புதன், 31 ஜூலை, 2024

கண்ணிலே பிறந்து கலி விருத்தம்

கண்ணிலே பிறந்துவந் தடங்குகின்ற காட்சிபோல்
மண்ணிலே பிறந்திருந் தடங்குகின்ற வாழ்க்கைபோல்
பண்ணுளே யிருந்துயர்ந் தடங்குகின்ற  பாட்டைப்போ
லெண்ணிலா பிறந்திருந் தடங்குமுன்னு ளீசனே  


செவ்வாய், 30 ஜூலை, 2024

சீறுமாறு கலி விருத்தம்

சீறுமாறு மாறுமாறு சீருதித்த நாதனை
யாறுமாற வன்புலாவ வாகமாவி யாழவே
கூறுமாறு வேதமோத கூற்றொடுங்கக் கூடுமே
யீறுமாறு வானுலாவ வேகமூர்த்தி கையிலே

ஆடி அழல் மீன் கலித்துறை

ஆடி யழன்மீ னறுமாதர் பாலூட்ட வான்றபுக
ழாடி யவனியை யாட்டு மமையப்ப ரீன்றதின  
மாடி மயின்மேல்  வரும்வடி வேலா வரத்தருவே
வாடி வதங்கிடு மன்பர் வளர வகுத்தருளே 

திங்கள், 29 ஜூலை, 2024

ஆடிக் கிருத்திகை வெண்பா

ஆடிக் கிருத்திகைக் காலயஞ் சென்றுவர
வாடித் துகளாகும் வாட்டமெலாம் - பாடுபுகழ்
நான்முகன் கையெழுத்தை நாதர்க் கழித்தருளு
மான்மருக னன்களிப்பான் வாழ்வு

#வெண்பா

பிறைசூடி பார்ப்பதி வெண்பா

பிறைசூடி பார்ப்பதி பிள்ளை ப்ரணவ
முறையோது மூப்பின் முருகா - குறைவாடும்
பேடி திருந்தப் புகழ்பாடும் பேறளி
யாடிக் கிருத்திகை யன்று
#வெண்பா

ஞாயிறு, 28 ஜூலை, 2024

மாற்றுதித்த மாருதி கலி விருத்தம்

மாற்றுதித்த மாருதியு மதுரபாடைச் செப்பிடக்
கூற்றொடுங்க முடிவெடுத்த குணவதியுங் கேட்டெழத்
தேற்றளித்த ராமன்விரன் மோதிரத்தைப் பெற்றபின்
மாற்றளித்த மாமணிக்கு வையமேழு மீடதோ

#கலிவிருத்தம்

பார்மகள் மீட்க கட்டளைக் கலித்துறை

பார்மகண் மீட்கப்  பழமறை காக்கப் பொதிமலிந்த
பார்மகண் மீட்கப் பகைவரை வீழ்த்தப் பிரிந்ததிரு
பார்மகண் மீட்கப் பழவரை தாங்கப் பிறப்பெடுத்த
தார்மகன் கேட்கத்  தமிழ்மறை செல்லுந் தலையெனவே

சனி, 27 ஜூலை, 2024

நாரணன் நாமமே கட்டளைக் கலித்துறை

நாரண னாமமே யாவியென் றோதுவர் நன்றிருக்க
நாரண னாமமே யாவியென் றோதுவர் நாணமிலா
நாரண னாமமே யாவியென் றோதுவர் நாமுழல
நாரண னாமமே யாவியென் றோதுவர் நன்றுரையே

-கட்டளைக்கலித்துறை 

வெள்ளி, 26 ஜூலை, 2024

வளசை வேங்கட சுப்பிரமணியர் கலி விருத்தம்

மெய்ம்மறந்து மெய்ம்மனுன்றன் மெய்யுகந்து கோவிலில்
பொய்ம்மறைந்து பூசைசெய்யும் போகமேக போகமே
உய்ம்மினென்று ளங்கவர்ந்து யிர்த்தெழுந்த மூர்த்திநீ
வைம்மலர்ந்து  வாழவைக்கும் வளசரத்தின் வேலனே

