திருப்பாவை சீய ரொருபாவை யெண்ணி
யிருப்பாவை பின்னை யெனவே - சிறுப்பாவை
தாளிற் சிரந்தாழ்ந்த வுந்து மதகளிற்ற
னாளு நவின்றுய்வோ நாம்
திங்கள், 30 செப்டம்பர், 2024
திருப்பாவை ஜீயர் வெண்பா
உடையவர் வெண்பா
உடையவர் பாதை யுடையவர் பாத
முடையவர் பெற்றா ருயர்வு - தடையவர்க்
கில்லை திருவவர் கொள்ளை திரும்பாரே
தொல்லை யிருமைமய வாழ்வு
#வெண்பா
ஞாயிறு, 29 செப்டம்பர், 2024
வேறானை கட்டளைக் கலித்துறை
வேறானை யொன்ற விழுப்பொரு ணன்று விளங்கிடுமோ
வேறானை யொன்ற விழுப்பொரு ணன்று விளங்கிடுமே
வேறானை யொன்ற விழுப்பொரு ணன்று விளங்கிடுமோ
வேறானை யொன்ற விழுப்பொரு ணன்று விளங்கிடுமே
சனி, 28 செப்டம்பர், 2024
ஔவை வேலனை அழைக்கும் விருத்தம்
1.
வென்றுலாவ மயிலுமில்லை வேகமாள வழியிலை
யென்றபோதுங் குன்றிருந்து பெற்றவம்மை
யப்பரை
நின்றுலாவ லோகமேழு நீக்கமின்றி சுற்றிய
வுன்றனண்ண னென்பதாலே வோங்குபுத்தி யுள்ளதே
வியாழன், 26 செப்டம்பர், 2024
சொன்ன சொல்லை கலி விருத்தம்
குகேசன் வெண்பா
அம்மையப்பார் விருத்தம்
செவ்வாயிற் செவ்வேள் விருத்தம்
தில்லைநாத னாதர்காண தெரிவதெங்கு நின்கழல்
எல்லையற்ற வள்ளலாக வேற்றமீயு நின்கழல்
தொல்லைவாழ்வில் வினையறுக்கத் தோன்றினின்ற நின்கழல்
இல்லையில்லை சொற்களில்லை யேத்தநின்றன் கழலையே
துஞ்சா கலித்துறை
துஞ்சா மனனெங்கோ தோன்றியரு ளஞ்சா மரமெங்கோ
வஞ்சா மனனெங்கோ வாண்டருளுந் தஞ்சா மரணெங்கோ
பஞ்சா மனனெங்கோ பாங்குறையு நஞ்சான் மகனெங்கோ
நெஞ்சா மனனெங்கோ நேர்ந்திடுவா யெஞ்சா மனனங்கே
நெருப்பாய்க் கொதித்திடும் விருத்தம்
நெருப்பாய்க் கொதித்திடுந் தேக
நீரின் பெருக்கமுங் கூடுந்
திருப்பாய்ப் படுத்திட நாளும்
விழிப்பாய் இருப்பது கடினம்
நிரப்பா துணவை நோற்று
நினைப்பா லொருமுகப் படுத்திப்
பொருப்பா ளழகனை யுள்ளப்
பொறுப்பான் பிழை நமதன்றே
வெள்ளி, 20 செப்டம்பர், 2024
தொட்டுப் பிடிக்க கட்டளைக்கலித்துறை
வியாழன், 19 செப்டம்பர், 2024
இக்கட்டிற் கட்டளைக்கலித்துறை
இக்கட்டிற் காக வயரா துழைக்கு மெறும்பனைய
விக்கட்டிற் காக வயரா துழைத்து வினைபுரிய
விக்கட்டிற் காக விரையாய் மடிவோ மெனவுணர்ந்தே
யிக்கட்டிற் காக்க விறைவா யிசைவோ மகந்தொலைத்தே
#கட்டளைக்கலித்துறை
புதன், 18 செப்டம்பர், 2024
கருப்பும் சிவப்பும் வெண்பா
கருப்புஞ் சிவப்பு மிருப்பு மழிப்பும்
