கோகமென்று கேள்விகேட்டு வேகமேகி மாயைசூழ் மோக(ம்)வென்று மோனநின்று மூலவாதி யொன்றவே நாகமென்றி யாவுமற்று ஞானசோதி பணியலாம் சோகமென்றி யாவுமொன்ற வேகமென்ப துணரலாம்
வியாழன், 31 ஜூலை, 2025
புதன், 30 ஜூலை, 2025
நாகமொன்று விருத்தம்
நாகமொன்று நாணெடுத்து நாகமொன்று மத்திட நாகமொன்று தாங்கியாமை நாகமொன்று நேர்வர நாகமென்று(ம்) பூணுநாதர் நாகமன்று மிடறிட நாகமென்று நாகரேத்த நாகமெட்ட திர்ந்தவே
செவ்வாய், 29 ஜூலை, 2025
ஐந்தொழில் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
ஐந்தொழில் செவ்வனே செய்யையை வேலீய நைந்தொழியச் சூரை நகைநகைத்த - பைந்தமிழ் வேடமகள் வேழமகள் காதலா வீற்றிருவா நாடுமகன் பாட்டி னயந்து
நாக விருத்தம்
திங்கள், 28 ஜூலை, 2025
ஆடிப் பூரத்தாள் - சிந்து
ஆடிப் பூரத்தாண் மாலை சூடிப் பூரித்தாள் கூடப் போகத்தான் மாலை நாடிப் பேதித்தாள் பாடிப் பாலித்தாள் பாவை பாவை போதித்தாள் ஓடிச் சேவித்தாற் கோதை வீடைச் சேர்விப்பாள்
காதல்மக்கள் விருத்தம்
காதன்மக்க ளீன்றபெற்றொர் கட்டுமங்கை மற்றவர் ஶ்வேதன்மக்க ளைவர்மாதர் வாழவீழ விழியிலான் மாதர்மக்க ணூறவன்று வாதுசெய்த கீதைசொல் போதன்மக்க ளென்றுணர்ந்து போற்றிவாழு வையமே
வியாழன், 24 ஜூலை, 2025
சூசகக கட்டளைக் கலித்துறை
சூசகப் பெண்வேட கீசக நாசக னாசுகலைத்
தேசகக் காண்டீப மோசக நாசகன் மாசறியா
வாசக னேசக பாசக னார்சக னேசவட்கா
கோசக னேசக யாசக னேசகர் சாஸ்வதரே
செவ்வாய், 22 ஜூலை, 2025
பொன்மேனி கட்டளைக் கலித்துறை
பொன்மேனி கொண்டான் புகழ்வேழ மைந்தன் புனமடைந்து பொன்மேனி கொண்டாள் புனமானா யீன்ற புதல்வியினைப் பொன்மேனி கொண்டான் புனல்மைந்தன் சென்று புணர்முடிக்கப் பொன்மேனி கொண்டு பொருகரி வேடம் புகுந்தனனே
செம்மேனி செவ்வாயிற் செவ்வேள் வெண்பா
செம்மேனி யண்ணல் சினக்கண் பொறியுதித்த வம்மானை யொத்த வழகுடைய பெம்மானைச் செம்மானின் செல்வியைக் கல்யாணஞ் செய்தானை நம்மேனி காண்ட றவம்
கரத்திலேந்து விருத்தம்
கரத்திலேந்து மாழிசங்கு சார்ங்கமூது வேய்ங்குழல் மரத்தெறிந்த வாழியம்பு வாஞ்சையொப்பி னாதநீ வரத்தையள்ளி வீசியன்பர் வாழ்வுவீடி ரண்டையும் உரத்திலேந்தொ ருத்தியூடு தந்தைதாயு ரூபியே
வெள்ளி, 18 ஜூலை, 2025
மழலை தேயும் விருத்தம்
வியாழன், 17 ஜூலை, 2025
அளி உனது - வஞ்சி விருத்தம்
அளிவுன தடிமையு மழகாக
வெளியிட வுனபுக ழிசையாக
