தேசமோங்கு திரிபுரத்துச் சுந்தரிச் சமேதரா
யூசலாடி யோய்வெடுக்கு முன்னதனை விழிகளா
லாசைதீர வநுபவிக்க வருளளித் தமைத்தனன்
பாசமற்றுப் பசுவிருக்கப் பதியளித்த பேறிதே
வெள்ளி, 28 பிப்ரவரி, 2025
தேசமோங்கு கலி விருத்தம்
வியாழன், 27 பிப்ரவரி, 2025
புவனம் ஏழின் கலிப்பா
புவனமேழி னரசியான புகழறாத பாவையோ
கவனமாக கலைகளாழக் கடையுணர்ந்த பாவையோ
சிவனுமாழ வநுபவிக்குந் திருவுடைத்த பாவையோ
ரவிநிலாவும் விழிகளாகி ரதமுடைத்த பாவையே
பவமறுக்க கலிப்பா
பவமறுக்கத் தவமிருக்கு நலமுடைத்த விரவினிற்
சிவமுகத்தி லலங்கரித்துத் திருமகட்குப் பூசனை
தருவிருப்ப விலுவமுஞ் சிவநிறத்து மேனியு
மிருவரொத்த வொருகருத் தெனவுணர்த்து மறிமினே
வேலை வெண்பா
வேலைப் பளுவாழ்ந்து வேலை மறவாதே
வாலைக் குமரி வடிவமது - பாலி
லொளிந்திருக்கு நெய்யென் றுறைவாளை யுன்னுள்
ளொளியை யொழியா துணர்
சதுரங்க வெண்பா
சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்
புதன், 26 பிப்ரவரி, 2025
இயக்க விருத்தம்
இயக்க மிருத்த லிருவேறா
விணக்கம் வெறுத்த லிருவேறா
தயக்கந் துணித லிருவேறா
தனைக்கண் டறித றகராறா
மயக்க மலர்த லிருகூறா
மனக்கண் டிறத்த றரும்வீடா
முயங்குஞ் சிவ்த்தை யறிவீரா
முனைப்பி னரிவை சதிதேகா
நல்லாரம் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
நல்லாரம் பூண்ட நயமிகு வேலனைச் சொல்லாரஞ் செய்தீர் துணைநிற்க- வெல்லாரு மின்புற்றோஞ் செவ்வேளை யேத்திய செவ்வேளை தன்பற்று நீக்கு தரு
செவ்வாய், 25 பிப்ரவரி, 2025
அன்னையென்று ஆசிரியப்பா
அன்னையென் றேங்குவார்க் கன்புபா லூட்டி
யத்தனென் றாள்வர்க்கு ஞானமாய் நின்று
தன்னையென் றேத்துவார்க்குத் தலைவனா யாண்டு
நண்பனென் றடைவர்க்குத் தோளினைத் தந்து
பொன்னையே வேண்டுவார்க் கர்த்தமே யீந்து
முன்னையே நாடுவார்க் குண்மையாய்த் தோன்று
முன்வினை யாவுமே முற்றிலு நீங்க
முருகனா யுடன்வரு முடிவிலா முதலே
சொன்னயம் பாடவே யுன்னைச்
செந்தமிழ் தந்தருள் செந்தில்வாழ் கோவே
ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025
நாலும் வெண்பா
நாலுங் கடந்தவ ணாரண னெஞ்சவள்
பாலங் கடலுதித்த பாங்கினள் - ஞாலங்
கடந்தவள் ஞானங் கடந்தவள் காலங்
கடந்தவள் காப்பா ளெமை
சனி, 22 பிப்ரவரி, 2025
சதுரங்கம் வெண்பா
சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென்
றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச்
சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர
வெந்துபோம் வீண்கரு வம்
வெள்ளி, 21 பிப்ரவரி, 2025
வள்ளியம்மை கலி விருத்தம்
வள்ளியம்மை நாதர்தந்த வடிவுயர்ந்த மொழியுனைப் பள்ளிசென்று பயிலவில்லை யென்றிருந்தும் பாவியேற் கள்ளியள்ளி யுன்னையீந்த வளவிலாத வமுதமா யுள்ளமொன்றி யுன்னைவேண்ட வொப்பிலாத பாவையே
வியாழன், 20 பிப்ரவரி, 2025
ஆறடுக்கு விருத்தம்