பொருப்புங் கடலும் புனலு நெருப்பு
மிடமும் வலமு மிடபமும் புள்ளு
முடனுறை கூறென் றுணர்
#வெண்பா
ஆய யாவும் கலி விருத்தம்
ஆயயாவுந் தன்னுளேய டங்கநின்று காப்பவன்
காயமேவு கன்றுமேய்க்குங் கண்ணனாக கோகுலம்
வாயடங்கு ஞாலமேழு மந்தமில்சு ழற்சியாய்
மாயவாயன் வாய்திறந்த சோதைகண்ட காட்சியே
செவ்வாய், 17 செப்டம்பர், 2024
வேதனை ஈன்ற கட்டளைக் கலித்துறை
வேதனை யீன்ற வினைத்தொடர் கட்டாயம் விட்டொழிய
வேதனை யீன்ற வினைத்தொடர் கட்டாயம் விட்டொழிய
வேதனை யீன்ற வினைத்தொடர் கட்டாயம் விட்டொழிய
வேதனை யீன்ற வனைத்தொடர் கட்டாயம் விட்டொளியே
#கட்டளைக்கலித்துறை
unique வெண்பா
கோடிபணம் பெற்றுவரக் கூட்டுச் சிறைவிலகா
தாடுவரை யாடி யனுபவித்து - வீடுறுவே
தன்னிலை நன்கறிய தாழ்திறக்கு மந்திரமாம்
இன்னலை நீயுநீக் காய்
அனன்யா unique வெண்பா
கண்ணா கடனிற வண்ணா வடமதுரை
மண்ணா மனமயக்கும் வேய்ங்குழல் பண்ணாளா
கன்னிமனம் போலுனையே காலமெலாஞ் சுற்றிவர
நின்னருளை நீயுநீக் காய்
செவ்வாயிற் செவ்வேள் வெண்பா
தேனூறுந் தீந்தமிழாய்த் தித்திக்குஞ் சிந்திக்க
வானூரும் வெண்ணிலவாய் வாழ்வளிக்குந் - தானாக
வந்தாளும் பத்தர்க்கு மாண்பளிக்கு மேற்றவமாஞ்
செந்தூரா னாமஞ் சிறந்து
செவ்வாயிற் செவ்வேள் வெண்பா
நின்கவிதை நங்கவிதை புன்கவிதை என்றுளவோ
தென்கவிதை அன்பளிப்பாஞ் செவ்வேட்குப் - பொன்கவிதை
என்றுவப்பான் பத்திரசத் தேற்றன்பால் நாமெலாங்
கன்றன்றோ கந்தற்கென் றும்
திங்கள், 16 செப்டம்பர், 2024
விருத்த வேட கலி விருத்தம்
விருத்தவேட மாண்டுவந் திபத்தையேவி கானதிற்
கருத்தகூந்த றேன்மொழிக் குறத்திவள்ளி காதலி
லிருத்தவேட வேலவா விரங்கிவந்த தென்கொலோ
கருத்தமேக மென்னநின் கணக்கிலாத வன்பலோ
ஞாயிறு, 15 செப்டம்பர், 2024
யாவுமுள்ள ஈசன் கலி விருத்தம்
யாவுமுள்ள ஈசனென்னை வேண்டிநின் றிரந்தனன்
மாவலிக்கு வாய்த்ததென்ன வாமனர்க் களித்திட
பாவபுண்ணி யத்துடைத்த பாசமேவு மென்னையே
நீவொடுக்க வந்தநீர்மை நேரிலாத நீர்மையே
உலகளந்த கலி விருத்தம்
உலகளந்த வுத்தமன்ற னூர்த்வபாதம் வானையு
நிலமளந்த நின்றபாத நிகரிலாத பூவையுந்
தலையடைந்த தங்கபாதந் தவமுயர்ந்த வுயிரையு
மலரமர்ந்த மங்கைநாதன் மாண்பளித்த தோணமே
#கலிவிருத்தம்
வெள்ளி, 13 செப்டம்பர், 2024
வேடனை வாழ்த்து கட்டளைக் கலித்துறை
வேடனை வாழ்த்து விரும்பிள வள்ளி யடைவிருத்த