வொளியென வுளமிரு வுமைபாலா
தெளிதமி டினமுனை மறவாதே
மழுவொருகை வஞ்சி விருத்தம்
மழுவொருகை மறியொருகை வழுவினாதா
விழவொருகை யெழவொருகை விதியினேதா
தொழவிருகை யழவிருக ணளியுநீதா
நிழலிருகை நினைவொழிய நிசமுநீதா
புதன், 16 ஜூலை, 2025
பனிதரும் சிந்து சிவத்துதி
பனிதரு பானிலவும் - படர்
பணிதரு பாழ்விடமும்
கனிதரு காரிகையும் - விடக்
கறுமிட றூறுகையும்
புனிதரும் பாவியரும் - தமிழ்ப்
புலவரு மேசுவரும்
உனதுரு வானவரே - அரை
உமையுரு வானவரே
வாணுதல் நேரிழையாள் வண்ணக் கலித்துறை
வாணுத னேரிழையாள் - வளர் வாமளைக் கூறுடையான்
பேணுத றாயனையான் - பசுப் பேறளி பீடுடையான்
பூணுத லாறரவான் - பனிப் பூநில வார்சடையான்
காணுத னாளெதுவோ - கரிக் காவளர் தேவுனையே
மண் நசையும் கலித்துறை
மண்ணசையும் பொன்னசையும் பெண்ணசையு மெந்நசையோ மண்மிசையே
யெண்ணசையுங் கண்ணசையுந் தொன்னசையை வண்ணசையாய்க் கொண்டிசையத்
தண்ணசையுந் திண்ணசையுங் கண்ணசையுந் தெண்ணசையை யுண்ணசுக்கும்
விண்ணசையுஞ் செந்நசையை யென்னசையாய்க் கொண்டசையப் பண்ணிசையே
செவ்வாய், 15 ஜூலை, 2025
பொங்கு கங்கை விருத்தம் (கச்சி)
பொங்கு கங்கை நதி திங்க டங்கு சடை
மங்கை பங்க னிவ னளிநாடிச்
சிங்க மங்கை யவ ளங்க மங்க வுடன்
மங்க ளங்கொ டவம் புரிநேரம்
பொங்கு கம்பை நதி லிங்க மங்க வெழ
மங்கை கொங்கை யணை குழைநாதர்
வங்கசங்கு பதி யங்கைசங்கு சதி
தங்கு துங்க பதி கதியாமே
மரங்குன்றாய்த் தரவு கொச்சகக் கலிப்பா
மரங்குன்றாய் நின்றானை மதிதவறிச் சென்றானை யுரங்குன்ற மாய்த்தானை யுமைதந்த வேலானைப் பரங்குன்றி னின்றானைக் கரிமுகற் கிளையானைச் சிரங்குன்றிப் புகழ்வானைக் கரங்கூப்பிப் பணிவோமே
பாடுமாசு கவி விருத்தம் (சென்னி மலை)
பாடு மாசு கவி சந்த நாதர் புகழ் பீடு சென்னி மலையாம்
கேடு மாசு ணமு யர்ந்த கங்கை நதி சூடி நின்ற மலையான்
பாட மோது மறை முந்து கந்த செவி பாய வென்ற மலையாம்
வேட மாது நகை சிந்த நின்ற வடி வேலன் சென்னி மலையாம்
நாடி வந்த துயர் சந்த விருத்தம்
நாடி வந்த துயர் நோயி ழிந்த நிலை ஞான மந்த மடையா திர
ஆடி வந்த மயி றேவி தந்த வயில் ஆளு கந்த னினைவா னிறை
கூடி வந்த ணைய வேழ முந்தி வர கோல வள்ளி யமைகா தலன்
தேடி வந்து நொடி போதி லன்பு மொழி சோதி புந்தி வழிசேர்ப் பனே
மூன்று தேவி விருத்தம் (திருத்தங்கல்)
மூன்றுதேவி பக்கனின்ற மூலதேவன் மாதரு