ஆறடுக்கு நேமியெறி யாறுடுத்து நாதனைத்
தீரணைத்து நீமணக்க மூலமான வுந்துநீ
யேறடுக்கு நேரநின்ற சிக்கலான மும்முடி
சீரமைக்கக் கட்டவிழ்க்க மூலமான வாற்றனீ
நூறடுக்கு மாடியேறி யுச்சிகாணு வெற்றிபோ
லாறுமாறு மாகிநின்ற வந்தரத்தி லாழ்ந்துனைக்
கூறொடுக்கிக் காலடக்கிக் கன்னியுன்னைக் காணவுங்
கோதிலாத வுன்றனாற்றல் கூடநிற்க வேண்டுமே
புதன், 19 பிப்ரவரி, 2025
இரவுமாகி கலிப்பா
இரவுமாகிப் பகலுமாகி யிறைவனாகி யிறைவியா
யுருவமாகி யருவமாகி விரவிநின்ற யாதுமாய்க்
கருவுமாகிக் கதியுமாகிக் கனியதோடு காயுமா
யொருவளான வுயர்வையெண்ன வுணர்வளித்த ளென்கொலோ
செவ்வாய், 18 பிப்ரவரி, 2025
தூமலராள் வெண்பா
தூமலராள் கேள்வனையே தோத்திரங்கள் செய்திடுவார் நாமலந்த சொல்லெலா நான்மறையே - நாமறந்து போனாலு நாரணனைப் புந்தி யமர்த்திடுவார் தேனாளும் வாக்காற் சிறந்து
அறியா வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
அறியாப் பிழையை யறுத்தெறியு மாறே முறைகாட்டு மூவா முருகா - கறைக்கண்டர்க் காசானே ஞானத் தடிச்சுவடே நின்னருளா னீசனும் வாழ்வே னிறைந்து
திங்கள், 17 பிப்ரவரி, 2025
ஞாலங்கள் வெண்பா
ஞாலங்கள் யாவு நகைத்தருளு மாங்குறையுங்
காலங்கள் யாவுமவள் கண்ணழகு - கோலங்கொ
ணாடெங்கு வீற்றருளு நாயகியி னேமியெனத்
தாடங்கந் தாங்கு செவி
உலகாளும் வெண்பா
உலகாளுந் தேவியி னுக்கிர ரூபம்
பலகாலம் பத்தர்க்குப் பாங்காய்ச் - சலமாளுஞ்
சங்கரர் கோவிலிற் சக்கரந் தோடேற்றிச்
சங்கரர் தான்றணித்தார் சீர்
ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025
முருகா கலி விருத்தம்
முருகா குமரா குகனென் றழைவார்க்
கிருதா ளலர்சே ரிசைவைத் தருமே
பருகா துனையே பழுதைம் புலனே
னுருகா துணர்வாழ்ந் துளதே னுளமே
வெள்ளி, 14 பிப்ரவரி, 2025
கூகாகைக்கு ஏகாக்ஷர வெண்பா
கூகாக்கைக் காகாக்கை கோகாக்கைக் காகாக்கை
கூகைக்கை காகாக்கைக் காகாக்கோக் - கீகாகைக்
கூக்கை குகக்கோகைக் கீகை கககக்கோ
காக்கைக்கூ கோக்கோக் ககா
வியாழன், 13 பிப்ரவரி, 2025
கூ மடியமர் கலி விருத்தம்
கூமடியமர் தீயவுணனின் றூசிறுவனு மழைக்கக்
கோமடியதன் கூர்நகமெடு சேகுருதியி னனைத்த
மாமடியமர் மாதுணையிர வாழ்வினிலிடர் வருமோ
சாமடியம ராவிடிவுறச் சார்விவளடி பிடியே
அமர்சத்தி அறுசீர் விருத்தம்
அமர்சத்தி கோலங் காணின்
அவள்பாதம் மதியின் ஒளியாம்
தமர்க்கொருவர் தீங்கு செய்யின்
கணந்தோன்றி தூண்பிறந்து மடி
அமர்த்திக் கோனூன் பிளந்த
அரிக்கிதயம் மதியின் ஒளியாம்
நமர்சித்த லிங்கம் காணீர்
நடுப்பாதி மதியின் ஒளியே
சேவிக்க வெண்பா
சேவிக்கக் காமாட்சி சீர்பாதந் தந்தருள்வாள்
பாவிக்கும் பாரபட்சம் பார்க்காத பாங்கினளா
மாவிக்கு முள்ளொளிரு மக்கினியா மம்பிகையைப்
பாவிக்கப் பத்துமோ வாழ்வு
புதன், 12 பிப்ரவரி, 2025
மருந்தேச்சுரர் வெண்பா
மருந்தேச் சுரர்க்கு மருந்தாய்த் திகழுந்