கலிவிருத்தம் 

திருவடி கலிவிருத்தம்

வானுலாவு மாநதிக்கு மாண்பளித்த மேன்மையுங்
கானுலாவு மாயமானைத் தேடியோடிச் சென்றதும்
பானிலாவின் பகையடங்கப் பைந்நடித்த பாதமே
கூனிலாவும் வாழ்வொடுங்கக் கூற்றினின்று காக்குமே
#கலிவிருத்தம்

வியாழன், 25 ஜூலை, 2024

எத்தனை ஈன்றிலை கலித்துறை

எத்தனை யீன்றிலை முத்தனை யென்றாலு மீன்றவளி
னத்தனை யின்பமு நித்தமும் பெற்றனண் முத்திதரும்
வித்தினை யன்பெனுஞ் சொத்தினா லாண்டனண் மீதவத்தாற்
சித்தினைப் பெற்றவர் வித்தையைப் பார்த்துத் திகைப்புறவே
-கட்டளைக் கலித்துறை

புதன், 24 ஜூலை, 2024

சேந்தன் விருத்தம்

சேந்தா குமரா முருகா மலைவாழ்
வேந்தா விழிவேற் குறமாதின்

காந்தா சமரா புரிவா ழரசே
காரார் மயிலே றுமைபாலா

சூழ்ந்தா நிரையார் குழலான் மருகா
வாழ்ந்தா லுனையே வுயிராகச்

சார்ந்தா ருனதா ரடியா லடைவார்
தேர்ந்தா யுளொடா றுயர்வீடே

எழு சீர் விருத்தம் 

செவ்வாயில் செவ்வேள் கலி விருத்தம்

மந்திபாயும் வெற்புடைத்த வேங்கடேசன் மருகனே
யிந்துசூடு மெந்தையீச னின்பமுத்து மைந்தனே
தந்திகொம்பை யன்புடைத்த தண்டையேந்து நாதனே
செந்தினாதன் சிந்தையாள சந்தமாள சிந்தையே

 

அரிதிரு மருகா கலி விருத்தம்

அரிதிரு மருகா வருளளி விலகா
குருவரை யிருகா குருகுக வருகா
சிரகிரி முருகா சுரகுல செருகா
வரவரை குழகா வணியயித் கரகா
#கலிவிருத்தம்

பாங்குதேசம் கலி விருத்தம்

பாங்குதேசம் பலவடைந்து பார்திரிந்த போதிலு
மாங்குறைந்தி ருந்துணர்ந்து பட்டறிந்த போதிலு
மோங்கிநின்று வானுமண்ணும் பாங்களந்த நாதனாம்
வேங்கடேசன் வெற்படைந்த மேன்மைதேடு மாவியே
#கலிவிருத்தம்

திங்கள், 22 ஜூலை, 2024

அரு வுரு கலி விருத்தம்

அருவுரு விருவே றருநிலை கருவே
கருமிட றுறவே கடுவிட மறவே
சிரமலர் நிலவே திருநதி யரவே
தருநிழற் குருவே தனையளி தருவே
#கலிவிருத்தம்

குரு பூர்ணிமா வெண்பா

குருவரு ளொன்றே திருவருள் கூட்டு
மிரவிரு ணீக்கு மிரவி - யருமருந்
தீதென  வீதா னிறைவன் முறையொழுகி
நீதா னிறைய மதி
#வெண்பா

கலியின் பெருவலி கலி விருத்தம்

கலியின் பெருவலீ களையு பெருவலீ
மலையி னொருவிலீ மதனை யுருவிலீ
கலையங் கரவிலீ கருணை கரவிலீ
வலையின் விடிதலீ வனிதை யகவிலீ
#கலிவிருத்தம்

மாதவன் மாலவன் கலி விருத்தம்

மாதவன் மாலவன்  வாசவன் வேதவன்
போதவன் தாதவன் தூதவன் வாதவன்
சேதவன் சாதவன் கோதிலா வாதவன்
ஓதவன் யாதவன் சூதவன் யாதுமே

#கலிவிருத்தம்

 

மதி கதிர் உருளா

மதிகதி ருருளா மணிரத வருளா
மதிகதி தெருளா மறைமுதற் பொருளா
சதிபதி வெருளா செவியொரு சுருளா
பதிதுதி யருளா பணிமதி மருளா
#கலிவிருத்தம்

