று நிகர்பகரசனி, 25 அக்டோபர், 2025
வார்த்தையில்லை விருத்தம்
வார்த்தையில்லை பொருளுமில்லை வாஞ்சையில்லை கவியினில்
நேர்த்தியில்லை நளினமில்லை யாப்பறிந்த பயனுமென்
சீர்த்தியில்லை த்ருப்தியில்லை வாசகர்க்குச் சற்றுமே
கார்த்திகேய முத்தமிழ் கடையனுக்கு மருள்வையே
மாலைநீக்கு விருத்தம்
மாலைநீக்கு மாலைநீக்க மேன்மைவீடு கிட்டுமோ
சூலைநீக்கு சூலைநீக்க வாத்மஞான மெட்டுமோ
வேலைநீக்கு வேலைநீக்க விண்ணுமண்ணு மண்டுமோ
ஓலைநீக்கு வாலைநோக்கு போதறிந்திங் குய்மினே
குறிஞ்சி வாழும் ஆண்டவர் விருத்தம்
குறிஞ்சிவாழு மாண்டவர்கண் கொஞ்சிபேச வாசையா
செறிந்தஞான மாழ்தவங்க டுறந்தவாழ்க்கை தூநெறிஆறு சக்கரங்களின் விருத்தம்
ஆறு சக்கரங்களி னாற்றலான வாண்டவா
ஆறு சொற்பதங்களி னாதியான மூலவாவெள்ளி, 24 அக்டோபர், 2025
மாலைச் சிந்து
மாலை ஒவ்வாது செய்யு ஞானம் - செச்சை
மாலை சவ்வாது சாற்ற நல்கும்
சூலை நீறாலே நீக்கு நாவன் - போற்று
சூலை நீறாக்கு நோக்கு பாலன்
வேலை செவ்வேலை செய்யும் வேலன் - தேவ
வாலை செவ்வாலை செய்யும் பாலன்
காலை செவ்வானஞ் செய்யுந் தேவ - வண்ணன்
காலை மெய்ஞ்ஞானந் தேடி நாடே
வியாழன், 23 அக்டோபர், 2025
சத்திநாதன் விருத்தம்
சத்திநாதன் றாதையென்ன சார்ந்தவர்க்கு வரம்பிலாப்
புத்திநாத னண்ணனென்ன புத்திதோன்று ஞானமா
முத்திநாதன் மாமனென்ன மூப்பிலாத முருகுடை
யத்திநாத னளியளிக்க வானெமென்ன வையமே
புதன், 22 அக்டோபர், 2025
மாதேவு சிலேடை வெண்பா
மாதேவு வேடா மலர்மதி யாறாளா
வாதேவு வேலை மலைவில்லா -தீதேகா
சத்திநாதா வையாறா சங்கத் தமிழ்வேந்தே
முத்திநாதா மூன்றுதமிழ் தா
செவ்வாய், 21 அக்டோபர், 2025
சிறப்பென்றும் சிந்து (செவ்வாயிற் செவ்வேள்)
சிறப்பென்றுஞ் சேந்தனைச் சிந்தித்தல் - ஞான்றும்
மறப்பின்றி மாண்பொடு வந்தித்தல்
உறுப்பொன்றிக் கந்தனைச் சேவித்தல் - மற்ற
உணர்வின்றிப் புந்தியிற் பாவித்தல்
பொறுப்பென்று மூலனைத் த்யானித்தல் - நாகப்
பொருப்பொன்றி நாதனைப் போற்றிடுதல்
இறப்பின்றி வேலனைச் சேர்ந்திடவே - மாயப்
பிறப்பறுக்கும் பெம்மான்றாள் மறவாதே
தூதுசென்று விருத்தம்
தூதுசென்று தோற்றுநின்ற தூயநாத னெளிமையா
கீதைசொல்லி ஞானமீந்த கேடிலாத வளமையாசூலமேந்து விருத்தம்
சூலமேந்து சத்திநாதன் கரமணைந்த பாலகன்
வேலையுண்ட வேலையேந்து வேட்டுவச்சி காதலன்திங்கள், 20 அக்டோபர், 2025
உமை முருகா வெண்பா
உமைமுருகா மான்மருகா வொய்யாரி வள்ளி
யமைவிலகாக் காதலா வுன்றன் - சுமைகருதா
முப்பொழுது முன்னாம மூச்சாய் முணுமுணுக்க
வெப்பொழுது வாய்க்கு மெமக்கு
நாராயண நாம மகிமை (வெண்பா)