திருந்து திரிபுர சுந்தரி தாயார்
பொருந்து புதல்வர் புடைசூழ நிற்கும்
விருந்தை விழியா லருந்து
இரவும் கட்டளைக்கலித்துறை
இரவும் பகலு நிலவுங் கதிரு மெனவிரண்டு
பரவு மொழியும் புழங்கி யுளதே பலசமயங்
கரவுங் கபடுங் கயவ ருரையாற் கதைவளர்ந்த
புரையை விடுவோம் வடதென் மொழியும் பழபிணைப்பே
அயன்மொழி விருத்தம்
அயன்மொழி வேண்டா வியன்மொழி வேண்டும்
பயன்மொழி வேண்டா நயன்மொழி வேண்டுஞ்
செயன்மொழி வேண்டா மயன்மொழி வேண்டு
மிகன்மொழி வேண்டா விசைமொழி வேண்டு
மயன்மொழி விண்டா வுடன்சிறை வைத்த
குயின்மொழி வேண்டு மையன்மொழி தான்டா
கயல்விழி பாண்டி கனிவள நாட்டி
னுயிர்மொழி யென்றே யுயர்ர்த்தியே கூறே
செவ்வாய், 11 பிப்ரவரி, 2025
அயன்மொழி வெண்பா
அயன்மொழி நன்கறிந் தன்னைமொழி கல்லா வியன்மொழி கேட்டால் விரைந்து - குயின்மொழி வள்ளியமை நாதன் மயிலேறி வந்திங்குத் தள்ளியெமை வைப்பான் றனித்து
கைப்பேசி வெண்பா (தைப்பூசம்)
கைப்பேசி தானுலகாய்க் காணுஞ் சமயமிது
பொய்ப்பேசு மாந்தர் புகலிடமு மஃதேதான்
மைப்பூசு மாதர்க்குத் தூண்டிலு மங்கேதான்
கைப்பாவை யானோங் கலிக்கென் றுணராம
லுய்ப்பாதை தேடி யுணர்வுருகித் தேம்பாமன்
மெய்ப்பார்வை வேண்டிவடி வேலனைப் பாடாமன்
மாப்பாடு பட்டுழன்று மன்னிப்பு நாடாமற்
கூப்பாடு போடுமெங் குற்றங் களைந்திட்டுத்
தைப்பூசச் சேந்தா திருத்து
வைப்பேதும் வெண்பா (தைப்பூசம்)
வைப்பேது மில்லாது வையத்தில் வந்திழிந்த
கைப்பாவை நாமென்று கண்டுணர்ந்து - தைப்பூச
நாயகனைத் தப்பாம னாளுந் தொழுமனனே
போயகலப் பொல்லா வினை
திங்கள், 10 பிப்ரவரி, 2025
மூன்றுலோகம் கலிவிருத்தம் (திரிபுரசுந்தரி)
மூன்றுலோக மாழ்ந்துபார்க்கு மூரலிந்த மூரலே கான்றுநின்ற நாதரன்பு காதலித்த மூரலே யான்றதேவர் மூவரேத்து மருளளிக்கு மூரலே யீன்றதாயி னழகுகாண வென்கொடுத்து வைத்தமே
ஞாயிறு, 9 பிப்ரவரி, 2025
மாவமர்ந்த விருத்தம் (பெருமாட்குமிட்டிலிக்குஞ் சிலேடையாக)
மாவமர்ந்த மார்புடைத்த மாசிலாத நேமியாய்
நாவமர்ந்து நல்லருள்ள ஞான்றுஞான்று போற்றுவார்
பூவமர்ந்த வாறுபாத மாக்கமென்ன மேன்மையா
யாவிவந்த சங்குநாத மாட்சிகூற லாகுமே
#கலிவிருத்தம்
தூயாயாமா மாலைமாற்று
தூயாயாமா மாநேயாசே யாதாயாயா நேமீமாயா
யாமாமீநே யாயாதாயா சேயாநேமா மாயாயாதூ
#மாலைமாற்று #palindrome
சனி, 8 பிப்ரவரி, 2025
மன்மதற்கு கலி விருத்தம்
மன்மதற்கு ரூபமீட்டு மாண்பளித்த தேவிநீ
சண்மதற்கு மூலாமான சார்வளிக்குஞ் சாட்சியா
கன்மமற்று வாழ்வுதோறுங் கன்னியுன்னை யேத்திட
வென்மனத்த மர்ந்திருந்தி யக்கிவைக்கு மன்னையே
#கலிவிருத்தம்
அரிமா அரிவை வெண்பா
அரிமா வரிவை மகிழ்ந்தே யருளக்
கரிமா லிராவணனைக் கொன்றான் - செருமா
களத்திற் சரமாய்க் கலந்து நவநா
டுளைத்துப் பிளந்தா ளுடல்
அகாலமாக கலிவிருத்தம்
அகாலமாக விருந்தபோது மன்பிலாழ்ந்த பூசனை