வேடனை வாழ்த்து சிவாச்சா ரியார்க்காத்த வீரசோழ
வேடனை வாழ்த்து வினைதீர்த் துடனருள் வேலுடைச்செவ்
வேடனை வாழ்த்து விரையார் தமிழான் மிறைக்கவியே
#கட்டளைக்கலித்துறை
வினையெச்சம் கலிப்பா
வினையெச்சம் பெயரெச்சம் விடிவிக்குங் காரணமாய்
வினைமுற்றா யுயிர்காக்கு மெய்யான பெயர்ச்சொல்லாய்
செவ்வாய், 10 செப்டம்பர், 2024
மூவரேத்து கலி விருத்தம்
மூவரேத்து நான்மறைக்கு மூலமந்தி ரப்பொருள்
நாவிரிக்க வேன்றிடாத நான்முகர்க்கு மரியதை
நீவிரித்த நேர்த்திகண்டு நீர்கரந்த சடையினார்
பாவிரிக்க சந்தநாதர்ப் பாருதிக்க வைத்தரே
மூவா வெண்பா செவ்வாயிற் செவ்வேள்
மூவா முகந்த ருமைபங்கர் மூவுலகு
தேவாதி தேவர் திசைமுகர் - பாவிரும்பிப்
பண்ணமைப்பார் பற்றறுத்த பாங்குடையார் பார்த்துமகிழ்
கண்ணிமையாக் கட்டழகற் காண்
எழு பிறப்பை கலி விருத்தம்
எழுபிறப்பை யில்லையென் றிழிந்துரைத்து நாளெலாம்
பழுதுரைக்க தொல்லையில்லை பந்தனென்று கொள்ளலாம்
விழிதிறக்க தொல்லைநூலின் வேரறிந்து கூறினான்
மழுவெடுத்து நல்லையல்லை யென்றறுக்கு மூரிதே
திராவிடங்கள் கலி விருத்தம்
திராவிடங்கள் பேசியே பகுத்தறிந்த தெங்ஙனே
திரைவிடங்க ணோக்கிநோக்கி தீர்ந்தவாயு ளெத்தனை
திருவிடங்கள் காப்பதன்றி சீர்த்தவாழ்வ தெங்ஙனே
திரைவிடங்க ளுண்டகண்டர் சீர்திருத்த வேண்டுமே
தேராழி கட்டளைக் கலித்துறை
தேராழி யேந்தித் திருவடி யார்வாக்கை மெய்ப்படுத்தப்
போராழி போழ்து புருடோத் தமன்வாக்குப் பொய்யெனச்செய்
காராழி வண்ணன் கடுஞ்சினத் தாண்டான் கருணையினாற்
சீராழி யண்ணல் சிரிப்புஞ் சினமுஞ் செயந்தரவே
சனி, 7 செப்டம்பர், 2024
நடலைப் பிரப்பொழியும் வெண்பா
நடலைப் பிறப்பொழியு நாள்கிட்டு மாற்றைச்
சுடலைப் பொடிபூசுந் தூய -னடியார்சொல்
கேட்டுவக்கும் பேறு கிடைத்தபெரு மின்பத்தால்
வீட்டடைவிற் கேங்கு மனம்
முந்திவந்து கலி விருத்தம்
முந்திவந்து மயிலமர்ந்து மூவுலகுஞ் சுற்றியே
கந்தனெந்தை வேண்டிநின்ற கனிகவர்ந்த வித்தைசெய்
தந்தைதாயை யங்கிருந்து தந்திரமாய்ச் சுற்றிய
தந்திமேன்மை சாற்றுகின்ற சந்தமாளு சிந்தையே
பூமாலை வெண்பா
பூமாலை சாத்திப் புகழ்பாடிச் செந்தமிழ்ப்
பாமாலை சாத்திப் பதம்பணிவாந் - தீமாலை
தோய்த்த பலகாரந் தந்து கரிமுகனை
யேய்த்த வினையொழிய வின்று
வியாழன், 5 செப்டம்பர், 2024
திருக்குலாவும் கலிவிருத்தம்