ளான்றதேவி தேர்ந்தெடுக்க வன்றுவைத்த போட்டியி
னோன்றதேவி வென்றுநின்ற கோலவூரி தேதிரு
வேன்றதேவை யீடளிக்குந் திவ்யதேசந் தங்கலே
ஞாயிறு, 13 ஜூலை, 2025
கோட்டழகு கலி விருத்தம்
கோட்டழகு கேழலாய்க் கூவினைக் காத்த
காட்டழகு சிங்கனா யூண்பிளந் திட்ட
மாட்டழகு பேணுநன் மாயனை யேத்திப்
பாட்டழகு செய்திடப் பாழ்வினை போமே
சனி, 12 ஜூலை, 2025
கண்டேன் சீதையை திருவிலங்கை வெண்பா
திருவிலங்கை சென்று திருவிளங்கக் கண்டு
திருவிலங்கு மீண்டு திரும்பித் - திருவிலங்கை
கண்டுரைத்த சொல்லின் கவினுணர்ந்தா ராழ்வியப்பால்
விண்டுரைத்தல் விட்டார் மறந்து
பூமாட்சி கட்டளைக் கலித்துறை
பூமாட்சி யென்பேன் புனன்மாட்சி யென்பேன் புனிதவள்பேர்
நாமாட்சி யென்பே னகைமாட்சி யென்பே னசைவடிவக்
காமாட்சி யென்பேன் கலைமாட்சி யென்பேன் கடைவிழியான்
மாமாட்சி யீவாண் மணிமாடக் கச்சி மலைமகளே
வெள்ளி, 11 ஜூலை, 2025
நாமாட்சி வெண்பா
நாமாட்சி செய்வதாய் நாடொறு மார்தட்ட
னாமாட்சி யன்று நலிந்தொழியச் -சாமாட்சி
பாமாட்சி சாற்றிப் படைத்தவளைப் போற்றுவோங்
காமாட்சிக் காமாட்சி யென்று
வியாழன், 10 ஜூலை, 2025
நிரையெனவரு கலி விருத்தம்
நிரையெனவரு மறைமுடிவதன் மடிதடவிடு மிடையன் சுரவருமரு பயமருந்திடு சிறுபசுவென விசயன் தெருளறிவுடை யருமடியர்க ளமுதெனசுவை மகிழும் அருளுரையென வமரிடைவரு மருமமுதினி னனையே
கருமாதி கல்யாணம் ஒன்று வெண்பாக்கள்
தாழ்வி லிருந்துந் தலைக்கென்று மேறாது பாழ்நரகு தோன்றும் புனிதமாய் - வாழ்விற் பெருவாரி யின்பம் பிறவா தொழியுங் கருமாதி கல்யாண மொன்று
கறவையான விருத்தம்
கறவையான மறையினீறை நிறைகறந்த மாயவன் உறிகடைந்து பத்திசேர வமுதமாய்த் திரட்டினன் செறிவடைந்த ஞானிசொல்வர் விரிவுணர்ந்து நாளுமே அறிவடைந்த விறுதிமேன்மை யழகன்சொல்லை யேற்பதே
புதன், 9 ஜூலை, 2025
மண்ணடைந்து விருத்தம் (அருணகிரிநாதர் குரு பூஜை)
மண்ணடைந்துந் நாதனேற்ற மன்னநாளுஞ் சாற்றிய
விண்ணடைந்து பாரிஜாத மலரெடுக்க வேந்தர்தன்
கண்ணடைந்து மீண்டுநோக்கக் காயமாறு கிள்ளையாய்ப்
பண்ணடைந்து பாடுகீத வண்ணவண்ண நாதரே
செவ்வாய், 8 ஜூலை, 2025
பக்குடக்கை விருத்தம்
பக்குடுக்கை பாட்டெடுத்து மிறைமறுப்புச் சுட்டுவர் சிக்கெடுக்கு(ஞ்) சாக்கில்வந்து(ஞ்) சிக்குமிக்க வெண்ணுவர் இக்கடுக்கு வில்லெடுக்க விட்டபாண மேவுவோன் றொக்கொடுக்க விழிவிழித்தச் சொக்கனேற்ற மறிவரே?