சுகாலமாக சீரமைக்குந் துர்க்கைதேவி கருணையால்
விகாரமற்ற தேவதேவன் ரகுகுலத்து மேன்மையன்
சிகாரமெட்டு மாறுரைத்த செய்திதேர்ந்துய் யுள்ளமே
#கலிவிருத்தம்
வெள்ளி, 7 பிப்ரவரி, 2025
மாதூதா மாலை மாற்று (ஆஞ்சநேயருக்கும் பெருமாளுக்கும் சிலேடையாக)
மாதூதாவா னாதாதீதே காராமாதா சாவாகாவா
வாகாவாசா தாமாராகா தேதீதானா வாதாதூமா
#மாலைமாற்று
வியாழன், 6 பிப்ரவரி, 2025
மாதர்தம்மை கலிவிருத்தம்
மாதர்தம்மை மோகமுற்று மாவியந்த நாளுள
மாதர்தம்மை ஏதமென்று மாவெறுத்த நாளுள
வீதிரண்டு மாயையென்றி றைவிசொல்லச் சித்தமே
நாதர்தம்மை யாகங்கொண்ட நாயகிக்க ணின்றதே
அரவுதிங்கள் கலிப்பா
அரவுதிங்க ணதியணிந்த வழகனாரின் பாதியே
யிரவிதிங்கள் விழிகளான விணையிலாத வாதியே
நரவிலங்கு நகமுதிக்க நகைநகைத்த தாயுனைப்
பரவிநங்கள் பிணிவிலக்கிப் பதுமபாதஞ் சேர்வமே
புதன், 5 பிப்ரவரி, 2025
குவலயத்து கலி விருத்தம்
குவலயத்து மறையமர்ந்த திருபுரத்து வாசினி
யவமகற்றி யருளளிக்கு முடிவிலாத மோகினி
தவமியற்று சிவலயற்கு நயந்தருளு காமினி
உவமையற்று மொழிதவிக்கு நிகிரிலாத நீபையே
#அம்பாள்
ஏழடுக்கு கலிவிருத்தம்
ஏழடுக்கு நிறமுடைத்த வொளிபடைத்த வெல்லவன்
பாழடக்கு மிருளகற்றிப் பரிமளிக்கும் பாங்கென
வூழொடுக்கு வினையடக்கு முடலெடுக்கு முயிரினை
வாழ்வொடுக்கி வீடுகாண வழியமைக்கும் வேலனே
பரங்குன்றம் செவ்வாயிற் செவ்வேள் வெண்பா
பரங்குன்றம் வாழும் பரமனின் குன்றம்
அறங்குன்று பாவ மழிக்கவல்ல குன்றம்
உரங்குன்றச் சூர னுருவழித்த கந்தன்
கரங்கொண்டு மாலை திருக்கிட்ட குன்றம்
நறுங்குழன் மாதர் நடமாடு குன்றம்
மறங்கொண்ட மாந்தர் மிகவிரும்பு குன்றம்
சிரங்குன்றிப் பத்தர் தினந்தொழுங் குன்றம்
இரங்கிநின்று வேல னிசைவிக்குங் குன்றம்
வரந்தந்து வள்ள லிளைப்பாறு குன்றம்
திரங்கொண்டு யாவுந் திருவுள்ளத் தேர்வால்
வருங்காலம் வாராது வம்பு
திங்கள், 3 பிப்ரவரி, 2025
போரினின்ற கலி விருத்தம்
போரினின்ற பார்த்தனுய்யப் பாங்களித்த போதனை
பாரினின்ற பாரநீங்கப் போரமைத்த வாளுமை
தேரினின்று தேர்ந்தளித்த போரைவெல்லு சிந்தனை
யோரநின்ற வுள்ளமென்று முத்தமன்வாழ் கோவிலே
ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025
காமமேனி கலிவிருத்தம்
காம(ர்)மேனி கருகவைக்கக் கண்திறந்த நாதர்க்குங்
காமமேனி பெருகவைக்கக் கண்மலர்ந்த தேவியுன்
சேமமேனி யருகிருக்க நாமமேது வாழ்விலே
வாமமேனி யுருவெடுத்த வாலைகாஅ மாட்சியே
விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
இரு மாதர் இத்திருவைக் காண்கிறார்கள் அதன் தாக்கமாக தமக்கிடையே இது இராமர் தான் என்று தனது கருத்தை முன்வைக்கின்றார் முதற்பெண், இரண்டாம் பெண் இ...
-
கெண்டையார் கண்ணினா ணிலவும் - சடைக் கிண்டியார் கங்கையா ளுலவும் தொண்டையா லன்றடக் கிடவும் - மதித் துண்டையார் சீர்முடிக் கரவும் மண்டையான் மா...