நாரா யணனாம நேருண்டோ வாழ்வார்கள்
பாரா யணஞ்செய்யப் பத்திதருந் - தீரா
வினைதீர்த்துத் தீமையினை வேரறுக்கு மீற்றின்
முனைவின்றி முத்திதரு மெட்டு
ஞாயிறு, 19 அக்டோபர், 2025
நிறைமதி வெண்பா
நிறைமதி சீர்வளம் நேரற மாளுங்
குறைவிலி வாழ்வகங் கோரா - துறைதிரு
மார்பா மணிவண்ணா வாழ்வாய்நீ யென்பார்க்குத்
தீபா வளிவளர்க்குந் தேசு
சனி, 18 அக்டோபர், 2025
ஞாலமேழும் விருத்தம்
ஞாலமேழு முண்டுமிழ்ந்த ஞானமூர்த்தி மாதவா
தூலமான வடிவெடுக்குந் தொண்டரன்ப சௌலபாவெள்ளி, 17 அக்டோபர், 2025
உண்டி சோறு விருத்தம்
உண்டிசோறு நீரிலாடை கொண்டவேலை யோய்நிலை
பெண்டிர்வீடு சுற்றமுற்று பிண்டமண்டு பிணிவளந்
தண்டமுண்ட சன்னியாச மென்றுமாய மாயவ
வண்டமுண்ட கண்டவிண்டு தண்டுழாய வாழியே
வியாழன், 16 அக்டோபர், 2025
ஒன்றுமற்ற விருத்தம்
ஒன்றுமற்ற நிலைகிடப்ப வொன்றதான வோர்பொருள்
ஒன்றினின்றி யாவுமாக வுருவமைத்த வோர்பொருள்
ஒன்றினின்று விலகிச்செல்ல வூக்கிவிக்கு மாயையா
கன்றுமேய்ப்ப கண்ணமன்ன காலநேமி காலனே
பண் அளந்த விருத்தம்
பண்ணளந்த பாவளிக்கும் பாவநாசி பங்கயம்
கண்ணளந்து பிம்பநோக்கி மீனடித்த வில்லனின்புதன், 15 அக்டோபர், 2025
மீனாட்சி மன்னன் கலி விருத்தம்
மீனாட்சி மன்னன் விதைத்த தமிழ்மன்றம்
மீனாட்சி மன்னன் வளர்த்த தமிழ்மன்றம்செவ்வாய், 14 அக்டோபர், 2025
அள்ளியள்ளி விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)
அள்ளியள்ளி யளியளிக்கும் வள்ளிதேவி நாதனைத்
தள்ளிநின்று கண்டுவக்க வுள்ளதாகந் தீருமோதிங்கள், 13 அக்டோபர், 2025
விழியின் வழியே வழி
கலையென்ற கோவிலிற் கண்டெடுத்த சிற்பம்
விலையென்ன சொல்ல வியப்பி - லிலைமேன்ஞாயிறு, 12 அக்டோபர், 2025
முருகனைப் போற்றும் வெண்பா
முருகனைப் போற்று முருகிள நெஞ்ச
முருகிடுமே யோங்குவள ரன்பாற் - பருகநிதந்சேறகற்று கலி விருத்தம்
சேறகற்று முனைவகற்றுச் சேறொடுங்க நீர்நிலை
தேறகத்து முனைவதில்லை தீம்புனற்க ணூடுபோய்மூலமாகி விருத்தம்
மூலமாகி ஞாலமாகி முழுதுமாக வெண்ணிநீ
காலமாகிப் பூதமாகிக் கடன்முளைத்த வுயிர்வளர்நூறுமுகம் சிந்து
நூறுமுகங் காண்பதனில் நூதனங்கள் ஏது - அவுணர்
நூறமுகம் போர்சிரித்த நாதன் நல ஏது
மாறுமுக மாந்தர்விரி சூழ்ச்சியினியேது - குமரன்
ஆறுமுகன் மாண்பதனில் ஆழ்ந்திவிட போது
சீறுமுக தேவர்தரு சஞ்சலங்கள் ஏது - வினையின்
ஊறுமுகம் வேல்சிதைக்கும் பாலன்புகழ் ஓது
ஈறுமுகம் ஆவதென்ன ஐயமினியேது - மயிலின்
ஏறுமுகன் யாண்டுமுளன் தந்திடவே பேறு
கண்ணுண்டே காக்க நமை வெண்பா
புரந்தரனு நான்முகனு மீசனும் போற்று