திருக்குலாவு மாரூர்மே லுருக்கமான செந்தமி
ழிருக்கமைத்த பிள்ளையின் சிறப்புரைத்த செவ்வுரை
கருத்துணர்ந்து கூறினார் கலைச்சிறந்த செல்வனா
ருருக்குவெண்ணெய் கள்வனி னுயர்ந்தநாம மாள்வரே
புதன், 4 செப்டம்பர், 2024
வானவர்க்கு வெண்பா
வானவர்க்கு வாழ்வளித்த வள்ளி மணாளனை
யானவரை யேத்த வருந்தமிழால் - ஞானக்
கரமான் றரிக்குங் கறைக்கண்டர் மைந்தன்
றிருமான் மருமான் றுணை
சீனிவாசன் கலி விருத்தம்
சீனிவாசன் பள்ளிகொள்ளுஞ் சீரசாக ரத்துளே
தானெவந்து மேருவெற்பைத் தாங்கிநின்ற தன்றியும்
வானமேனி வந்துநின்ற மாலைசூடுந் தேவியை
மாநிலாவு மார்பிலங்கு மேன்மைதந்த மாதவா
வளமைகுன்றா வெண்பா
வளமைகுன்றா வள்ளிபங்க்ன் வெற்றிவடி வேல
னுளமுறைய வுள்ளொளிரு முண்மை - யிளமைகுன்றா
செந்தமிழாற் சாத்துத் தினமகிழ்ந்து பாமாலை
கந்தன் கருணையைக் கண்டு
தோற்றமிலா வெண்பா
தோற்றமிலா மாற்றமிலா வீற்றுமிலாக் கூற்றவற்கே
கூற்றளித்த வேற்றுடைய மேற்றவத்தான் - போற்றுமகிழ்
கந்தகுரு சந்தமிகு முந்துதமிழ் வந்தனைசெய்
சிந்தைவரத் தந்துவப்பா யுந்து
உம்பர் வாழ கலி விருத்தம்
உம்பர்வாழ சூரன்மாய வந்துதித்த மேதினி
யம்புலாவு நாகமேந்து தும்பைமேவு மார்சடை
சம்புநாத னெற்றியுற்ற சண்முகத்து நித்தியா
கம்புலாவுங் காட்சிதந்த நாதருக்கு நாதனே
திங்கள், 2 செப்டம்பர், 2024
நம்பிவாழ கலி விருத்தம்
நம்பிவாழ நாதியற்று நாத்திகங்கள் பேசியே
வம்புலாவி வீண்டிரிந்து வாழ்விழந்து வீழ்ந்திடா
கும்பனோடி லங்கைவேந்தற் கொன்றதேவ தேவனைக்
கம்பநாடர் காவியத்தி னூடுணர்ந்து யுள்ளமே
கந்தா கலி விருத்தம்
கந்தா நினைமறந்தாற் காதில் வலியுறுமே
தந்தா ளுனதருளைத் தாச னிலைபெறவே
யிந்தா வினியதமி ழீதா யகமகிழ்ந்தே
செந்தே னெனவதனைச் சேய்த்தாட் சமர்ப்பணமே
தோட்டை கட்டளைக் கலித்துறை
தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...
-
விஶ்வநாதாஷ்டகம் பா வகை (poetic metre): வசந்த திலகா ஆதிசங்கர பகவத்பாதர் அவர்கள், “வசந்த திலகா” என்னும் பாவகையினை வடமொழில் கையாண்டுள்ளார். ...
-
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான அலைகட லஞ்ச கணைதொடு வெந்தை யகிலமு தித்த திருநாளி லறுசுவை யுண்டி யடையவி ரும்பு மனமுள...
-
துடியிடை மடமயி லொருபாதி துகிலென வரிகரி கொளுமாதி சுருதியி னுரைபொரு டனைமேவி சுகமளி மதுமொழி யுறையாவி யடலிடை வருவ...