பார்ப்பொடுக்கும் அன்னை அன்பு கலி விருத்தம்

பார்ப்பொடுக்கு மன்னையன்பு பார்கொடுக்க வீடதோ
வார்பரிக்கும் வாழ்வுகந்து போர்தொடுக்கு மூட(ர்)காள்
கூர்படுத்த  சிந்தைநன்று  சீர்படுத்த பண்பையும்
நேர்படுத்து மன்னவன்பி னீர்ப்பெடுத்து வாழியே  
#கலிவிருத்தம்

சனி, 20 ஜூலை, 2024

இலக்குமி கலி விருத்தம்

நீர்துயின்ற நேமியானி னெஞ்சகத்தில் வாழ்ந்திடு
நீர்பிறந்த நேரிலாளின் நின்றகோல தாளிணை
நீர்சொரிந்து பூசைசெய்யுங் கார்மலிந்த வானைதன்
பார்பிறந்த வாழ்வுயர்த்தும் பார்க்கவிந்த காட்சியே

#கலிவிருத்தம்

களிறு உரியனே கலி விருத்தம்

களிறி னுரியனே கழக முதல்வனே
யொளிறு மலையனே யுயிரி லுறைவனே
தளிர மடியனே தவசி முதல்வனே
வளர வறியனை வகைசெ யபயனே
#கலிவிருத்தம்

வெள்ளி, 19 ஜூலை, 2024

அறிதுயிலரியா வஞ்சித்துறை

அறிதுயிலரியா விரிசடையிறையா
குறமகளிறையா குழலழகுமையா
வறுவழியுனதா வருவுருவகையா
சிறைபிணிவிடியா பிறைமதியழகா   

கண்ணன் கலிவிருத்தம்

கள்வனென்று கோகுலத்திற் கண்ணனாக வந்தனை
புள்வனன்று வாய்பிளந்து பூதனையைச் செற்றனை
கொள்வனென்று போர்தொடுத்த கௌரவர்கண் மாய்த்தனை
யுள்வனென்று முன்னதாவுன் மேன்மையான கீர்த்தியே 

அடியர் அருகனே கலி விருத்தம்

அடியர ருகனே யமர ரரசனே
நெடியன் வலவனே நிகரில் புகழனே
துடியை யுடையனே துரிய நிலையனே
விடமு மமுதமே விமலன் பருகவே 

வியாழன், 18 ஜூலை, 2024

ஒருவரை சிலையா

ஒருவரை சிலையா வுருவரு நிலையா
புரமெரி நகையா புனலணி சிகையா
சிரமுறை பணியா சிதமுறை பணியா
குருவரு குமரா குணமளி பரமா  

தகனம் பயிலிடம் கலி விருத்தம்

தகனம் பயிலிடந் தளர்வில் புரிநடம்
ககனம் விரிசடை கனக வரையிடை
குகனங் கரிமுகன் குறையி லுமையுடன்
றிகழும் புரமெரி விமல னடிபணி
#கலிவிருத்தம்

 

புனல் அணி சடையன் கலி விருத்தம்

தனனன தனனா  

புனலணி சடையா பொடியணி விடையா
அனலுடை விழியா லழகனு(ம்) பொடியா
தனிநடை யரையா தவவுமை யடையா
பனியுறை மலையா பதமளி நிலையா
#கலிவிருத்தம்


பிறப்பிறப்பு வெண்பா

பிறப்பிறப்பைப் போக்கும் பிரானிடஞ் சென்று
பிறபிறப்பை வேண்டிப் பிறழா - திறப்பிறப்பைத்
தந்தருளுஞ் சீரலைவாய் நாதன் பதம்பணிந்து
வெந்தழல் வேலை விடு

செவ்வாய், 16 ஜூலை, 2024

செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

புதிதாய்ப் பிறந்து  புலமை பெறவே
கதிதா கருணைக் கடலே - நதிபோல்
கவிதை நயமாய் வரவே மதிதா
வவி(த்)தை யழிக்கு மழகு 

வேல் வெண்பா

வேன்முகங் கண்டுய்ய வீண்வினை வெந்துபோங்
கான்முகங் காதலித்த கந்தையன் பான்மையை
வான்முகம் வல்லரக்கர் மாள வமர்புரிந்த
கோன்முகங் கொண்டுவருங் கட்கு  