நினைபொழுதினில் கலி விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)
நினைபொழுதினி லடியவர்மகிழ் நினைவினில்வரு மழகே
வினைபொழுதினி லடியவர்மன வொளியெனவரு(ஞ்) சுடரே
நனைபொழுதினி னதியெனவரு நதிமதியிறை குருவே
கனைகடலிடை யுழலுயிருய விடையுனதடி தருவே
அழலொரு ஶ்ரவணாபரண விருத்தம்
அழலொரு கையிலும் அரவொரு பையிலும்
கரியின குறிசெயுங் கூத்திறையா
மழுவொரு கையிலும் மறியொரு கையிலு
மதிநதி யணிதிகழ் வார்சடையா
விழவொரு கையிலும் இழவொரு கையிலு
மிடிபடு முயிரது பார்மிசையே
செழிவுரு மெய்யினை நிததுதி செய்திட
அளிகொடு மிடையிலி நாட்டியனே
திங்கள், 7 ஜூலை, 2025
விழுதாம் தோடகம்
விழுதாம் வினைகள் விடியா தொழியப் பழுதாம் வினைகள் படியா தொளிர உழுதான் வினைகள் வழுவா தவன்றாள் தொழுவார் அடைவார் வழுவாப் பதமே #தோடகம்
விழியா தோடகம்
விழியா லடைவார் விழையார் விழைவார்
மொழியா லடைவார் மொழியார் மொழிவார்
உழையா தடைவார் முழுதாய்ப் பணிவார்
பழியா லடைவார் படிகாத் தவரே
ஞாயிறு, 6 ஜூலை, 2025
நதியறுகு விருத்தம்
நதியறுகு பணிமதியு முடிபுனைய
விதிதலையி னொருகளையு(ஞ்) சினவிறலமா
சதியருகு மணிமிடறி னணிவிடமு
மமுதனைய மருவுமுரி கரியதளநாந்
துதியுருகி வுனைநினைய வினையகல
விதிவளைய வரமருளு மலைசிலையபார்
வதியுருகி வுனையணைய வளையளிடு
குறிபுனையு மடைவுதரு தனியொருவனே
பெண்ணாளும் வெண்பா
பெண்ணாளும் புங்கவனைப் பண்ணாண்டுப் பாடாது
கொண்ணாளுங் கூற்றற் கிலக்காமே - யண்ணா
மலையானே யேறூரு மாதேவா வெற்புச்
சிலையானே செய்யவனே யென்று
பொன்னாளும் வெண்பா
பொன்னாளு மேனியினள் புள்ளமரு மாற்கினியள்
பின்னாலே வந்தவளின் பேறுபெறச் - சொன்னாளு
மான்மகிமை விண்ணாளு மான்மகிமை செந்நாவின்
வான்மகிமை வந்தடையுந் தான்
சனி, 5 ஜூலை, 2025
வடிவுடைய கலி விருத்தம்
வடிவுடைய துடியிடையை யிடவுடைய விடைய
மடமடிய வடிநெடியு நடநடலை நடிய
குடமுடைய வடிவடிவ படிபடிய விடுவ
நுடமுடைய மிடிவிடிய விடமிடற விடுவே
விடமுடைய கலிவிருத்தம்
விடமுடைய படவரவு சடைமிடறு படர வடிவுடைய துடியிடைய ளிடமுடைய சுடர கடலெழு(ந்)த விடவிடரை மிடறட(ங்)கு சுடல திடமுடைய வடைவடைய நடியடியெம் விடையே
வெள்ளி, 4 ஜூலை, 2025
இசைத்த விருத்தம் (ஆண்டாள்)
இசைத்தவாயொ ராயிர மியற்றுபாட னேர்பெறும் நசைத்துநாத னாமகீத நாதமோது நாளுமே விசைத்துவந்து தேவனே விழைத்தயாவு மருளிட இசைத்துவந்த கோதையா யியைந்தியைந்து வாழ்ந்திடே
நாவினாலே விருத்தம்
நாவினாலெ நவின்றுரைக்க நாட்டநன்று கொள்ளினும் பாவினாலெ பாங்குரைக்கப் பாவியேற்கு மேலுமோ கூவினாலெ குற்றமற்ற சொற்கள்வந்து தித்திட மேவிநாளு மாசிதாவெந் தேவதேவ தேவனே