நிரந்தர னீர்க்கமலக் கண்ணன் - பரந்தாமன்திருக்கூடும் கலிப்பா
திருக்கூடு மார்பழகா செருக்காளுஞ் சார்ங்ககரா
விருப்பாளும் வடிழகா வெறுப்போர்க்குங் காருணியாகாலத்தின் கோலமிது காண் வெண்பா
அறந்திகழும் நாடெங்கே ஆன்றநெறி எங்கே
துறந்த பயனாந் துயரே - மறந்தோமேசனி, 11 அக்டோபர், 2025
முத்துக்குமரா கட்டளைக் கலித்துறை (செவ்வாயிற் செவ்வேள்)
முத்துக் குமரா முகிழ்நகை யத்திக் கிறைவாசிவ
சத்திக் குமரா சரவ ணபவா தமிழ்மரபின்சீயமிட்ட பிச்சை விருத்தம்
சீயமிட்ட பிச்சையிந்தச் சீருடைத்த சிந்தனை
காயமுற்ற விச்சைவேக மாயவாயன் வந்தனைமஞ்சனங்கள் விருத்தம்
மஞ்சனங்க ணீரிலாடி மாலைசூடு தண்டுழாய்
பஞ்சணைக்கண் டுயிலுமில்லை பாறைநின்ற விட்டலாசீரென்றும் வெண்பா
சீரென்றுஞ் சிங்கத்தைச் சேர்வது கம்பனெனுங்
கூருகிர்த்த குட்டனைச் சேர்வது - காரொன்றுந்மூலமாகி விருத்தம்
மூலமாகி ஞாலமாகி முழுதுமாக வெண்ணிநீ
காலமாகிப் பூதமாகிக் கடன்முளைத்த வுயிர்வளர்ஞாயிறு, 5 அக்டோபர், 2025
செந்நா வெண்பா
செந்நாச் சிறப்புடைத்த சீரார் புலவர்சொ
லெந்நாளும் பொய்க்கா தெனவுணர்ந் – தந்நாளிற்
சங்கம் வளர்த்துத் தமிழாண்ட மன்னர்தந்
தங்குபுகழ் தாழ்த்தா துலகு
அக்கரங்கள் விருத்தம்
அக்கரங்கள் கொண்டுசெய்த வழிவிலாத மாலையை
யிக்கரங்க டொண்டுசெய்ய யினியயாப்பு விருத்தமா
சக்கரங்கொள் சங்கதங்கு செக்கரங்க ளாதிதே
யுக்கிரங்கொ ளோகசிங்க மூழிசூடி யற்றிடே
சனி, 4 அக்டோபர், 2025
தீயவன் கட்டளைக் கலித்துறை
தீயவன் பாங்கு சிவனார் பொறிநதி சேர்த்துதித்தச்
சேயவன் பாங்கு திருவாரற் பெண்க டிருமுலைப்பால்
காயவன் பாங்கு கதியருட் பாலகன் கார்முகிலா
நேயவன் பாங்கு நினைவி னிலைத்த னிறையருளே
வெள்ளி, 3 அக்டோபர், 2025
வெண்டாமரையாளை கட்டளைக் கலித்துறை
வெண்டா மரையாளை வேதற் கினியாளை வீணைகரங்
கொண்டா ணிறையாளைக் கூத்தனூர் மன்னு குருவடிவைபுதன், 1 அக்டோபர், 2025
மூல வெளிப்பாடாய் (நவராத்திரி கலி விருத்தம்)
மூல வெளிப்பாடாய் முப்பெருந் தேவியர்
ஞால நலம்பெற மும்மூன்று நாள்கள்நவராத்திரி எண்ணலங்கார வெண்பா
ஓராதி யீராகி மும்மூர்த்தி நான்மறையா
விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
இரு மாதர் இத்திருவைக் காண்கிறார்கள் அதன் தாக்கமாக தமக்கிடையே இது இராமர் தான் என்று தனது கருத்தை முன்வைக்கின்றார் முதற்பெண், இரண்டாம் பெண் இ...
-
கெண்டையார் கண்ணினா ணிலவும் - சடைக் கிண்டியார் கங்கையா ளுலவும் தொண்டையா லன்றடக் கிடவும் - மதித் துண்டையார் சீர்முடிக் கரவும் மண்டையான் மா...