 

திங்கள், 15 ஜூலை, 2024

பெரியாழ்வார் வெண்பா

அம்மானுக் கம்மானா யம்மாவிற் கம்மாவாய்
பெம்மாற்குப் பல்லாண்டு பாட்டளித்தா  னம்மானை
மீதேறி  வீதியுலா வந்தகணம் விட்டுசித்தன்
வாதேறாய் வெற்றிநடை போட்டு 
 

திருவாழியாழ்வான் ஆசிரிய விருத்தம்

 

பகலையிரவுசெய் கொடிய முதலைகொல்
பதறியவுணனின் பொழிய குருதிசெய்
சிகரனுனிவிரல் பரம னணிவகை
சிதறவுடறலை யசுர னமுதுகொள்
பகருசிசுதலை பணிய குருசபை
பழையமலவகை யொழிய வுதவிசெய்
பகரதமிழிசை யுதிதி ருமழிசை
பழகுதமிழிசெய் திகிரி பணிவனே
அறு சீர் ஆசிரிய விருத்தம் 
 

ஞாயிறு, 14 ஜூலை, 2024

சுதர்ஷன விருத்தம்

 மலையெடுத்து மழைதடுத்த மாயவாயன் கையணி
        மதிமயக்கக் கதிர்மறைக்கு மாயமாக வாதினி
னிலையிழந்த வானைகாக்க நொடிவிரைந்து முதலையை
        நிலைகுலைத்த நாரணன்ற னிகரிலாத நேமியே
சிலைகுனித்த சீதைநாதன் சீர்த்திபேசும் பாணமாய்
      சினமெடுத்துத் தூண்பிறந்த சிங்கவேளி னுகிருமா
யலைகடைந்த மாயவன்றன் ரூபமான மூர்த்தியே
     யகமகிழ்ந்து வாழ்வுவீடு மளியளிப்பா யன்பர்க்கே

எண்சீர் ஆசிரிய விருத்தம் 

சனி, 13 ஜூலை, 2024

கருநீல வண்ணன் கட்டளைக் கலித்துறை

கருநீல வண்ணன் கடந்தேர வீடு கனிந்தளித்த
தருநீல வண்ணன் றருமந் தழைக்கத் தரணிவருஞ்
செருமாள வண்ணன் றிறமிகு பார்த்த னிலையுயர
குருநாத வண்ணன் கனியிலு முள்ளான் கருவெனவே
#கட்டளைக்கலித்துறை

புதன், 10 ஜூலை, 2024

திருவடிக் கலித்துறை

அருந்துங்கா றீண்ட வகலிகை பெற்றா ளழகுருவ
மருந்துங்கா றீண்ட வரச னடைந்தா னழியாப்புக
ழருந்துங்கா றீண்ட வடங்கா நதியு மகிலம்வர
வருந்துங்கா றீண்ட லடியா ரணிவா ரகத்தழகே

கட்டளைக் கலித்துறை 

செவ்வாய், 9 ஜூலை, 2024

செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

காவடி தூக்கக் கடும்பிணி போமுருகன்
காவடி தூக்கக் கடும்பிணி போமருகிச்
சேவடி தூக்கிச் சிரங்குளிர வைத்தெம்மைப்
பாவடி தூக்கப் பணி

கந்தன் கலி விருத்தம்

 

கருமநிறைவுற பலனுமுனதல வுணர வுரையுரைத்த

தருமநிலைபெற கொடுமைநிறைவுற வருவ னுகவுகமா

யருமைமருகனே சடையிலணிமதி புனையும் வெளிவிடையார்

பிரணவவுரையுரை குமரகுருபர தருக தமிழழகே  

திங்கள், 8 ஜூலை, 2024

தணிகையான் கலி விருத்தம்

 

சேவலங் கொடியோன் சினமடங்கு தணிகைமலைக்
காவலம் வரவே காத்தருள்வான் கந்தகுரு
பாவலம் பெறவே பல்லறிவும் போதுணர்த்தி
நாவலந் தருவா னற்றமிழ்வே ணாயகனே