ஏழையேந்து சந்த விருத்தம் (திருவாழியாழ்வான் திருநட்சத்திரம்)
ஏழையேந்து தோயமலரொ டிலைகிடைக்க மகிழ்பவன்
ஊழையேந்தி வீறுமிடரை உயிரகற்று மாயவன்
தோழியேந்து மிடரகற்ற வாதுசூது செய்பவன்
நாழியேந்து தூயவாழி ஊழியூழி வாழியே
மெய்யழகு கலிவிருத்தம்
மெய்யழ கின்மயங்க மெய்யழகு தென்படா
மெய்யழ கின்மயக்கை மெய்யழகே துண்டாக்கு
மெய்யழ கின்மயக்கை மெய்யழகால் வென்றார்க்கு
மெய்யழ கேமயங்கி மெய்யழகென் றாமே
வெண்டளைகளாலான கலி விருத்தம்
வியாழன், 3 ஜூலை, 2025
அரியென்ற விருத்தம் (திருவிந்தளூர்)
அரியென்ற வார்த்தை யறியாத வாழ்க்கை
அழிவென்ற போக்கை யளியாதோ
அகமொன்று வாக்கை யணியான யாக்கை
அறனின்ற வாழ்க்கை அதனூடே
அழகென்ற கூற்றை யடைகின்ற பேற்றை
அறிகின்ற வாற்றை விளைவாகப்
புதன், 2 ஜூலை, 2025
தமிழ்ப்புலவர் பெண்பார்க்கும் வெண்பா
பெண்பார்க்கப் போனாலும் பீடு தமிழ்ப்புலவர்
கண்பார்க்குங் காட்சி கவிவடிவே - வெண்பாவா
விற்புருவம் வஞ்சியா வேல்விழிகள் செவ்விதழோ
கற்பனைக் கெட்டாக் கலி
பெண்பார்க்கும் (காமாட்சி வெண்பா)
பெண்பார்க்கும் போதெல்லாம் பின்னணியி னின்றவளே
கண்பார்க்குங் காட்சியே காமாட்சி - மண்பார்த்து
விண்பார்த்து அப்பானின் வெட்ட வெளிபார்த்து
மெண்பார்க்க வேலா துனை
செவ்வாயிற் செவ்வேள் (வெவ்வேறு யாப்பில்)
யாவுமான வேலவா - எம்
நோவுமாய வோடிவா
தாயுமான தூயவா - இம்
மாயைமாய வேல! வா
தேவசேனை நாயகா -இச்
சீவசேனை நாடிகா
காயமேவு நேயவா - எங்
காயமாய சேய! வா
(சிந்து)
செவ்வாய், 1 ஜூலை, 2025
அழியா அழகே வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
அழியா வழகே யளவில் லருளே விழியார் விருந்தே விமலா - வழியாய் வருவாய் வரதன் மருகா மனத்து ளொழியா வொளியா யொளிர்ந்து
அழியும் அழகில் கட்டளைக் கலித்துறை (செவ்வாயிற் செவ்வேள்)
அழியு மழகி லறிவை யிழந்த வறிவிலியாய்ப்
பழியுஞ் சுமந்து பலநாள் கழித்தேன் பழவினையாற்
பொழியுங் கருணை விழியா லணைக்கும் பொழுதுவர
வழியா வறிவை யழகா யளித்தா னரிமருகே
விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
இரு மாதர் இத்திருவைக் காண்கிறார்கள் அதன் தாக்கமாக தமக்கிடையே இது இராமர் தான் என்று தனது கருத்தை முன்வைக்கின்றார் முதற்பெண், இரண்டாம் பெண் இ...
-
கெண்டையார் கண்ணினா ணிலவும் - சடைக் கிண்டியார் கங்கையா ளுலவும் தொண்டையா லன்றடக் கிடவும் - மதித் துண்டையார் சீர்முடிக் கரவும் மண்டையான் மா...