புரி கலிப்பா

புரிவடிவப் புரிநின்ற புரிசங்குச் சக்கரத்தான்
வரிவடிவம் வருமுன்னே  கடல்கடைந்த திருவுடையா
னரிவடிவ மெடுத்தவுணன் மடியமர்த்தி யுடல்பிளந்தான்
பரிவடிவச் சிரங்கொண்டான் பதம்பணியக்   கவிவருமே  

தரவு கொச்சகக் #கலிப்பா

இறையிரை சிந்து

இறையின்றி யில்லையிரை -யற்றே
யிரையின்றி யில்லையிறை 

நிறையின்றி யில்லைகுறை - யற்றே
குறையின்றி யில்லைநிறை

கரையின்றி யில்லைகட - லற்றே
கடலின்றி யில்லைகரை

பரமின்றி யில்லைபணி - யற்றே
பணிவின்றி யில்லைபரம்

ஞாயிறு, 7 ஜூலை, 2024

இறை யிரை சிலேடை வெண்பா

சுட்டாவி தட்டிட்டுச் சாம்பாரிற் றோய்த்தெடுக்கச்
சட்டினிக்கும் பொங்கல் பொருதுவக்கு - மிட்டவுண
வாழ்ந்திருக்கப் பத்தனுளத் தாழ்குரலை மெய்ப்பிக்கப்
போழ்துவந் தூண்பிளந்தான் போக்கு

சனி, 6 ஜூலை, 2024

திருக்கடிகை விருத்தம்

 யோகம ருருவில் வீறிரு மரியை
    வேதனை தீர  வரம்வேண்டி
யோகிகள் பணியு மாளரி யிறையை
     யோரெழில் கடிகை மலையேறி

தேகமு மொளிரத் தீவினை யொழியச் 
    சீரக மிளிரத் தொழுவோர்க
டீவினை யெரிய வாலம ரடியன்
    ராமனி னாம நிதமேத்து

மாகம மறிய  வாரண  மறிய  
    வேரண முறையே பயின்றோனை
யாதவ னழகு வானுறை கனியா
    யாசையி லுணவே முயன்றோனை

மோகமு மொழிய மோனமு மொளிர
    மூதுல குறையு  முனிவோனின்  
காதலி லுருகிக் கடிமல ரணவித்  
     தாளிணை முதலிற் பணிவாரே 

குருவார குருமூர்த்தி வெண்பா

ஆறகத்தி னின்ற வருணா சலன்மைந்த
னூறகற்று நாம முணர்ந்துணர்ந் - தீறகத்தும்
பாரகத்தும் பேறளிக்கும் பால குருமூர்த்தி
யேரகத் தீசனை யேத்து

#வெண்பா 

 

புதன், 3 ஜூலை, 2024

வைணவ ஆசாரியர்கள் வெண்பா

நம்பெருமா ணம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
யெம்பெருமா னார்வழி யேற்றுயர்வா  - யம்புவியி
லிப்பிறவி யீடேற்ற வேறுண்டோ நல்லாறு
தப்பாமல் சார்வாய் பணிந்து
#வெண்பா

 

செவ்வாய், 2 ஜூலை, 2024

முருகன் கலிவிருத்தம்

 

தேரழுந்தப் பார்த்தனுயிர் போர்களத்திற் காத்தநல்
காரணிந்த நீலமேனி கண்ணனாரின் மருகநின்
சூரொடுங்க நீலமயில் சேவலென மாற்றிய
சீரணிந்த தார்மார்பன் சிந்தையாள சிந்தையே

ஆண்டாள் கலிவிருத்தம்

 பூவணிந்த பாவைக்குப் பல்வளைகள் சூட்டியே 

பாவுகந்து போற்றிசைக்கப் பாற்கடலிற் கேட்குமே 

காவுகந்த சுந்தரன்றன் காக்குமருட் கிட்டுமே

நாவுகந்து நல்லாண்டா ணாமமோது நெஞ்சமே
 
 

செவ்வாயிற் செவ்வேள் கட்டளைக் கலித்துறை

அம்மானை யேந்து மனல்விழி யார்தந்த வாறுமுகா
வம்மானைத் தேடி யருங்கான மோடு மணன்மருகா
வம்மானைத் தேடி யருங்கான மோடு மணவழகா
வம்மானைப் போலே யருங்காதற் கொண்டா யடியவர்க்கே

 

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...